சுபாஷிஸ் ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுபாஷிஸ் ராய் (Subashis Roy) வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் ஆவார்.இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித வேகப் பந்து வீச்சாளர் ஆவார். இவர் நவமபர் 29, 1988 இல் வங்காளதேசத்தில் பிறந்தார். இவர் வங்காளதேச அ அணி, 19 வயதிற்கு உடபட்ட வங்காளதேச அணி , சிட்டகொங் வைக்கிங்ஸ் , ராங்பூர் மாகாண அணி மற்றும் சிஹெட் மாகாண அணி அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

நவம்பர் 10, 2007 ஆம் ஆண்டில் சில்ஹெட் மாகாண அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். பரிசல் மாகாணத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் ஏழு இலக்குகளைக் கைப்பற்றினார்.[1] மேலும் 19 வயதிற்கு உட்பட்ட இலங்கைத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணாம் செய்து விளையாடியது. 19 வயதிற்கு உட்பட்ட வங்காளதேசத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடிய இவர் 5 இலக்குகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். 2016 ஆம் ஆண்டு நவம்பரில் ஆத்திரேலியாவில் பயிற்சி பெறுவதற்கு அனுப்பப்பட்ட 22 வீரர்களில் ஒருவராகத் தேர்வானார்.[2] 2018-19 ஆம் ஆண்டிற்கான வங்காளதேச பிரீமியர் லீக் தொடருக்கன போட்டியில் குல்னா டைடன்ஸ் அணி சார்பாக விளையாட உள்ளார்.[3]

சர்வதேச போட்டிகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

2017 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. சனவரி 12, இல் வெலிங்டன், நியூசிலாந்தில் நடைபெற்ற போட்டியில் இவர் அறிமுகமானார். இதன் முதல் ஆட்டப் பகுதியில் 26 ஓவர்கள் வீசி 89 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.இதில் 6 ஓவர்களை மெய்டனாக வீசினார். பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 5 ஓவர்கள் வீசி 32 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 1 ஓவரை மெய்டனாக வீசினார். பின் மட்டையாட்டத்தில் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 8 பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 7 இலக்குகளால் வெற்றி பெற்றது.[4]

2017 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.அக்டோபர் 6 இல் புளோம்ஃபோன்டைனில் நடைபெற்ற போட்டியின் இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப்போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 29 ஓவர்கள் வீசி 118 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.இதில் 3 ஓவர்களை மெய்டனாக வீசினார். பின் மட்டையாட்டத்தில் முதல் ஆட்டப் பகுதியில் 9 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 ஓட்டங்கள் எடுத்தார்.இரண்டாவது ஆட்டப்பகுதியில் 10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களை எடுத்தார்.இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு ஆட்டப் பகுதி மற்றும் 254 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[5]

ஒருநாள் போட்டிகள்[தொகு]

2016 ஆம் ஆண்டில் வங்காளதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. டிசம்பர் 29 இல் நெல்சனில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் 9 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 1 ஓட்டங்கள் எடுத்தார்.பின் பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 45 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார். 1 ஓவரை மெய்டனாக வீசினார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 67 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

சான்றுகள்[தொகு]

  1. "Barisal Division v Sylhet Division, 10–13 November 2007". ESPNCricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/314062.html. பார்த்த நாள்: 25 November 2015. 
  2. "Bangladesh include Mustafizur in preparatory squad". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/bangladesh/content/story/1064799.html. பார்த்த நாள்: 4 November 2016. 
  3. "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19". Bangladesh Cricket Board இம் மூலத்தில் இருந்து 28 மார்ச் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190328104022/http://www.tigercricket.com.bd/2018/10/29/full-players-list-of-the-teams-following-players-draft-of-bpl-t20-2018-19/. பார்த்த நாள்: 29 October 2018. 
  4. "subhashis roy 1 st match". http://www.espncricinfo.com/series/10680/scorecard/1019985/new-zealand-vs-bangladesh-1st-test-bangladesh-tour-of-new-zealand-2016-17. 
  5. "vs sa". http://www.espncricinfo.com/series/10904/scorecard/1075503/south-africa-vs-bangladesh-2nd-test-bangladesh-tour-of-sa-2017-18. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாஷிஸ்_ராய்&oldid=3526852" இருந்து மீள்விக்கப்பட்டது