சுந்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுந்தோ
Chhundo.jpg
சுந்தோ
மாற்றுப் பெயர்கள்சுண்டோ
பரிமாறப்படும் வெப்பநிலைதுணை உணவு
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிகுசராத்து
பரிமாறப்படும் வெப்பநிலைஅறை வெப்பநிலையில்
முக்கிய சேர்பொருட்கள்மாங்காய் & சர்க்கரை பாகு
வேறுபாடுகள்மிளகாய்த் தூள் கலந்தது
Cookbook: சுந்தோ  Media: சுந்தோ

சுந்தோ (Chhundo)(குஜராத்தி: છૂંદો, இந்தி: छुन्दो) என்பது ஒரு வகையான இந்திய ஊறுகாய் தயாரிப்பு ஆகும். இது துருவிய பச்சை மாங்காயுடன் சேர்க்கப்பட்ட மசாலாக் கலவையாகும். இது இந்தியத் துணைக் கண்டத்தின் உணவு வகைகளில் ரோட்டி, கறி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[1] இது பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் தயாரிக்கக்கூடிய ஒரு பொதுவானதாகும். சுந்தோ குறிப்பாக கத்தியவாடி உணவாகும்; ஆனால் குசராத்து முழுவதும் உண்ணப்படுகிறது.

மாம்பழம் பருவகால பழம் என்பதால் இந்தியாவில் கோடைக் காலத்தில் (ஏப்ரல் -ஜூலை) மட்டுமே அதிகமாகக் கிடைப்பதால், பெரும்பாலான மாங்காய் ஊறுகாய்கள் இந்த நேரத்தில் எண்ணெய் அல்லது சர்க்கரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு பின்னர் பெரிய கண்ணாடி கொள்கலன்களில் பாதுகாக்கப்படுகின்றன. இதனால் சுந்தோ மற்றும் பிற ஊறுகாய்கள் ஆண்டு முழுவதும் பயன்பாட்டிற்குக் கிடைக்கின்றன. [2]

சொற்பிறப்பியல்[தொகு]

சுந்தோ என்பதற்குக் குசராத்தி மொழியில் நசுக்கப்பட்டது என்று பொருள்.[3] இதன் தோற்றத்தின் ஆதாரங்கள் தெரியவில்லை என்றாலும், மற்ற பிரபலமான இந்திய ஊறுகாய்களுடன், சுந்தோவும் முரப்போவும் இரண்டு வகையான மாம்பழ சுவைகள் கொண்ட குசராத்தி உணவுகளில் தினமும் உட்கொள்ளப்படுகின்றன.[4]

வரலாறு[தொகு]

சுந்தோ குசராத்தின் கத்தியவர் பகுதியில் தோன்றியதாக நம்பப்படுகிறது.[சான்று தேவை]

தயாரிப்பு[தொகு]

ஊறுகாய் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்களுடன் சுந்தோ

முன்னர் குறிப்பிட்டபடி, சுந்தோவின் மிகவும் பிரபலமான வகை அரைத்த மாம்பழங்களுடன் தயாரிக்கப்படுகிறது. அன்னாசி சுந்தோ பழங்கள் கொண்டு தயாரிக்கப்படும் மற்ற ஊறுகாயாகும்.

ஊட்டச்சத்து[தொகு]

ஒரு நேரச் சேவை 20 கிராம்கள் (0.71 oz) சுந்தோவில் 61 கலோரிகள், 0 கொழுப்பு அல்லது கொல்ஸ்டிரால், 124 மில்லிகிராம்கள் (1.91 gr) சோடியம் மற்றும் 15 கிராம்கள் (0.53 oz) கார்போவைதரேட்டு அடங்கியுள்ளது. இது சர்க்கரை பாகில் தயாரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுவதால், இதன் முக்கிய ஆற்றல் கூறு சர்க்கரை ஆகும். இதில் உயிர்ச்சத்து சி மற்றும் அடங்கியுள்ளது.[5]

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ahmedabad City, Ahmedabad History, Ahmedabad Attractions, Ahmedabad Accommodation பரணிடப்பட்டது ஆகத்து 17, 2011 at the வந்தவழி இயந்திரம்
  2. "Hemant'S Cookery Corner". மூல முகவரியிலிருந்து 2012-04-14 அன்று பரணிடப்பட்டது.
  3. "છૂંદવું" in Gujarati To English Dictionary | Online Dictionary | Free Dictionary - Gujaratilexicon
  4. Pickle recipes : SBS Food
  5. "Calories in Durbar - Chhundo | Nutrition and Health Facts". மூல முகவரியிலிருந்து 2014-04-13 அன்று பரணிடப்பட்டது.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தோ&oldid=3299541" இருந்து மீள்விக்கப்பட்டது