சிரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிறு நீல மீன்கொத்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிரல்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கோராசீபோர்மெஸ்
குடும்பம்: Alcedinidae
பேரினம்: Alcedo
இனம்: A. atthis
இருசொற் பெயரீடு
Alcedo atthis
(L., 1758)
     Breeding range
     Resident all year-round
     Non-breeding range

சிரல் எனும் சிறு நீல மீன்கொத்தி (Alcedo atthis) என்பது மீன்கொத்தி இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது ஐரோவாசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா முழுவதும் பரவலாக உள்ளது. இதில் ஏழு கிளையினங்கள் உள்ளன.

விளக்கம்[தொகு]

இப்பறவை சிட்டுக்குருவியைவிட சற்று பெரியது. உடலின் மேல்பாகம் நீலமும் ,பச்சையும் கலந்த நிறமுடையது. அடர்த்தியான குட்டை வாலும், நீண்ட நேரானகூர் அலகும் கொண்டது. இப்பறவை கிணறு, ஆற்றங்கரை போன்ற நீர் நிலைகளில் தனியாக கல்லின் மீதோ அல்லது தொங்கும் மரக் கிளை மீதோ அமர்ந்திருக்கும். நீருக்கு மேலே சிறகடித்து பறந்துகொண்டு திடீரென்று நீருக்குள் பாய்து இரையை கௌவிக்கொண்டு பறக்கும்.

புவியியல் மாறுபாடு[தொகு]

இதில் ஏழு கிளையினங்கள் உள்ளன. அவை அவற்றின் மேல் பகுதிகளின் சாயலில் இருந்தும் அடிப்பகுதியின் செம்பழுப்பு நிறத்தின் தீவிரம் போன்றவற்றில் ஓரளவு மாறுபாடு கொண்டவையாக உள்ளன. கிளையினங்கள் தங்கள் நிறத்தில் 10% வரை அளவு மாறுபடுகின்றன. வாலசுக் கோட்டிற்கு தெற்கே வசிக்கும் கிளையினங்கள் நீல நிற மேல் பகுதிகளையும், ஓரளவு நீல நிற காது திட்டுகளையும் கொண்டுள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரல்&oldid=3786334" இருந்து மீள்விக்கப்பட்டது