ஆன் பொலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14: வரிசை 14:
|father = தோமசு பொலின், வில்ட்சயரின் முதலாம் கோமகன்
|father = தோமசு பொலின், வில்ட்சயரின் முதலாம் கோமகன்
|mother = எலிசபெத் அவார்டு
|mother = எலிசபெத் அவார்டு
|birth_date = {{circa}} 1501–1505<ref>{{cite web |title=The Offspring of Thomas and Elizabeth Boleyn|url= https://www.tudorsociety.com/the-offspring-of-thomas-and-elizabeth-boleyn-by-conor-byrne/ |website=The Tudor Society|access-date=22 October 2021}}</ref><ref>{{cite web |title=Letters and papers, foreign and domestic, of the reign of Henry VIII|url=https://archive.org/stream/lettersandpaper02gairgoog/lettersandpaper02gairgoog_djvu.txt |website=Internet Archive|access-date=21 October 2021}}</ref><ref>Ives, pg. 3.</ref>
|birth_date = {{circa}} 1501–1507<ref>{{cite web |title=The Offspring of Thomas and Elizabeth Boleyn|url= https://www.tudorsociety.com/the-offspring-of-thomas-and-elizabeth-boleyn-by-conor-byrne/ |website=The Tudor Society|access-date=22 October 2021}}</ref><ref>{{cite web |title=Letters and papers, foreign and domestic, of the reign of Henry VIII|url=https://archive.org/stream/lettersandpaper02gairgoog/lettersandpaper02gairgoog_djvu.txt |website=Internet Archive|access-date=21 October 2021}}</ref><ref>Ives, pg. 3.</ref>
|birth_place= பிளிக்ளிங் மாளிகை, நோர்பொக், [[இங்கிலாந்து]]
|birth_place= பிளிக்ளிங் மாளிகை, நோர்பொக், [[இங்கிலாந்து]]
|death_date = {{Death date|1536|5|19|df=yes}} (அகவை 30–35)
|death_date = {{Death date|1536|5|19|df=yes}} (அகவை 28–35)
|death_place = [[இலண்டன் கோபுரம்]], [[இலண்டன்]], இங்கிலாந்து
|death_place = [[இலண்டன் கோபுரம்]], [[இலண்டன்]], இங்கிலாந்து
|burial_date = 19 மே 1536
|burial_date = 19 மே 1536

13:06, 31 அக்டோபர் 2022 இல் நிலவும் திருத்தம்

ஆன் பொலின்
Anne Boleyn
பெம்புரோக்கின் கோமகள்
அண். 1550 இல் உருவாக்கப்பட்ட ஆனின் ஓவியப்படம்[1][2]
இங்கிலாந்தின் அரசி
Tenure28 மே 1533 – 17 மே 1536
முடிசூட்டுதல்1 சூன் 1533
பிறப்புஅண். 1501–1507[3][4][5]
பிளிக்ளிங் மாளிகை, நோர்பொக், இங்கிலாந்து
இறப்பு(1536-05-19)19 மே 1536 (அகவை 28–35)
இலண்டன் கோபுரம், இலண்டன், இங்கிலாந்து
புதைத்த இடம்19 மே 1536
புனித பீட்டர் தேவாலயம், இலண்டன் கோபுரம், இலண்டன்
துணைவர்இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (25 சனவரி 1533 - 17 மே 1536, செல்.)
குழந்தைகளின்
பெயர்கள்
இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்
குடும்பம்பொலின்
தந்தைதோமசு பொலின், வில்ட்சயரின் முதலாம் கோமகன்
தாய்எலிசபெத் அவார்டு
கையொப்பம்ஆன் பொலின் Anne Boleyn's signature

ஆன் பொலின் (Anne Boleyn, 1501 அல்லது 1507 – 19 மே 1536), இங்கிலாந்தின் அரசியாக 1533-யிலிருந்து 1536 வரை ஆட்சி புரிந்தார். இவர் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி அரசரின் இரண்டாம் மனைவி மட்டுமல்லாமல் தனது உரிமையிலே பெம்புரூக் நகரின் க்ஷத்திரபதி ஆவார். இவரின் திருமணமும் பின்னர் இவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையும், இங்கிலாந்து மத சீர்திருத்தத்தின் தொடக்கமாக அமைந்த அரசியல், மதக் குழப்பங்களில் இவரை முன்னிலைப்படுத்தின.

தாமஸ் பொலின் மற்றும் அவரது மனைவி எலிஸபத் ஹவார்டின் மகள், இவர் ஹென்றியின் கடைசி மனைவி கத்தரீன் பாரைவிட உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் பிரான்ஸிலும் நெதர்லாந்திலும் கல்வி பெற்றார். 1522-ல் இவர் இங்கிலாந்துக்கு திரும்பினார்.

1525ல் ஆனின் மேல் ஹென்றிக்கு விருப்பம் ஏற்பட்டது. ஆனால் ஆன் ஹென்றியின் விருப்பத்துக்கு இணங்கவில்லை, தனது அக்காவான மேரி பொலினைப் போல ஆசை நாயகியாக ஆக மறுத்தார். முதல் மனைவியான ஆரகானின் கத்தரீனிடம் இருந்து விவாகரத்து பெற ஹென்றியின் ஆவல் அதிகரித்தது. அதன் மூலம் ஆனை திருமணம் செய்யத் தடை இருக்காது என அவர் எண்ணினார்.

ஆனால் பாப்பரசர் ஏழாம் கிளமன்ட், ஹென்றிக்கு மணவிலக்கு அளிக்க உறுதியாக மறுத்தார். இதுவே இங்கிலாந்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகார வீழ்ச்சியின் தொடக்கமாக அமைந்தது.

கர்தினால் பேராயர் தாமஸ் உவால்ஸி பணி நீக்கம் செய்யபட்டார். ஆனின் தூண்டுதலினாலேயே இது நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. அதன் பின், பொலினின் குடும்ப மதகுருவான தாமஸ் கிரான்மர் கன்டர்பரி பேராயராகப் பொறுப்பேற்றார். ஜனவரி 25 1533யில் ஹென்றி ஆனை மணம் புரிந்தார். முதலில் இத்திருமணம் செல்லாது என அறிவித்த கிரான்மர், ஐந்து நாட்களின் பின் தனது முடிவை மாற்றித் திருமணம் செல்லும் என அறிவித்தார். இதனால் பாப்பரசர், ஹென்றியையும் கிரான்மரையும் கத்தோலிக்கத்தில் இருந்து விலக்கி வைத்தார். இது இங்கிலாந்து திருச்சபைக்கும், ரோமுக்கும் இடையில் பிளவு ஏற்படக் காரணமானது. இங்கிலாந்து திருச்சபையும் அரசனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

1533 ஜூன் 1ம் திகதி, ஆன் இங்கிலாந்து அரசியாக முடிசூட்டப்பட்டார். செப்டெம்பர் 7ம் திகதி, பின்னாளில் இங்கிலாந்தின் அரசியாகிய முதலாம் எலிசபெத்தை ஆன் பெற்றெடுத்தார். ஆன் ஆண் வாரிசைப் பெற்றுத் தரவில்லை என்ற குறை ஹென்றிக்கு இருந்தது. எனினும் ஹென்றி நம்பிக்கை இழக்கவில்லை, தான் எலிஸபத்தின் மீது அன்பு வைத்திருப்பதாகவும் ஒரு ஆண் குழந்தையும் பிறக்கும் எனவும் ஹென்றி திடமாக நம்பியிருந்தார். ஆனால், இதன் பின் மூன்று தடவைகள் கருச்சிதைவு ஏற்பட்டது, மார்ச் 1536 அளவில் ஹென்றி ஜேன் ஸீமோருடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினார்.

ஏப்ரல் - மே 1536 இல் ஹென்றி ஆன் மீது இராஜத் துரோகக் குற்றம் சாட்டி விசாரிக்கப் பணித்தார். விசாரணையில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆனுக்கு மே 19 ஆம் திகதி தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. இவர் மேல் சாட்டப்பட்ட குற்றங்களான திருமணத்துக்குப் புறம்பான பாலியல் தொடர்பு வைத்திருந்தமை, தனது சகோதரனான ஜார்ஜ் பொலினுடன் முறையற்ற பாலியல் தொடர்பு கொண்டிருந்தமை போன்றவற்றுக்குச் சான்றுகள் இல்லை என வரலாற்றாளர்கள் கூறுகின்றனர். பின்னாளில் ஆனின் மகளான முதலாம் எலிசபெத் அரசியான பின்னர், ஆனை இங்கிலாந்தின் மதச் சீர்திருத்தத்தின் வீராங்கனை ஆகவும், தியாகியாகவும் ஏற்றுக்கொண்டு மதிப்பளித்தனர்.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆன் பொலின்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Doubts raised over Anne Boleyn portraits". Hever Castle. 24 February 2015. பார்க்கப்பட்ட நாள் 19 June 2021.
  2. Spender, Anna. "The many faces of Anne Boleyn" (PDF). Hever Castle. பார்க்கப்பட்ட நாள் 19 June 2021.
  3. "The Offspring of Thomas and Elizabeth Boleyn". The Tudor Society. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
  4. "Letters and papers, foreign and domestic, of the reign of Henry VIII". Internet Archive. பார்க்கப்பட்ட நாள் 21 October 2021.
  5. Ives, pg. 3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்_பொலின்&oldid=3595826" இலிருந்து மீள்விக்கப்பட்டது