கச்சு உழுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Common guitarfish" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:25, 16 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

கச்சு உழுவை அல்லது கச்சழுவை (Rhinobatos rhinobatos) என்பது உழுவைகுடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை குருத்தெலும்பு மீன் ஆகும். இது கிழக்கு அத்திலாந்திக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல்களில் காணப்படுகிறது. இது கடலடியில் வாழும் மீனாகும். இது ஓடுடைய கணுக்காலிகள், பிற முதுகெலும்பற்றவைகள், மீன்களை உணவாக கொள்ளும். இதன் உயிர்வாழ்க்கையானது இழுவை மற்றும் பிற மீன்பிடி முறைகளால் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. இந்த மீன்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகத் தோன்றுகிறது. மேலும் இவை இதன் வரலாற்று எல்லைப் பகுதிகளிலிருந்து மறைந்துவிட்டன.

விளக்கம்

கச்சு உழுவை மீன்கள் சுமார் 147 cm (58 அங்) நீளம் வரை வளரக்கூடியன. ஆனால் பொதுவாக இவை சுமார் 80 cm (30 அங்) நீளத்திலேயே காணப்படுகின்றன. இவற்றின் மேல் பகுதி சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும், அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கும். [1] இது தோற்றத்தில் பிளாக்சின் கிட்டார்ஃபிஷ் உழுவை ( ரைனோபாடோஸ் செமிகுலஸ் ) மீனை மிகவும் ஒத்து இருக்கிறது. பொதுவாக இது சிறிய மீனான இது பெரிய கண்களை உடையது. இதன் முகத்தின் நுனியானது v வடிவ ஒளி ஊடுருவும் மடல் பகுதியாக உள்ளது. [2]

பரவல்

கச்சு உழுவை மீன்கள் மேற்கு வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் காணப்படுகிறது. மேலும் இது வாழும் பகுதியானது பிஸ்கே விரிகுடாவின் தெற்கு முனையில் இருந்து அங்கோலா வரை, மத்திய தரைக்கடல் கடல் உட்பட பகுதிகள் வரை நீண்டுள்ளது. [3] இது கடலடியில் மெதுவாக சுற்றி வருகிறது. சில நேரங்களில் மணல் அல்லது சேற்றில் தன்னை புதைந்து கொண்டு ஓய்வெடுக்கும். [1]

சூழலியல்

கச்சு உழுவை ஒரு ஒளியிலி மண்டல மீன் ஆகும். கடல் தரையில் மணல் அல்லது சேற்று கடற்பரப்புக்கு சற்று மேலே பயணிக்கிறது. அங்கே இது ஓடுடைய கணுக்காலிகள் பிற முதுகெலும்பிலிகள், மீன்களைத் தேடுகிறது. இது ஒரு உள்பொரி முட்டை கொண்ட மீன் ஆகும். [3] கருவில் உள்ள இளம் உயிரிக்கு முட்டையின் மஞ்சள் கரு உணவாக பயன்படுகிறது. கருவிற்கு தேவையான வாயு பரிமாற்றம் தாயின் உடல் வழங்க செய்கிறது. [1]

நிலை

கச்சு உழுவை மீன்கள் கடற்கரைக்கு அருகில் வாழ்கிறன. இவை ஆழமற்ற நீரில் இனப்பெருக்கம் செய்கிறன. இதனால் இவை பாதிக்கப்புக்கு ஆளாகும் நிலையை அடைகின்றன. மேலும் இவை பிற மீன்களை பிடிக்கும்போது, அவற்றுடன் தேவையின்றி பிடிபட்டு உயிரிழக்கின்றன. வடக்கு மத்திய தரைக்கடலில், பலெர்மோ போன்ற மீன்பிடி துறைமுகங்களில் பிளாக்சின் கிதார்ஃபிஷ் உழுவை ( ரைனோபாடோஸ் செமிகுலஸ் ) மீன்களுடன் சேர்ந்து பிடிப்பட்டன. ஆனால் அந்த இரண்டு மீன்களும் இப்போது அங்கு காணப்படவில்லை. அநேகமாக அந்த பகுதியில் இவை அழிந்துபோயிருக்கலாம். இவை பலேரிக் தீவுகள் பகுதியிலும் காணப்படாது போயுள்ளன. மேற்கு ஆப்பிரிக்காவின் கடலோரப் பகுதிகளில், இவை சர்வதேச இறால் இழுவைப் படகுகளால் கடற்பரப்பில் இழுத்துச் செல்லப்படுகின்றன. அத்துடன் உள்ளூர் நாட்டுமீனவர்களால் கில் வலை என்னும் வலையால் பிடிக்கப்படுகிறது. இதன் இறைச்சி உப்பிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் துடுப்புகள் ஆசியாவுக்கு விற்கப்படலாம். தெற்கு மத்திய தரைக்கடலில் இது பாதுகாப்பாக இருக்கலாம், ஏனென்றால் அங்கு மீன்பிடித்தல் குறைவாக உள்ளது. என்றாலும் அங்கும் சில நேரங்களில் சுரண்டப்படுகிறது. ஆனால் அங்கும் கூட, பெரும்பாலான மீன்கள் முதிர்ச்சியடையாதவையாக உள்ளன. மீன்களின் எதிர்காலத்துக்கும், மீன்வளம் நிலையானதாக இருக்கவும், வயது வந்த மீன்கள் முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் செய்ய எந்த தடங்கலும் இருக்கக்கூடாது. இந்த மீன்களுக்கான சிறப்பு பாதுகாப்புத் திட்டம் எதுவும் இல்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் இந்த மீனினத்தை " மிக அருகிய இனம் " என்று வரையரைத்துள்ளது. [3]

குறிப்புகள்

  1. 1.0 1.1 1.2 "Rhinobatos rhinobatos (Linnaeus, 1758): Common guitarfish". FishBase. பார்க்கப்பட்ட நாள் 16 January 2016. பிழை காட்டு: Invalid <ref> tag; name "FishBase" defined multiple times with different content
  2. "Common guitarfish (Rhinobates rhinobatos)". Fishes of the NE Atlantic and the Mediterranean. Marine Species Identification Portal. பார்க்கப்பட்ட நாள் 17 January 2016.
  3. 3.0 3.1 3.2 Jabado, R.W., Pacoureau, N., Diop, M., Dia, M., Ba, A., Williams, A.B., Dossa, J., Badji, L., Seidu, I., Chartrain, E., Leurs, G.H.L., Tamo, A., Porriños, G., VanderWright, W.J., Derrick, D., Doherty, P., Soares, A., De Bruyne, G. & Metcalfe, K.; et al. (2021). "Rhinobatos rhinobatos". IUCN Red List of Threatened Species. 2021: e.T63131A124461877. doi:10.2305/IUCN.UK.2021-1.RLTS.T63131A124461877.en.CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சு_உழுவை&oldid=3299372" இலிருந்து மீள்விக்கப்பட்டது