"இரா. இராகவையங்கார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
275 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
 
[[1901]] – செப்டம்பர் – 14ஆம் நாள், பாலவநத்தம் நிலக்கிழார் [[பாண்டித்துரைத் தேவர்|பாண்டித்துரைத் தேவரின்]] முயற்சியால் பாசுகர சேதுபதியின் ஆதரவோடு, [[மதுரைத் தமிழ்ச் சங்கம்]] நிறுவப்பட்டது. இச்சங்கத்திலிருந்து தமிழ்ப்பணி புரிய இரா. இராகவையங்காரை பாசுகரசேதுபதி அனுப்பி வைத்தார். அச்சங்கத்தின் நூற்பதிப்பு, ஆராய்ச்சி ஆகிய துறைகளின் தலைவராக இரா. இராகவையங்கார் பொறுப்பேற்றார். அப்பொழுது பல இடங்களுக்கும் சென்று பழஞ்சுவடிகளைத் திரட்டினார். அவற்றை மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பாண்டியன் நூலகத்தில் தொகுத்து வைத்தார்.
 
அச்சங்கத்தின் சார்பில் 1902 – திசம்பர் 7ஆம் நாள் செந்தமிழ் இதழ் தொடங்கப்பட்டது.<ref name=mts>{{Cite web |url=http://maduraitamilsangam.com/collegehistorytamil.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2012-08-27 |archive-date=2011-12-26 |archive-url=https://web.archive.org/web/20111226142243/http://maduraitamilsangam.com/collegehistorytamil.html |dead-url=dead }}</ref> அந்த இதழின் முதலாவது ஆசிரியராக இரா. இராகவையங்கார் பொறுப்பேற்றார். அவ்விதழில் ஆராய்ச்சி என்னும் தலைப்பில் தமிழிலக்கண, இலக்கிய ஆய்வுரைகளை எழுதி வந்தார்.<ref name=shan/> இந்த ஆய்வுரைகளின் முடிவுகள் சில கருத்து வேற்றுமைக்கு உரியவனவாக இருப்பினும் தமிழாய்வுக்கு இரா. இராகவையங்கார் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.<ref name=mks>முத்துகுமாரசுவாமி, இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர், சென்னை, 1968</ref> ஏனென்றால், இவருடைய ஆழ்ந்த கல்வியும் நுண்ணிய ஆராய்ச்சித் திறனும் பொருள்களை முறைப்படப் பாகுபடுத்திப் பார்த்து விளக்கும் பேராற்றலும் இவர் எழுதிய கட்டுரைகளில் புலனாகின்றன.<ref name=shan/>
 
1906ஆம் ஆண்டு<ref name=tm>மு. இராகவையங்கார், தமிழ்மணி – தினமணி, 2008</ref>, இரா. இராகவையங்கார் தான் வகித்து வந்த செந்தமிழ் இதழின் ஆசிரியப் பொறுப்பை தன் மாமா மகனான மு. இராகவையங்காரிடம் ஒப்படைத்தார். அங்கிருந்து தேவகோட்டைக்குச் சென்று, மெ. அரு. இராமநாதன் செட்டியார் என்பவரின் ஆதரவில் சிலகாலம் தங்கியிருந்தார். 1910ஆம் ஆண்டில் மீண்டும் இராமநாதபுரத்திற்குத் திரும்பி, இராசராசேசுவர சேதுபதியின் அவையில் அரசவைப் புலவராக இருந்தார்.
50,162

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3234368" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி