யாழ்ப்பாண அரசின் சிதைவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6: வரிசை 6:
[[ஆரியச் சக்கரவர்த்திகள்|ஆரியச் சக்கரவர்த்திகளின்]] அரண்மனை போர்த்துக்கேயர் [[யாழ்ப்பாண அரசை போர்த்துக்கேயர் வெற்றி கொள்ளல்|யாழ்ப்பாண அரசை வெற்றி கொள்ளும் வரை]] முக்கியமாக விளங்கியது.<ref>Abeysinghe, T ''Jaffna Under the Portuguese'', p.4</ref>
[[ஆரியச் சக்கரவர்த்திகள்|ஆரியச் சக்கரவர்த்திகளின்]] அரண்மனை போர்த்துக்கேயர் [[யாழ்ப்பாண அரசை போர்த்துக்கேயர் வெற்றி கொள்ளல்|யாழ்ப்பாண அரசை வெற்றி கொள்ளும் வரை]] முக்கியமாக விளங்கியது.<ref>Abeysinghe, T ''Jaffna Under the Portuguese'', p.4</ref>


அரண்மனை, பூந்தோட்டம் ஆகியவற்றை முதலாம் ஆரியச் சக்கரவர்த்தியான [[கூழங்கைச் சக்கரவர்த்தி]] அமைப்பித்ததாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது.
அரண்மனை, பூந்தோட்டம் ஆகியவற்றை முதலாம் ஆரியச் சக்கரவர்த்தியான [[கூழங்கைச் சக்கரவர்த்தி]] அமைப்பித்ததாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. இது 13 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண அரசு உருவானபோது இடம்பெற்றது என்பது சில ஆய்வாளர்களது கருத்து. வேறொரு சாரார், கோட்டே இராச்சியத்தின் பிரதிநிதியாக யாழ்ப்பாணத்தை 1450 ஆம் ஆண்டில் கைப்பற்றிய சண்பகப் பெருமாள் என்பவனே நல்லூர் நகரத்தையும் அரண்மனையையும் அமைத்தான் என்பர்.


== அமைப்பு ==
== அமைப்பு ==

18:39, 2 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

மந்திரிமனை சிதைவுகள்

யாழ்ப்பாண அரசின் கட்டட இடிபாட்டு சிதைவுகள் அல்லது யாழ்ப்பாண அரசின் சிதைவுகள் என்பது தற்போது எஞ்சியுள்ள யாழ்ப்பாண அரசுடன் தொடர்புபட்ட கட்டுமானங்களைக் குறிப்பிடுகிறது. இவை நல்லூரில் காணப்படுகின்றன.

வரலாறு

சங்கிலித்தோப்பு வளைவு

ஆரியச் சக்கரவர்த்திகளின் அரண்மனை போர்த்துக்கேயர் யாழ்ப்பாண அரசை வெற்றி கொள்ளும் வரை முக்கியமாக விளங்கியது.[1]

அரண்மனை, பூந்தோட்டம் ஆகியவற்றை முதலாம் ஆரியச் சக்கரவர்த்தியான கூழங்கைச் சக்கரவர்த்தி அமைப்பித்ததாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. இது 13 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண அரசு உருவானபோது இடம்பெற்றது என்பது சில ஆய்வாளர்களது கருத்து. வேறொரு சாரார், கோட்டே இராச்சியத்தின் பிரதிநிதியாக யாழ்ப்பாணத்தை 1450 ஆம் ஆண்டில் கைப்பற்றிய சண்பகப் பெருமாள் என்பவனே நல்லூர் நகரத்தையும் அரண்மனையையும் அமைத்தான் என்பர்.

அமைப்பு

தென் இந்திய அமைப்புக்கு ஏற்ப நகர் அமைக்கப்பட்டது. இரு பிரதான வீதிகளும், நான்கு நுளைவு வாயில்களுடன் கூடிய கோயில்களும் அமைக்கப்பட்டிருந்தன. நகர மத்தியில் முத்திரைச் சந்தை அமைக்கப்பட்டது. சதுர வடிவில், அரண்மிக்க நகர் அமைந்திருந்தது. பழைய நல்லூர் கந்தசுவாமி கோயில் அரண்மனையின் பாதுகாப்பு அரணாகக் காணப்பட்டது. அத்துடன் அங்கு அரண்மனை, பூந்தோட்டம், குளம், அரச கட்டடங்களுடன் பிற கட்டடங்களும் அமைக்கப்பட்டிருந்தன.[2][3]

நகர் பாதுகாப்பிற்காக கொழும்புத்துறை, கோப்பாய், பண்ணைத்துறை ஆகிய இடங்களில் சிறு கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.

Yamuna Eri in panorama view
Π வடிவ யமுனா ஏரி

அழிவு

போர்த்துக்கேயரின் முதலாவது படையெடுப்பின்போது முதலாம் சங்கிலியினால் அரண்மனை தீவைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்த போர்களினால் அது மேலும் அழிவிற்குள்ளானது. போர்த்துக்கேய, இடச்சு, பிரித்தானிய படையெடுப்புக்களினால் அரண்மனை, கோயில்கள், கட்டடங்கள், கட்டமைப்புக்கள் ஆகியன அழிவுற்றன.

தற்போதைய நிலையும் இடுபாடுகளின் எச்சங்களும்

சங்கிலித்தோப்பு அத்திவாரம்

ஆயினும் சில கட்டட இடுபாடுகளின் எச்சங்கள் சிலவற்றை இன்றும் காணக்கூடியதாகவுள்ளது.[4][5] இவை தற்போது இலங்கை அரசாங்கத்தினால் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் இடங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. [6] அவையாவன:

நகர பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட கோட்டைகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. கோப்பாயில் சிறிதளவு எச்சம் அண்மைய காலம் வரை இருந்ததாக் கூறப்பட்டது. ஏனையவற்றின் எச்சங்கள் எதுவுமே இல்லை.

தற்போது அமைந்துள்ள கோயில்கள் புதிய இடங்களில் பின்பு புதிதாகக் கட்டப்பட்டன. நல்லூர் சட்டநாதர் கோயில், வெயிலுகந்த விநாயகர் ஆலயம் என்பன ஏறக்குறைய ஒரே இடத்தில் மீளமைக்கப்பட்டடிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

அரண்மணை உட்பட முக்கிய கட்டமைப்புக்கள் எவையும் தற்போது இல்லை.

உசாத்துணை

  1. Abeysinghe, T Jaffna Under the Portuguese, p.4
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; A handbook to he Jaffna Peninsula என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. "Nallur Rajadhani: City Layout". V.N.Giritharan. பார்க்கப்பட்ட நாள் 2007-12-02.
  4. "Places of interest in Jaffna". Urlaub-sr-lanka.info. 2013-01-19. பார்க்கப்பட்ட நாள் 2013-11-28.
  5. "Rise of ruins from ravages of war". Sundaytimes.lk. பார்க்கப்பட்ட நாள் 2013-11-28.
  6. Gazette 1486 2007, ப. 129.