"அமெரிக்க உள்நாட்டுப் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,347 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 108 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
|}
 
'''அமெரிக்க உள்நாட்டுப் போர்''' (1861–1865) அல்லது மாநிலங்களுக்கு இடையேயான போர் எனப்படும் இப் போர், [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும்]], தென் மாநிலங்களில், [[ஜெபர்சன் டேவிஸ்]] என்பவர் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு]]க்கும் இடையில் நடைபெற்ற ஒரு [[உள்நாட்டுப் போர்]] ஆகும். ஐக்கிய அமெரிக்க நாடுகள் எல்லாச் [[சுதந்திர மாநிலம் (ஐக்கிய அமெரிக்கா)|சுதந்திர மாநிலங்களையும்]], அடிமை முறை நிலவிய ஐந்து எல்லை மாநிலங்களையும் உள்ளடக்கியது. இது [[ஆபிரகாம் லிங்கன்|ஆபிரகாம் லிங்கனினதும்]] அவர் சார்ந்திருந்த [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சி]]யினதும் தலைமையில் இருந்தது. குடியரசுக் கட்சியினர் ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிப் பகுதிகளில் [[அடிமை முறை]] விரிவாக்கப்படுவதை எதிர்த்து வந்தனர். 1860 இல் நிகழ்ந்த [[அமெரிக்கத் தலைவர்]] தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஏழு தென் மாநிலங்கள் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து பிரிவதாக அறிவித்தன. இந்த அறிவிப்பு ஆபிரகாம் லிங்கன் ஆட்சிப்பொறுப்பை ஏற்குமுன்னமே வெளியிடப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா, இதை ஒரு கிளர்ச்சியாகக் கருதி, ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.[[பிரித்தானியா]], [[பிரான்ஸ்]] ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூட்டமைப்புக்குப் [[போர்க்கப்பல்]]களையும் பிற தளவாடங்களையும் விற்றன எனினும், எந்த [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடும் முறையாகக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. தளபதிகளான [[ராபர்ட் ஈ. லீ]], [[ஜோசேப் ஜான்ஸ்டன்]] ஆகியோரின் படைகள் 1865 ஏப்ரலில் சரணடைந்தபோது கூட்டமைப்பு குலைந்து விட்டது. இதன் கடைசி அமைச்சரவைக் கூட்டம் மே மாதம் [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜார்ஜியா]]வில் நடைபெற்றது. ஏறத்தாழ எல்லாக் கூட்டமைப்புப் படைகளுமே ஜூன் மாத இறுதியளவில் சரணடைந்துவிட்டன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1443960" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி