சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய ஊரக-நகர்புற வளர்ச்சி இயக்கம்
சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய ஊரக-நகர்புற வளர்ச்சி இயக்கம் (Shyama Prasad Mukherji Rurban Mission), மறைந்த தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயரால் இவ்வியக்கம் துவக்கப்பெற்றது. இவ்வியக்கம் இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.[1]இந்த இயக்கத்தின் திட்டச் செயல்பாடுகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகள் மூலம் செயல்படுத்தப்படும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 21 பிப்ரவரி 2016 அன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்காவுன் மாவட்டத்திலுள்ள குருபாட் எனும் கிராமத்திலிருந்து இவ்வியக்கத்தை துவக்கி வைத்தார்.[2]
இவ்வியக்கம் ஊரகப் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு நகர்புறங்களை ஒட்டிய 2840 ஊரகத் தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.[3] முதல் கட்டமாக ஐந்து ஆண்டுகளில் 296 ஊரக-நகர்புறத் தொகுப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ்வியக்கம் செயல்படுகிறது.[4] இந்த தொகுப்பில் உள்ள ஒரு கிராமம் மதுரை மாநகரத்தை ஒட்டியுள்ள கோவில் பாப்பாகுடி கிராமமும் ஒன்றாகும். இக்கிராமத் தொகுப்பை நகர்புறம் அளவிற்கு மேம்படுத்த ரூபாய் 100 கோடி இந்த இயக்கம் ஒதுக்கியுள்ளது.[5] இந்தக் தொகுப்புகள் தேவையான வசதிகளுடன் பலப்படுத்தப்படும். இதற்காக அரசின் பல்வேறு திட்டங்களின் ஒருங்கிணைப்பு மூலம் வளங்களைத் திரட்ட முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஒரு பொதுவான இடைவெளி நிதி (CGF) ஒதுக்கப்பட்டுள்ளது.[6]
இயக்கத்தின் பார்வை
[தொகு]சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய ஊரக-நகர்புற இயக்கம் (SPMRM) "கிராமப்புற சமூக வாழ்க்கையின் சாரத்தை பாதுகாத்து வளர்க்கும் கிராமங்களின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் நகர்ப்புற வசதிகளுடன், கிராமப்புறங்களை மேம்படுத்துவதாகும்.
இயக்கத்தின் நோக்கம்
[தொகு]சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய ஊரக-நகர்புற இயக்கத்தின் (SPMRM) நோக்கம் கிராமப்புற பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவது, அடிப்படை சேவைகளை மேம்படுத்துவது மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட ஊரக-நகர்புறத் தொகுப்புகளை உருவாக்குவது ஆகும்.
- எண்முறை (டிஜிட்டல்) கல்வியறிவு
- திறன் மேம்பாட்டு பயிற்சி
- கிராமங்களுக்கு இடையே சாலை இணைப்பு
- நடமாடும் சுகாதார பிரிவுகளை நிறுவுதல்
- அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்குதல்
- குடிமக்கள் சேவை மையங்கள்
- பொது போக்குவரத்து சேவைகள்
- வேளாண் செயலாக்கம்
- எரிவாயு இணைப்புகள்
- சுகாதார வசதிகள்
- வேளாண் பொருட்களின் சேமிப்பு கிடங்கள்
- குழாய் மூலம் குடிநீர் வழங்கல்
- கல்வி நிறுவனங்களை மேம்படுத்துதல்
- திரவ மற்றும் திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்துதல்
இயக்கத்தின் எதிர்பார்ப்புகள்
[தொகு]- பொருளாதாரம், தொழில்நுட்பம், வசதிகள் மற்றும் சேவைகள் தொடர்பானவைகளில் ஊரக-நகர்ப்புறங்ளில் வேறுபாடுகளை குறைத்தல். * கிராமப்புறங்களில் வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதன் மூலம் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுதல்.
- பிராந்தியத்தின் வளர்ச்சியை பரப்புதல்.
- கிராமப்புறங்களில் முதலீட்டை ஈர்ப்பது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shyama Prasad Mukherji Rurban Mission
- ↑ PM Narendra Modi launches 'Rurban Mission', says his government is for poor, dalits
- ↑ CLUSTER INFORMATION LIST
- ↑ Rural Development Ministry approves 296 clusters under Shyama Prasad Mukherji Rurban Mission
- ↑ Kovilpappakudi villages set to get Rs 100-crore facelift at a cost of Rs 100 crore
- ↑ SPMRM PROGRESS