உள்ளடக்கத்துக்குச் செல்

சின்னத்தோல் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்னத்தோல் குருவி
இந்தியாவின் ஜல்பாய்குரி ஜயந்தி ஆற்றில் காணப்படும் சின்னத்தோல் குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கிளாரியோடியே
பேரினம்:
கிளாரியோலா
இனம்:
கி. லேக்டியா
இருசொற் பெயரீடு
கிளாரியோலா லேக்டியா
(தேம்னிக், 1820)

சின்னத்தோல் குருவி அல்லது சின்னத்தோல் இந்தியக் குருவியானது (Small pratincole) கிளாரியோலிடே குடும்பத்தை சார்ந்த ஒரு கரையோரப் பறவையாகும்.

பெயர்கள்

[தொகு]

தமிழில்  :சின்னத்தோல் குருவி

ஆங்கிலப்பெயர்  :Small Pratincola

அறிவியல் பெயர்  :கிளாரியோலா லேக்டியா

உடலமைப்பு

[தொகு]

இந்த சிற்றினத்தின் உடல் நீளம் 16.5 முதல் 18.5 செ.மீ. வரையும் இறக்கையின் விட்டம் 42 முதல் 48 செ.மீ. வரையும் இருக்கும். இதன் சிறிய அளவு காரணமாக, உழவாரன் அல்லது தகைவிலான் குருவியுடன் பறக்கும் போது பார்ப்பவர்கள் குழப்பமடையலாம். இதன் மார்பு வெளிர் பழுப்பாகவும் வயிறு வெண்மையாகவும் இருக்கும். அலகில் அடியிலிருந்து கண்வரை செல்லும் கருப்புப்பட்டை கொண்டது. இந்த பறவை குறுகிய கால்களுடன், நீண்ட கூரான இறக்கைகள் மற்றும் குறுகிய வாடன் காணப்படும். இதன் குறுகிய அலகு பறக்கும் போது இறையினை பிடிக்க ஏற்ற வகையில் உள்ளதாகும் தரையில் இருக்கும்போது, இது வெளிர் சாம்பல் நிறமாகத் காணப்படும். தலையில் கொண்டை பழுப்பு நிறத்தில் காணப்படும். இறக்கைகளின் மேற்பகுதி சாம்பல் நிறத்திலும் முதன்மை இறகுகள் கருப்பு நிறத்திலும் உட்புற இறகுகளின் பின்புற விளிம்பில் கருப்பு மற்றும் வெள்ளை பட்டைகள் உள்ளன. கீழ் இறக்கைகள் கருப்பாகவும், வால் கருப்பு முனையுடன் வெண்மையானது. வயிறு வெள்ளை நிறமுடையது.

காணப்படும் பகுதிகள்

[தொகு]

சின்னத்தோல் குருவி, இந்தியா, மேற்கு பாக்கித்தான், வங்காளதேசம், மியான்மர், லாவோஸ், கம்போடியா, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் வசிக்கக்கூடியது. இது இந்தநாடுகளைல் திசம்பர் முதல் மார்ச் மாதம் வரை ஆறுகள் மற்றும் ஏரிகளுக்கு அருகிலுள்ள சரளை அல்லது மணல் கரைகளில் இனப்பெருக்கம் செய்கிறது. தரையில் காணப்படும் சிறு பள்ளங்களில் 2 முதல் 4 முட்டைகள் வரை இடுகிறது. இது இந்தியாவில் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளாக வடக்கு கர்நாடகாவில் மான்வி மாவட்டம் ராய்ச்சூர். (மற்றும் ஹேமாவதி ஆற்றங்கரை[2] மற்றும் வடக்கு கேரளாவின் கண்ணூர் அருகே உள்ள இடங்கள் அடங்கும். மணல் திட்டுக்கள் கொண்ட அகன்ற ஆற்றுப் படுகைகளில் பெரும் எண்ணிக்கையில் காணப்படும் இது கடற்கரை சார்ந்த மணல் பாங்கான பகுதிகளிலும் திரியும். திருச்சியை அடுத்த கொள்ளிடம் காவேரி, ஆகியவற்றிலும், பாலாற்றிலும் நீர் வற்றும் சமயத்தில் ஆயிரக் கணக்கில் காணலாம்.

உணவு

[தொகு]

பறக்கும் பூச்சிகள், கறையான், தத்துக்கிளி ஆகியன இப்பறவையின் முக்கிய உணவு ஆகும். மாலை நேரங்களில் இருட்டும் வரை வௌவாலைப் போல அப்படியும் இப்படியுமாகத் திரும்பித் திரும்பிப் பறந்து பறக்கும் பூச்சிகளை வேட்டையாடும்.

இனப்பெருக்கம்

[தொகு]

பிப்ரவரி முதல் ஏப்ரல் முடிய ஆற்றில் மணல்பரப்பில் நீரருகே பலவும் குழுவாக ஆற்று ஆலாக்கள் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளில் 2 முட்டைகள் இடும். முட்டைகள் மணல் நிறத்தோடு ஒத்துப் போவதால் கண்டு கொள்வது கடினம். அடைகாக்கும் பறவைகள் முட்டைகளிருக்கும் இடம் செல்பவர்களை இறக்கை ஒடிந்து விட்டதைப்போலத் தத்தித் தடுமாறி திசை திருப்பப் பார்க்கும். கூட்டமாக டிரிடிரி டிட் டிரிடிரி டிட் எனக் கத்தியபடி தலைக்குமேல் பறந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும். [3] [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Glareola lactea". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Worth, C Brooke (1953). "Ecological notes on a colony of Small Swallow-Plovers in Mysore State". J. Bombay Nat. Hist. Soc. 51 (3): 608–622. 
  3. "Small_pratincole சின்னத்தோல் குருவி". பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:57
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னத்தோல்_குருவி&oldid=3769809" இலிருந்து மீள்விக்கப்பட்டது