சின்னதுரை சபீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. ச. சபீத்
சுய தகவல்கள்
முழுப் பெயர்சின்னதுரை சத்யன் சபீத்
பிறந்த நாள்2 திசம்பர் 1990 (1990-12-02) (அகவை 32)
பிறந்த இடம்நீலமலை, தமிழ்நாடு, இந்தியா
உயரம்1.78 m (5 அடி 10 அங்) (5 அடி 10 அங்)[1]
ஆடும் நிலை(கள்)முன்கள வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
ஓஸோன் எப்சி
எண்47
இளநிலை வாழ்வழி
2005–2006நீலகிரி காவலர் அணி
2007–2008இந்திய வங்கி பொழுதுபோக்குக் குழு
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2009–2011சிராக் ஒன்றிணைந்த கேரள அணி10(9)
2011–2012பைலன் ஏரோஸ்16(9)
2012–2015மோஹன் பாகான்41(5)
2014→ கேரளா பிளாஸ்டர்ஸ் (கடன்)8(1)
2015→ எப்சி கோவா (கடன்)8(0)
2016–2018ஓஸோன் எப்சி11(9)
2018மினர்வா பஞ்சாப்0(0)
2019–ஓஸோன் எப்சி12(8)
பன்னாட்டு வாழ்வழி
2008இந்திய வ175(1)
2009–2014இந்திய வ234(1)
2011–இந்திய தேசிய காற்பந்து அணி2(0)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 18:01,14 சனவரி 2019 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 11:49, 20 மார்ச் 2015 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

சின்னதுரை சபீத் அல்லது சி. ச. சபீத் (C. S. Sabeeth) ஒரு இந்தியக் கால்பந்து வீரர் ஆவார். இவர் இ-லீக் கிளப் ஓசோன் எப்.சி. கால்பந்து சங்க அணிக்காக ஒரு முன்கள வீரராக ஆடுகிறார். மேலும் சந்தோசு கோப்பைக்கான போட்டிகளில் கர்நாடக கால்பந்து அணிக்காகவும் விளையாடுகிறார்.

தொழில்முறை வாழ்க்கை[தொகு]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இவர் பிறந்தார். அவரது தந்தை, சத்யன் சி.ஏ. நீலகிரி காவல் துறை அணிக்காக விளையாடிய ஒரு கால்பந்தாட்ட வீரர் ஆவார். 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஒரு முன்கள வீரராக விளையாடிய சபீத், 2006 இல், அவர் உள்ளூர் லீக்கில் வெற்றியாளர்களாக இருந்த தனது அணிக்காக அதிக கோல்களை அடித்தார்.

ஈரானில் நடந்த 2008 ஆசிய கால்பந்து சம்மேளன இளைஞர் சாம்பியன் பட்ட தகுதி சுற்றில் இந்திய அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். அங்கு 5 போட்டிகளில் விளையாடி பாக்கித்தானுக்கு எதிராக ஒரு கோலை அடித்தார். U-19 தமிழ்நாடு அணியில் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது, பின்னர் கொலின் டால் இந்தியா U19 அணியில் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கப்பட்டது.

விவா கேரளா[தொகு]

தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையை இவர் சென்னையில் தொடங்கினார். 2009 ஆம் ஆண்டு லீக் 2 வது பிரிவில், விவா கேரளாவின் முன்னேற்றத்தில் சபீத் ஒரு முக்கிய பங்கு வகித்தார், இறுதிச் சுற்றில் மூன்று கோல்களை அடித்தார். அடுத்த பருவத்தில், 2009-10 ஐ-லீக்கில் விவா கேரளாவிற்கு 3 கோல்களை அடித்தார். சில்லாங் லயோங்கிற்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற வெற்றி இலக்கை பெற்று அவரது அணி ஆபத்தான மண்டலத்திலிருந்து வெளியேற சபீத்தின் கோல் உதவியது.

2011-12 கால்பந்தாட்ட காலப்பகுதிக்கு சபீத் ஐ-லீக் போட்டியில் இளம் இந்திய ஆட்டக்காரர்களைக் கொண்டிருந்த பைலன் ஏரோஸ் என்ற கிளப்பில் கையெழுத்திட்டார். 2011 இந்திய சம்மேளனக் கோப்பை கால்பந்து போட்டியில் மும்பைக்கு எதிரான 53 வது நிமிடத்தில் பைனலுக்கு இரண்டாவது கோலை அடித்தார், இறுதி புள்ளி 2-1 ஆகும். 2 நவம்பர் 2011 இல் HAL க்கு எதிராக தனது முதல் லீக் கோலை அடித்தார். 24 நவம்பர் 2011 இல் சிராக் யுனைட்டிற்கு எதிராக மற்றொரு கோல் அடித்தார். ஏப்ரல் 25, 2012 அன்று ஐ-லீக் 2011-12-ல் சிராங் யுனைடெட் அணியின் 3-0 வெற்றியீட்டலில் சபீத் ஒரே ஒரு கோல் அடித்தார். அவர் 11 வது சிறந்த வீரராகவும், 2011-12 ஐ-லீக்கில் சிறந்த இந்திய வீரராகவும் முடித்தார்.

மோகன் பாகான்[தொகு]

2012-13 ஐ-லீக் பருவத்தில் இருந்து மொஹன் பாகானுடன் சபீது கையெழுத்திட்டார். 2014 இந்திய சூப்பர் லீக்கில் கேரள பிளாஸ்டர்ஸ் எஃப்சிக்கு கடனாக வழங்கப்பட்டார். அவரது பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் சபீத்தை அணியில் மிகச்சிறந்த உடலுறுதி மிக்கவீரர் என்றும், பிளாஸ்டர்களுடன் பணி விகிதத்திற்காகவும் புகழ்ந்தார்.

கிழக்கு வங்காளம்[தொகு]

ஓராண்டு ஒப்பந்தத்தில் 2015 ஜூன் 16 ஆம் தேதி கிழக்கு வங்காள கால்பந்தணியுடன் கையெழுத்திட்டார்

எப்சி கோவா[தொகு]

2015 ஜூலையில், இந்திய சூப்பர் லீக் பருவத்திற்காக சபீத் எப்சி கோவாவுக்காக விளையாடினார்.

பன்னாட்டுப் போட்டிகள்[தொகு]

25 மார்ச் 2011 அன்று, துருக்மெனிஸ்தான்னுக்கு எதிராக சபீது பன்னாட்டளவில் அறிமுகமானார். மார்ச் 9, 2011 அன்று, சபீத் தனது மூன்றாவது பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார், மேலும் 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிப் போட்டியில் மியான்மார் U-23 க்கு எதிரான இந்திய U-23 கால்பந்து அணிக்கு தனது முதல் கோலை அடித்தார். இந்த ஆட்டத்தில் சிறந்து விளங்கிய பிறகு 2012 ஆம் ஆண்டு ஆசிய சவால் கோப்பைக்கான இந்திய அணியில் ஆடுவதற்காக அழைக்கப்பட்டார்.

புள்ளிவிவரங்கள்[தொகு]

கால்பந்துக் குழுக்கள்[தொகு]

20 திசம்பர் 2015 வரையிலுள்ள புள்ளிவிவரம்[2][3]

அணி பருவம் சங்கம் பெடரேஷன் கோப்பை மற்றவை[4] கண்டம் மொத்தம்
பிரிவு தோற்றம் இலக்கு தோற்றம் இலக்கு தோற்றம் இலக்கு தோற்றம் இலக்கு தோற்றம் இலக்கு
சிராக் ஒன்றிணைந்த கேரள அணி 2009 ஐ-லீக் 2 நிலை 3 3 0 0 3 3
2009–10 ஐ-லீக் 3 3 3 0 6 3
2010–11 ஐ-லீக் 4 3 3 2 7 5
பைலன் ஏரோஸ் 2011–12 ஐ-லீக் 16 9 3 1 0 0 19 10
மோஹன் பாகான் 2012–13 ஐ-லீக் 17 1 3 1 0 0 20 2
2013–14 ஐ-லீக் 21 4 2 0 4 3 27 3
கேரளா பிளாஸ்டர்ஸ் (கடன்) 2014 இந்தியன் சூப்பர் லீக் 8 1 8 1
மோஹன் பாகான் 2014–15]] ஐ-லீக் 3 0 4 0 3 1 10 1
கிழக்கு வங்க எப்சி 2015–16 ஐ-லீக் 0 0 0 0 0 0 0 0
எப்சி கோவா (கடன்) 2015 இந்தியன் சூப்பர் லீக் 8 0 8 0
தொழில்முறை மொத்தம் 83 24 18 4 7 4 108 32

இந்தியா தேசிய அணி[தொகு]

20 மார்ச் 2015 வரையிலுள்ள புள்ளிவிவரம்

இந்திய தேசிய காற்பந்து அணி
ஆண்டு தோற்றம் இலக்குகள்
2011 1 0
2012 1 0
Total 2 0

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னதுரை_சபீத்&oldid=3748109" இருந்து மீள்விக்கப்பட்டது