சிதல் பட்டி
சில்ஹெட்டின் பாரம்பரிய கலையான சிதல் பட்டி நெசவு | |
---|---|
நாடு | வங்காளதேசம்]] |
களம் | பாரம்பரிய கைவினைத்திறன் |
மேற்கோள் | 01112 |
இடம் | ஆசியா-பசிபிக் பிராந்தியம் |
கல்வெட்டு வரலாறு | |
கல்வெட்டு | 2017 (12th அமர்வு) |
பட்டியல் | பிரதிநிதித்துவம் |
சிதல்பட்டி (Shital Pati) அல்லது சிடல் பதி, சிட்டல் பதி மற்றும் அதி (சில்ஹெட் கோட்டம்) என்றும் அழைக்கப்படும் ஒரு வகை பாய் ஆகும். குளிர்ச்சியாக உணரும் வகையில் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது முர்தா தாவரங்களிலிருந்து (மராந்தாசியே) தயாரிக்கப்படுகிறது. இது பொதுவாக வங்காளதேசத்திலும் இந்தியாவின் மேற்கு வங்கத்திலும் பயன்படுத்தப்படுகிறது. அலங்கார வடிவமைப்பு கொண்ட பாய்கள் நாக்சி பட்டி என்றும் அழைக்கப்படுகின்றன. [1]
தயாரிப்பு
[தொகு]சிதல் பட்டி கரும்பு அல்லது முர்தா செடிகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது பல்வேறு இடங்களில் முஸ்தக், பட்டிப்பட்டா, பட்டிப்பெட் மற்றும் பைதாரா என்று அழைக்கப்படுகிறது. சில்ஹெட், சுனாம்கஞ்ச், பரிசால், தங்கைல், கொமிலா, நவகாளி, பெனி மற்றும் சிட்டகொங் ஆகிய இடங்களில் உள்ள நீர்நிலைகளைச் சுற்றி இந்த முர்தா செடிகள் வளர்கிறது. முர்தா செடிகளால் செய்யப்பட்ட நாக்சி பட்டி வங்காளதேசத்தின் சில்ஹெட் மற்றும் நவகாளி மாவட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது. இந்தியாவில், மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு கூச் பெகர் மாவட்டத்தில் சிதல் பட்டி தயாரிக்கப்படுகிறது. கூச் பெகரில் உள்ள பகுதிகளில், சாகரேசுவர், குகுமாரி மற்றும் பஷ்னதங்கா ஆகியவை முக்கியமான மையங்களாகும். [2]
அங்கீகாரம்
[தொகு]யுனெஸ்கோ சில்ஹெட்டின் பாரம்பரிய சிதல் பட்டி நெசவுக் கலையை அங்கீகரித்து, மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதி பட்டியலில் சேர்த்துள்ளது.[3]
இதனையும் காண்க
[தொகு]- நாக்சி காந்தா, துணியிலிருந்து தயாரிக்கப்படும் அலங்கார மெத்தைகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Banu, Zinat Mahrukh (2012). "Nakshi Pati". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). வங்காளதேசத்தின் ஆசியச் சமூகம்.
- ↑ "Sitalpati Mat Weaving of West Bengal – Asia InCH – Encyclopedia of Intangible Cultural Heritage".
- ↑ ""Cultural Heritage: Shital Pati on Unesco list"". The Daily Star. 7 December 2017. பார்க்கப்பட்ட நாள் December 7, 2017.