நாக்சி காந்தா
Nakshi Kantha | |
---|---|
Traditional nakshi kantha | |
வேறு பெயர்கள் | নকশি কাঁথা |
குறிப்பு | வங்காளதேசம், மேற்கு வங்காளம், திரிபுரா பராக் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில் காணப்படும் பாரம்பரியப் பூப்பின்னல் கலை வடிவம் |
நாடு | வங்காளதேசம் மற்றும் இந்தியா |
பொருள் | துணி, பருத்தி |
நாக்சி காந்தா (Nakshi kantha) என்ற பூப்பின்னல் கைவினைக் கலை, வங்காளத்தில் பரவியிருந்த பல நூற்றாண்டுகள் பழமையான கலை பாரம்பரியமாகும். இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், திரிபுரா , ஒடிசா மற்றும் அசாம் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.[1][2][3] பழைய புடவைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, கையால் தைத்து மெல்லிய மெத்தை துண்டை உருவாக்குகிறார்கள். இது பொதுவாக படுக்கை மெத்தைகளுக்கு மேலே அல்லது மெத்தைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது.[4] [5] நாக்சி காந்தா வங்காளதேசம் முழுவதும் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் மைமன்சிங், ஜமால்பூர், போக்ரா, ராஜசாகி, பரித்பூர், ஜெஸ்ஸோர் மற்றும் சிட்டகொங் போன்ற பகுதிகள் இந்த கைவினைப்பொருளுக்கு மிகவும் பிரபலமானவை.
பூப்பின்னலால் செய்யப்பட்ட வண்ணமயமான வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளின் விளைவாக "நாக்சி காந்தா" என்ற பெயர் உருவானது, இது பெங்காலி வார்த்தையான "நாக்சா" என்பதிலிருந்து பெறப்பட்டது. இது கலை வடிவங்களைக் குறிக்கிறது.[6][7] ஆரம்பகால கந்தாக்கள் சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு மற்றும் வெள்ளை பின்னணியைக் கொண்டிருந்தன. பின்னர் மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் பிற வண்ணங்களும் சேர்க்கப்பட்டன. காந்தா தையல் என்று அழைக்கப்படும் ஓடும் தையல் இதில் பயன்படுத்தப்படுகிறது.[8] பாரம்பரியமாக, குடும்பத்தின் பயன்பாட்டிற்காக காந்தா தயாரிக்கப்பட்டது. இன்று, நாக்சி காந்தா புத்துயிர் பெற்ற பிறகு, அவை வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nakshi Kantha-Benhal Craft". Bengal Crafts. Archived from the original on 4 February 2009. Retrieved 10 November 2008.
- ↑ Zaman, Niaz (2012). "Nakshi Kantha". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). வங்காளதேசத்தின் ஆசியச் சமூகம். Archived from the original on 24 November 2015. Retrieved 8 November 2015.
- ↑ "Quilt (Kantha) Art of Bengal". Jaismuddin.org. Archived from the original on 12 June 2010. Retrieved 2 January 2009.
- ↑ Census of India, 1961: Orissa. Manager of Publications.
- ↑ Kantha, Sarees. "Kantha Silk Sarees". sareesofbengal.com. Archived from the original on 3 February 2018. Retrieved 2 February 2018.
- ↑ "About Nakshi Kantha". Aarong. Archived from the original on 16 October 2015. Retrieved 9 December 2008.
- ↑ "History, Uses and Current Condition of Nakshi Kantha". Textile Learner. 9 January 2022. Archived from the original on 14 February 2022. Retrieved 14 February 2022.
ஆதாரங்கள்
[தொகு]- Ahmad, Perveen (1997). The Aesthetics & Vocabulary of Nakshi Kantha. Dhaka: Bangladesh National Museum. ISBN 984-585-000-6.
- Ghuznavi, Sayyada R. (1981). Naksha: A Collection of Designs of Bangladesh. Dhaka: Design Centre, Bangladesh Small & Cottage Industries Corporation. கணினி நூலகம் 10301770.
- Zaman, Niaz (1993). The Art of Kantha Embroidery (Second Revised ed.). Dhaka: University Press. ISBN 978-984-05-1228-7.
வெளி இணைப்புகள்
[தொகு]- Registered GI tag details
- The Beautiful Art of Nakshi Kantha
- independennt-bangladesh.com-naksi-kantha
- Gurusaday Museum, India பரணிடப்பட்டது 31 அக்டோபர் 2019 at the வந்தவழி இயந்திரம்
- Bangladesh National Museum
- Kantha Embroidery of West Bengal பரணிடப்பட்டது 25 சனவரி 2016 at the வந்தவழி இயந்திரம்