சிண்ட்ரெல்லா (2021 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிண்ட்ரெல்லா
இயக்கம்வினூ வெங்கடேஷ்
தயாரிப்புஎஸ். சுப்பையா (தயாரிப்பாளர்)
அபிலாஷ் (இணைத் தயாரிப்பாளர்)
எம். சேது பாண்டியன் (தயாரிப்பு நிர்வாகி)
கதைவினூ வெங்கடேஷ்
இசைஅசுவமித்ரா
நடிப்புராய் லட்சுமி
சாக்‌ஷி அகர்வால்
ஒளிப்பதிவுராம்மி
படத்தொகுப்புலாரன்ஸ் கிஷோர்
கலையகம்எஸ்எஸ்ஐ புரொடக்சன்ஸ்
வெளியீடு24 செப்டம்பர் 2021 (2021-09-24)
ஓட்டம்142 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிண்ட்ரெல்லா (Cinderella) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் - திகிழ் திரைப்படமாகும், இது அறிமுக இயக்குநர் வினூ வெங்கடேஷின் இயக்கத்தில் எஸ்எஸ்ஐ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக ராய் லட்சுமி நடித்துள்ளார்.[1] சாக்‌ஷி அகர்வால் முக்கிய கதாபாத்திரத்திலும், அன்பு தாசன் துணை வேடத்திலும் நடித்துள்ளனர். படத்துக்கு அசுவமித்ரா இசையமைத்துள்ளார். படத்தின் முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி அக்டோபர் 2018இல் தொடங்கியது. படம் 24 செப்டம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது.

நடிப்பு[தொகு]

தயாரிப்பு[தொகு]

எஸ். ஜே. சூர்யாவின் இணை இயக்குனராக பணியாற்றிய அறிமுக வினூ வெங்கடேஷ் இந்த திட்டத்தை அறிவித்தார். குறிப்பிடத்தக்க ஆதாரங்களின்படி அக்டோபர் 2018 முதல் படப்பிடிப்பு ஆரம்பமானது.[2] நயன்தாரா, த்ரிஷா, ஏமி சாக்சன், ஹன்சிகா மோட்வானி, ஐஸ்வர்யா ராஜேஷ், மனிஷா யாதவ், அஞ்சலி , ரெஜினா கசாண்ட்ரா, போன்றவர்களுக்கு கதையை கூறிய இயக்குநர் கடைசியாக அரண்மனை, காஞ்சனா போன்ற திகில் திகில் படங்களின் ஒரு பகுதியாக இருந்த ராய் லட்சுமி யை படத்தின் தலைப்பு வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.[3] ராய் லட்சுமியைப் பொறுத்தவரை, படத்தில் அவருக்கு மூன்று வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ளன. சாக்‌ஷி அகர்வால் இரண்டாவது பெண் கதாநாயகியாக அறிவிக்கப்பட்டார்.

வெளியீடு[தொகு]

படம் 24 செப்டம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது.

வரவேற்பு[தொகு]

"சிண்ட்ரெல்லா" விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களையும் அதிக நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றது.[4] சாக்‌ஷி அகர்வால் தனது நடிப்புக்காகப் பாராட்டப்பட்டார். இந்த படம் அவருக்கு ஒரு புதிய வெற்றியை அளித்தது.

சான்றுகள்[தொகு]

  1. "Sakshi in Raai Laxmi's horror film – Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/sakshi-in-raai-laxmis-horror-film/articleshow/67526178.cms. 
  2. "Raai Laxmi's next titled, Cinderella". https://www.cinemaexpress.com/stories/news/2018/aug/10/raai-laxmis-next-titled-cinderella-7376.html. 
  3. "Raai Laxmi's next is Cinderella". http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/aug/11/raai-laxmis-next-is-cinderella-1856284.html. 
  4. Cinderella Movie Review: Predictable plotting lets down well mounted Cinderella, retrieved 2021-10-06

வெளி இணைப்புகள்[தொகு]