மை டியர் பூதம் அபிலாஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மை டியர் பூதம் அபிலாஷ்
பிறப்புகுதூர்
ஆந்திரப் பிரதேசம்
மற்ற பெயர்கள்பி. அபிலாஷ்
பணிநடிகர்
தயாரிப்பாளர்
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்
செயற்பாட்டுக்
காலம்
2004 – தற்போது வரை
அறியப்படுவதுமை டியர் பூதம்
பெற்றோர்கிஷோர் குமார்
சுனிதா

அபிலாஷ் (Abhilash) மை டியர் பூதம் அபிலாஷ் (My Dear Bootham Abhilash) என்று பிரபலமாக அறியப்படும் இவர் ஓர் இந்திய நடிகர் ஆவார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும், தெலுங்கு, தமிழ் மொழித் திரைப்படங்களிலும் பணியாற்றி வருகிறார். சன் தொலைக்காட்சியில் 3 மே 2004 முதல் 30 நவம்பர் 2007 வரை 914 வாரங்களுக்கு நீடித்த மை டியர் பூதம் என்ற தமிழ் நாடகத் தொடரின் முக்கிய கதாபாத்திரமாக அபிலாஷ் நடித்தார்.[1] [2] [3]

தொழில்[தொகு]

அபிலாஷ் தெலுங்கு தொடரான விசித்ர கதா மல்லிகா மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 'வீட்டுக்கு வீடு லூட்டி' , 'விக்ரமாதித்யன்', 'மகள்', 'கோகுலத்தில் சீதை', 'அபிராமி', 'கொடி முல்லை' போன்ற தொடர்களில் நடித்திருந்தார். கணினியியலில் பட்டம் பெற்ற இவர் மை டியர் பூதம், என்ற தொடரில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர். 2017இல் வெளியான 465, நாகேஷ் திரையரங்கம் (2018) ஆகியப் படங்களுக்கு தயாரிப்பு கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றியுள்ளார்.

நாகேஷ் திரையரங்கத்தில் வில்லனாக நடித்த பிறகு,[4] [5] இவர் 'தோனி கபடிக் குழு' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.[6] [7] [8] [9] மேலும் சிண்ட்ரெல்லா என்ற படத்தையும் தயாரித்துள்ளார். மூத்த நடிகர் வியட்நாம் வீடு சுந்தரத்தை தனது வழிகாட்டியாக அபிலாஷ் கருதுகிறார்.

சான்றுகள்[தொகு]

  1. Prasad, G (6 May 2006). "New kid on the blocks". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/new-kid-on-the-blocks/article3192075.ece. பார்த்த நாள்: 26 January 2018. 
  2. "Television's new brat pack". தி இந்து. 18 June 2005. http://www.thehindu.com/thehindu/mp/2005/06/18/stories/2005061801670100.htm. பார்த்த நாள்: 26 January 2018. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. Gandhi, U.Sudharsan (31 August 2017). "மை டியர் பூதம்' சீரியல் குட்டீஸ் இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?". https://www.vikatan.com/news/cinema/100892-my-dear-bootham-serial-child-artists-then-and-now.html. பார்த்த நாள்: 26 January 2018. 
  4. "டோனி பெயரில் இன்னொரு தமிழ் படம்". 28 October 2016. http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=22875&id1=3. பார்த்த நாள்: 26 January 2018. 
  5. "Nagesh Thiraiyarangam-A film that happens inside a theatre". 16 October 2016. http://cinema.dinamalar.com/hindi-news/52062/cinema/Bollywood/nagesh-thiraiarangam--diffrent-type-of-story.htm. பார்த்த நாள்: 26 January 2018. 
  6. CR, Sharanya (7 July 2018). "Cricket and Kabaddi play the leads in this film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 21 July 2018.
  7. "கிரிக்கெட்-கபடியை இணைக்கும் 'தோனி கபடிக் குழு'". India Glitz. 5 July 2018. பார்க்கப்பட்ட நாள் 21 July 2018.
  8. "மைடியர் பூதம்; சீரியல் குட்டி பையனை நாயகனாக மாற்றிய;தோனி கபடி குழு". Asianet News Tamil. 5 July 2018. பார்க்கப்பட்ட நாள் 21 July 2018.
  9. Subrahmaniyan, Anupama (5 July 2018). "Iyyappan's hoping to score with Dhoni Kabadi Kuzhu". தி டெக்கன் குரோனிக்கள். பார்க்கப்பட்ட நாள் 21 July 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மை_டியர்_பூதம்_அபிலாஷ்&oldid=3324888" இலிருந்து மீள்விக்கப்பட்டது