சிங்கப்பிடறி சொறி மீன்
சிங்கப்பிடறி சொறி மீன் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | சயானியா (சொறிமீன்) |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/சயானியா (சொறிமீன்)ச. பிலாட்டா |
இருசொற் பெயரீடு | |
சய பிலாட்டா (லின்னேயஸ், 1758) |
சிங்கப்பிடறி சொறிமீன் ( Lion's mane jellyfish ), இராட்சத சொறிமீன், ஆர்க்டிக் சிவப்பு சொறிமீன் சிகை சொறிமீன் [1] என்றும் அழைக்கப்படுவது சொறி மீன்களில் மிகப் பெரிய உயிரினங்களில் ஒன்றாகும். இவை ஆர்க்டிக், வடக்கு அத்லாந்திக் மற்றும் வடக்கு பசிபிக் பெருங்கடல்களின் குளிர்ந்த கடற் பகுதியில் மட்டுமே உள்ளன. இவை ஆங்கிலக் கால்வாய், ஐரியக் கடல், வடகடல், மேற்கு எசுக்காண்டினாவியாவுக்கு தெற்கே கட்டேகட் மற்றும் ஒரிசவுண்ட் ஆகியவற்றிலும் பொதுவாக காணப்படுகின்றன. இவை பால்டிக் கடலின் தென்மேற்குப் பகுதிக்கும் செல்லலக்கூடியவை (குறைந்த உப்புத்தன்மை காரணமாக இனப்பெருக்கம் செய்ய முடியாது). இதேபோன்ற சொறிமீன்கள் ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு அருகிலுள்ள கடல்களில் வசிப்பதாக அறியப்படுகிறது. இவை ஒரே இனமாக இருக்கலாம். சிங்கப்பிடறி மீன்களில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய மாதிரியானது 1870 இல் மாசசூசெட்ஸ் கடற்கரையில் அளவிடப்பட்டது அதில் 210 சென்டிமீட்டர்கள் (7 அடிகள்) விட்டம் கொண்ட உடலும் 36.6 m (120 ft) நீளம் கொண்ட உணர்நீட்சிகளையும் கொண்டதாக இருந்தது. [2] சிங்கப்பிடறி சொறி மீன்கள் 42 ° N அட்சரேகைக்கு கீழே அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையின் பெரிய விரிகுடாவில் சில காலமாக காணப்படுகின்றன.
சிங்கப்பிடறி சொறி மீனானது கடல் உயிரினங்கள் மற்றும் சிறிய சொறிமீன்கள் போன்ற இரையைப் பிடிக்கவும், இழுக்கவும், சாப்பிடவும் அதன் உணர்நீட்சிகளைப் பயன்படுத்துகிறது. [3]
குறிப்புகள்[தொகு]
- ↑ Hair Jelly (Cyanea capillata) பரணிடப்பட்டது 2013-04-19 at the வந்தவழி இயந்திரம். Australian Venom Research Unit.
- ↑ "Jellyfish 'largest in captivity'". BBC News (ஆங்கிலம்). 2010-07-22. 2021-08-02 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Lion's Mane Jellyfish : Discovery Channel". Dsc.discovery.com. 2013-05-23. 2013-09-08 அன்று பார்க்கப்பட்டது.