உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டேகாட் நீர்சந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டேகாட் மற்றும் இசுகசராக்

கட்டேகாட் நீர்ச்சந்தி (Kattegat) டென்மார்க்கின் சிலாண்டு தீவுக்கும் ஜெட்லாண்ட் முந்நீரகத்திற்கும் இடையில் செல்ல கூடிய நீரிணையாகும். இந்த நீரிணை வடக்கில் உள்ள ஸ்கஜெராக் வழியாக வடகடலுடனும், நீளத்திட்டுகள் வழியாகப் பால்டிக் கடலுடனும் இணைக்கப்பட்டுள்ளது. 5700 வடக்கு அகலாங்கு, 1100 கிழக்கு நெட்டாங்கில் இது அமைந்துள்ளது. இதன் மொத்தப்பரப்பு 25486 சதுர கிலோமீட்டர் ஆகும். இது 220 கிலோமீட்டர் நீளமும், 37-88 மீட்டர் வரை பல்வேறு அளவு அகலங்களையும் கொண்டுள்ளது. கட்டேகாட் நீர்சந்தியின் தோராயமான ஆழம் 26 மீட்டர் ஆகும். பால்டிக் கடலிலிருந்து வரும் மேற்பரப்பு நந்நீர்ப் பாய்வதால் உப்புத்தன்மை அளவு 23 % வரை குறைந்து காணப்படுகிறது. டென்மார்க் நாட்டுத் தீவுகளான லேசோ அன்ஹோல்ட் , சம்சோ ஆகியவை இதில் அமைந்துள்ளன. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கோடென்பெர்க் ஹாம்ஸ்டம் டென்மார்க்கைச் சார்ந்த ஆர்க்கஸ் போன்றவை இங்கு அமைந்துள்ள முக்கியத் துறைமுகங்களாகும், கட்டேகாட் நீர்சந்தி ஒரு முக்கியமான கடற்பயண வழியாகவும், சிறந்த கோடைகால உல்லாச இடமாகவும் திகழ்கிறது.[1]

உசாத்துணை

[தொகு]
  • அறிவியல் களஞ்சியம், தொகுதி ஏழு, தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Limits of Oceans and Seas" (PDF) (3rd ed.). International Hydrographic Organization. 1953. Archived from the original (PDF) on 8 October 2011. பார்க்கப்பட்ட நாள் 28 December 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டேகாட்_நீர்சந்தி&oldid=3710074" இலிருந்து மீள்விக்கப்பட்டது