சாரங்கதேவர்
சாரங்கதேவர் (Sarangadeva, 1175 – 1247)[1] இசை மற்றும் நாடகம் குறித்த பாரம்பரிய சமசுகிருத உரையான சங்கீத இரத்தினாகாரம் என்ற நூலை எழுதிய 13 ஆம் நூற்றாண்டின் இந்திய இசைக்கலைஞர் ஆவார்.[2] இந்துஸ்தானி இசை மற்றும் கருநாடக இசை மரபுகள் ஆகிய இரண்டாலும் இந்திய பாரம்பரிய இசையில் இது அதிகாரப்பூர்வ கட்டுரையாக கருதப்படுகிறது.[3] [4]
சுய சரிதை
[தொகு]சாரங்கதேவர் காஷ்மீரின் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இந்தியத் துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதிகளில் இசுலாமிய படையெடுப்பு மற்றும் தில்லி சுல்தானகம் தொடங்கிய சகாப்தத்தில், இவரது குடும்பம் தெற்கே குடியேறி, எல்லோரா குகைகளுக்கு அருகே தேவகிரி யாதவப் பேரரசால் ஆளப்பட்ட மைய இந்தியாவில் (மகாராட்டிரம்) வடக்கு கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியப் பகுதிகளான தக்காணப் பீடபூமி பிராந்தியத்தில்]] குடியேறியது. சாரங்கதேவர், இரண்டாம் சிங்கண்ணா அரசவையில் (1210–1247) தனது இசை ஆர்வங்களைத் தொடர சுதந்திரத்துடன் கணக்காளராக பணியாற்றினார்.[5] [6] [7]
யோசனைகள்
[தொகு]இசை மற்றும் நடனம் குறித்த தனது கருத்துக்களை சங்கீத இரத்னாகாரத்தில் ஏழு அத்தியாயங்களில் வழங்கினார். ஆனால் அதை தத்துவ சூழலுடன் ஒருங்கிணைத்தார் . [2] இந்த் நூலின் மூலம் ஒலியின் தன்மை, பதிவுசெய்தல், மனிதர்கள் கேட்கக்கூடிய மிகச்சிறிய தனித்துவமான ஒலிகள் மற்றும் இசைக்கருவிகள் உருவாக்கக்கூடிய ஒலி (சுருதி), இசை அளவுகள் மற்றும் முறைகள், 264 இராகங்கள், துடிப்புகள் தாளம், சந்தம், செயல்திறன் கலைகள், மனித உணர்ச்சிகள், உணர்வுகள், இசை மற்றும் குரல், நாடகம் மற்றும் பாடல்களின் அமைப்பு ஆகியவற்றை ஒரு கலைஞர் அவரது பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தவும், அவர்களை ஈர்க்கவும் வரம்பற்ற வாய்ப்புகள் உள்ளன.[8]
செல்வாக்கு
[தொகு]இந்திய துணைக் கண்டத்தின் மிகவும் செல்வாக்குமிக்க இடைக்கால இசைக் கோட்பாட்டாளர்களில் ஒருவரான இவருடைய புத்தகம் "இந்திய பாரம்பரிய இசை குறித்த முதல் நவீன புத்தகம்" என்று அழைக்கப்படுகிறது.[4] இந்த புத்தகம் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தைப் போலவே குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது. கருநாடக மற்றும் இந்துஸ்தானி செம்மொழி இசை மரபுகளால் குறிப்பிடப்படும் இந்திய இசையியலில் இது உரையாகும்.[9] இசைப் பேராசிரியரான டான் ராண்டல் என்பவரின் கூற்றுப்படி, சாரங்கதேவரின் உரை பண்டைய இந்திய இசை மரபின் நாட்டிய சாஸ்திரத்தையும், பிரஹாதேஷியையும் விளக்கும் மிக விரிவான கட்டுரை ஆகும்.[10][11]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Theatres of India: A Concise Companion.
- ↑ 2.0 2.1 Mohan Lal (1992). Encyclopaedia of Indian Literature: Sasay to Zorgot. Sahitya Akademi. p. 3987. ISBN 978-81-260-1221-3.
- ↑ A New History of the Humanities: The Search for Principles and Patterns from Antiquity to the Present.
- ↑ 4.0 4.1 The Music Of India. Retrieved 23 July 2013.
- ↑ Reginald Massey; Jamila Massey (1996). The Music Of India. Abhinav Publications. pp. 41–42. ISBN 978-81-7017-332-8.
- ↑ Ramanlal Chhotalal Mehta, Musical Musings: Selected Essays, Indian Musicological Society (1996), p. 46
- ↑ T. V. Kuppuswami (1992). Carnātic Music and the Tamils. Kalinga Publications. pp. vii–viii. ISBN 978-81-85163-25-3.
- ↑ Lewis Rowell (2015). Music and Musical Thought in Early India. University of Chicago Press. ISBN 978-0-226-73034-9.
- ↑ Vijaya Moorthy (2001). Romance Of The Raga. Abhinav Publications. ISBN 978-81-7017-382-3. Retrieved 23 July 2013.
- ↑ Don Michael Randel (2003). The Harvard Dictionary of Music. Harvard University Press. p. 813. ISBN 978-0-674-01163-2.
- ↑ Emmie te Nijenhuis (1977). Musicological literature. Harrassowitz. p. 12. ISBN 978-3-447-01831-9.
நூலியல்
[தொகு]- Śārngadeva (Translator: R. K. Shringy) (1999). Sangita ratnakara, Volume 1. Munshiram Manoharlal. ISBN 978-81-215-0508-6.
{{cite book}}
:|author=
has generic name (help) - Śārṅgadeva; R. K. Shringy (Translator) (2007). Sangitaratnakara of Sarngadeva, Volume 2. Munshiram Manoharlal. ISBN 978-81-215-0466-9.
{{cite book}}
:|author2=
has generic name (help) - N. Ramanathan (1999). Musical forms in Sangītaratnākara. Sampradāya.