பரத முனிவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரத முனிவர் (Bharata Muni) பண்டைய பரத கண்டத்தின் இசை மற்றும் நாட்டிய சாத்திரமான காந்தர்வ வேதம் எனும் நூலை சமசுகிருத மொழியில் எழுதிய அறிஞர். காந்தர்வ வேதம் 6,000 சுலோகங்களையும், 36 அதிகாரங்களையும் கொண்டது. இவர் கிமு 300 - கிபி 100க்கும் இடையே வாழ்ந்ததாக கருதப்படுகிறது.[1] பரதநாட்டியம் இவர் பெயரால் அறியப்படுகிறது. அரம்பையர்கள் மற்றும் கந்தவர்கள் பரத முனிவர் இயற்றிய காந்தர்வ வேதம் எனும் இசை மற்றும் நடனக் கலையில் சிறந்தவர்களாக விளங்கினர் என பண்டைய இந்துக்களின் சாத்திரங்கள் கூறுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Natyashastra (Indian drama treatise)". Britannica.com.
  • "Revealing the Art of Natyasastra" by Narayanan Chittoor Namboodiripad ISBN 9788121512183

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரத_முனிவர்&oldid=3671988" இலிருந்து மீள்விக்கப்பட்டது