சாம்பல் கொண்டலாத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம்பல் கொண்டலாத்தி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கெமிக்சோசசு
இனம்:
கெ. பிளாவாலா
இருசொற் பெயரீடு
கெமிக்சோசசு பிளாவாலா
பிளைத், 1845
வேறு பெயர்கள்
  • கிப்சிபெடெசு பிளாவாலா
  • கிப்சிபெடெசு பிளாவாலசு
  • மைக்ரோசெலிசு பிளாவாலா

சாம்பல் கொண்டலாத்தி (Ashy bulbul) என்பது கொண்டைக்குருவி குடும்பத்தினைச் சார்ந்த பறவைச் சிற்றினமாகும். இதன் விலங்கியல் பெயர் கெமிக்சோசசு பிளாவாலா என்பதாகும். இது இந்தியத் துணைக்கண்டத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்ப அல்லது வெப்பமண்டலம் ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

வகைப்பாட்டியல்[தொகு]

முன்பு, சில வகைப்பாட்டியலாளர்கள் கெப்சிபீட்சு மற்றும் மைக்ரோசெலிசு பேரினங்களில் சாம்பல் கொண்டலாத்தியினை வகைப்படுத்தினர்.

துணையினங்கள்[தொகு]

ஐந்து துணையினங்கள் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]

  • கெ. பி. பிளாவாலா-பிளைத், 1845: கிழக்கு இமயமலை, வடகிழக்கு வங்கதேசம், வடமேற்கு மியான்மர் மற்றும் தெற்கு சீனா
  • கெ. பி. கில்டிப்ராண்டி-ஹியூம், 1874: கிழக்கு மியான்மர் மற்றும் வடமேற்கு தாய்லாந்து
  • கெ. பி. டேவிசோனி-ஹியூம், 1877: தென்கிழக்கு மியான்மர் மற்றும் தென்மேற்கு தாய்லாந்து
  • கெ. பி. போர்டெல்லி-தெலாகவுர், 1926:1926 தெற்கு சீனா, கிழக்கு தாய்லாந்து, வடக்கு மற்றும் மத்திய லாவோஸில் காணப்பட்டது
  • கெ. பி. ரெமோடசு- (தெய்க்னான், 1957) : தெற்கு இந்தோசீனா

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Hemixos flavala". IUCN Red List of Threatened Species 2016: e.T103822632A94365071. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103822632A94365071.en. https://www.iucnredlist.org/species/103822632/94365071. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. Gill, Frank; Donsker, David, eds. (2017). "Bulbuls". World Bird List Version 7.3. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 22 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_கொண்டலாத்தி&oldid=3933530" இலிருந்து மீள்விக்கப்பட்டது