சாம்பல்-தலை பச்சைப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம்பல்-தலை பச்சைப் புறா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கொலும்பிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
தெரெரான்
இனம்:
தெ. பாயெரெ
இருசொற் பெயரீடு
தெரெரான் பாயெரெ
பிளைத், 1862

சாம்பல்-தலை பச்சைப் புறா (Ashy-headed green pigeon)(தெரெரான் பாயெரெ) என்பது தெரெரான் பேரினத்தைச் சேர்ந்த புறா சிற்றினம் ஆகும். இது நேபாளம், வடகிழக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம்[2] தென்மேற்கு சீனா, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ் மற்றும் வியட்நாம் பகுதிகளில் காணப்படுகிறது . பல வகைப்பாட்டியலாளர் சாம்பல் நெற்றிப் புறா தொகுதியிலிருந்து இந்தப் புறாவினை தனிச் சிற்றினமாகப் பிரித்தனர். இது 2014-ல் பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் சேர்க்கப்பட்டது.

நடத்தை[தொகு]

சாம்பல்-தலை பச்சைப் புறா பொதுவாக தனித்தனியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ காணப்படும். இது பிற புறாக்களைப் போன்று வேகமாகவும் நேராகவும் வழக்கமான இறக்கை அசைவுகளுடன் பறக்கும். இது பலவகையான தாவரங்களின் விதைகளையும் பழங்களையும் உண்ணும். மரத்தில் குச்சிகளால் கூடு கட்டி வெள்ளை நிற முட்டைகள் இரண்டு இடுகிறது .

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2020). "Treron phayrei". IUCN Red List of Threatened Species 2020: e.T22726285A177768727. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T22726285A177768727.en. https://www.iucnredlist.org/species/22726285/177768727. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. "Ashy-headed Green-pigeon (Treron phayrei) - BirdLife species factsheet".
  • Collar, N.J. 2011. Species limits in some Philippine birds including the Greater Flameback Chrysocolaptes lucidus. Forktail number 27: 29–38.
  • Rasmussen, P.C., and J.C. Anderton. 2005. Birds of South Asia: the Ripley guide. Lynx Edicions and Smithsonian Institution.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்-தலை_பச்சைப்_புறா&oldid=3773574" இலிருந்து மீள்விக்கப்பட்டது