சல்மான் நிசார்
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 30 சூன் 1997 தலசேரி, கேரளா, இந்தியா | ||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடது கை | ||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை எதிர்ச்சுழல் | ||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாட்ட வீரர் | ||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||
2015–முதல் | கேரள (squad no. 12) | ||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 16 February 2024 |
சல்மான் நிசார் (Salman Nizar; பிறப்பு சூன் 30,1997) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் ஓர் இடது கை மட்டையாட்ட வீரரும் வலது கை எதிர்ச்சுழல் பந்து வீச்சாளரும் ஆவார்.[2]
உள்நாட்டு விளையாட்டுப் போட்டி பங்களிப்பு
[தொகு]கீ-14, கீ-16, மற்றும் கீ-23 மட்டங்களில் கேரளா துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப்படுத்திய பின்னர், சல்மான் 6 பிப்ரவரி 2015 அன்று அசாமுக்கு எதிரான ரஞ்சி கோப்பைக்கான போட்டியில் கேரளாவுக்காக தனது முதல் தர போட்டியில் அறிமுகமானார்.[3][4][5] ரஞ்சி கோப்பை போட்டியில் விதர்பாவிற்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 102 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்து கேரள அணிக்காக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக இருந்தார்.[6] ரஞ்சி கோப்பை போட்டியில் பஞ்சாப்பிற்கு எதிராக ஆட்டமிழக்காமல் 91 ஓட்டமெடுத்து தனது தொழில் வாழ்க்கையின் சிறந்த விளையாட்டினை வெளிப்படுத்தினார்.[7][8][9]
பிப்ரவரி 25,2017 அன்று திரிபுராவிற்கு எதிராக விஜய் அசாரே போட்டியில் கேரளா தனது ஏ வரிசையில் அறிமுகமானார்.[10] இந்தப் போட்டியில் இவர் தனது அதிகபட்ச தனிப்பட்ட ஓட்டமான 82 ஆட்டமிழக்காமல் அடித்தார்.[11] ஆறு போட்டிகளில் விளையாடி 215 ஓட்டங்கள் எடுத்து போட்டியில் தனது அணியின் முன்னணி வீரராக இவர் இருந்தார்.[12]
இவர் 2018 சனவரி 8 அன்று ஐதராபாத்து அணிக்கு எதிராக நடந்த மண்டல இருபது 20 போட்டியில் கேரளாவுக்காகத் தனது முதல்இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[13]
ஆகத்து 2018-இல், கேரளாவின் அணித்தலைவர் சச்சின் பேபிக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததற்காகக் கேரளத் துடுப்பாட்டச் சங்கத்தால் அபராதம் விதிக்கப்பட்ட எட்டு வீரர்களில் இவரும் ஒருவர்.[14]
சல்மான் நிசார் 2020-21 கே. சி. ஏ. தலைவர் கோப்பைக்கான இருபது20-இல் கே. சி. ஏ. லயன்ஸ் அணிக்காக விளையாடினார்.[15][16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Salman Nizar". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 February 2017.
- ↑ "Salman Nizar". Cricket Archive.
- ↑ "Salman Nizar". Cricbuzz.
- ↑ "Kerala sack coach P Balachandran mid-season". ESPN Cricinfo.
- ↑ "Group C, Kannur, Feb 6 - 9 2015, Ranji Trophy". ESPN cricinfo.
- ↑ "Sarwate bags six as Vidarbha complete massive win". ESPN cricinfo.
- ↑ "Elite, Group A, Thumba, Jan 11 - 13 2020, Ranji Trophy". ESPN cricinfo.
- ↑ "Ranji Trophy 2019-20: Defiant Salman Nizar rescues Kerala against Punjab". Sportstar. Thehindu.
- ↑ "Ranji Trophy: Salman stands tall amid the ruins for Kerala". The Times of India.
- ↑ "Vijay Hazare Trophy, Group B: Kerala v Tripura at Bhubaneswar, Feb 25, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 February 2017.
- ↑ "Karthik ton gives Tamil Nadu winning start". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 February 2017.
- ↑ "Vijay Hazare Trophy, 2016/17 - Kerala: Most runs". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 October 2018.
- ↑ "South Zone, Inter State Twenty-20 Tournament at Vizianagaram, Jan 8 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 January 2018.
- ↑ "Sanju Samson among 13 players sanctioned by Kerala". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 August 2018.
- ↑ Mohammad, Farzan (5 March 2020). "KCA President's Cup 2021 : Full schedule, squads, match timings and live streaming details". Sports Keeda. பார்க்கப்பட்ட நாள் 19 May 2021.
- ↑ "KCA Presidents T20 Cup 2021: Full Squads & Team List". Wisden. 9 March 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- Salman Nizar இல்ESPNcricinfo