சயாத்ரி புலிகள் காப்பகம்

ஆள்கூறுகள்: 17°29′10″N 73°48′32″E / 17.486°N 73.809°E / 17.486; 73.809
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சயாத்ரி புலிகள் காப்பகம்
காட்டுயிர்க் காப்பகம்
சயாத்ரி புலிகள் காப்பகம் is located in மகாராட்டிரம்
சயாத்ரி புலிகள் காப்பகம்
சயாத்ரி புலிகள் காப்பகம்
மகாராட்டிரம், இந்தியா
ஆள்கூறுகள்: 17°29′10″N 73°48′32″E / 17.486°N 73.809°E / 17.486; 73.809
Country India
Stateமகாராட்டிரம்
Established2008
பரப்பளவு
 • மொத்தம்1,166 km2 (450 sq mi)
Languages
 • Officialமராத்தி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
Governing bodyஇந்திய அரசு, இந்திய வன அமைச்சகம்

சயாத்ரி புலிகள் காப்பகம் (Sahyadri Tiger Reserve) என்பது 2008 ஆம் ஆண்டில் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஒரு காப்பகமாகும்.[1] மகாராட்டிரத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் சஹ்யாத்ரி மலைத்தொடர்களில் அமைந்துள்ள இது வடமேற்குத் தொடர்ச்சி மலை ஈரமான இலையுதிர் காடுகள்[2] , வடமேற்கு தொடர்ச்சி மலை மலை மழைக்காடுகளின் சுற்றுச்சூழல் பகுதிகளின் ஒரு பகுதியாகும்.[3] இந்த மலைத்தொடர்கள் மகாராஷ்டிரா - கர்நாடகா- கோவா இடையே ஒரு பொதுவான எல்லையை உருவாக்குகின்றன , மேலும் வளமான பசுமையான/ அரை பசுமையான, ஈரமான இலையுதிர் காடுகளை உருவாக்குகின்றன. இப்பகுதி நான்கு மாவட்டங்களில் பரவியுள்ளது. மேலும், சதாரா (மஹாபலேசுவர் மேதா சதாரா, பதான் வட்டங்கள் சாங்லி (சிராலா வட்டங்கள் கோலாப்பூர் (சௌவாடி வட்டங்கள்), ரத்னகிரி (சங்கமேசுவர் சிப்புளுன், கேட் வட்டங்களில் இப்பகுதியுள்ளது.

பகுதி[தொகு]

இந்தப் புகலிடம் வடக்கு பகுதியை உருவாக்கும் கோய்னா கானுயிர் புகலிடம் மற்றும் சரணாலயத்தின் தெற்கு பகுதியை உருவாக்கும் சந்தோலித் தேசிய பூங்கா முழுவதும் பரவியுள்ளது. அண்மையில் இது ராடனகரி கானுயிர் புகலிடம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புலிகள் காப்பகத்தின் மொத்த பரப்பளவு[4][5]

  • மைய பகுதி: 600.12 km2 (231.71 sq mi)
  • இடையக பகுதி: 565 km2 (218 sq mi)
  • மொத்த பரப்பளவு: 1,166 km2 (450 sq mi)

விலங்கினங்கள்[தொகு]

இந்தப் புகலிடம் வங்காளப் புலிகளின் பாதுகாப்பிற்காக கணிக்கையாக்கப்பட்டுள்ளது. 2018 மே 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் சந்தோலியில் ஒரு புலி ஒளிப்படக் கருவிக்குள் புகைப்படம் எடுக்கப்பட்டது , இது எட்டு ஆண்டுகளில் புகலிடப் புலிகளின் முதல் நேரடி சான்றாகும். அதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டில் டி. என். ஏ, படிம அடிப்படையிலான கணிப்புகள் இந்த காப்பகத்தில் 5 முதல் 8 புலிகள் இருப்பதாக மதிப்பிட பயன்படுத்தப்பட்டன. இங்குள்ள மற்ற விலங்குகளில் சிறுத்தை அடங்கும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Four more tiger reserves to come up in the country". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 28 February 2016.
  2. "Southern Asia: Southwestern India". WWF. பார்க்கப்பட்ட நாள் 12 August 2013.
  3. Wikramanayake, Eric; Eric Dinerstein; Colby J. Loucks; et al. (2002). Terrestrial Ecoregions of the Indo-Pacific: a Conservation Assessment. Island Press; Washington, DC. pp 281-284.
  4. "Core buffer areas". Government of India. Archived from the original on 25 May 2015. பார்க்கப்பட்ட நாள் 28 February 2016.
  5. "Tiger Reserves - Wildlife Institute of India, an Autonomous Institute of MoEF, Govt. of India". பார்க்கப்பட்ட நாள் 28 February 2016.