சந்து லால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராஜா
சந்துலால்
ஐதராபாத்து இராச்சித்தின் தலைமை அமைச்சர்
பதவியில்
1833–1844
ஆட்சியாளர்சிக்கந்தார் ஜா
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு15 ஏப்ரல் 1845

சந்து லால் மல்கோத்ரா(Chandu Lal Malhotra) (1766 - 15 ஏப்ரல் 1845), மகாராஜா சந்து லால் என்றும் அறியப்பட்ட இவர், ஐதராபாத் நிசாம் சிக்கந்தர் ஜாவின் 3வது தலைமை அமைச்சராக (1833-1844) இருந்தார். இவர் ஐதராபாத் இராச்சியத்தில் (இப்போது ஐதராபாத்து ) இல் பிறந்தார். மேலும், இந்தியாவின் ரேபரலியைச் சேர்ந்தவர். இவர் உருது, ஐதாராபாத்தி, பஞ்சாபி மற்றும் பாரசீக மொழிகளின் கவிஞரும் ஆவார்.[1][2]

குடும்பம்[தொகு]

சந்து லால் சதன், மல்கோத்ரா குடும்பத்தில் பிறந்தவர். இவர் இந்து கத்ரி பின்னணியில் இருந்து வந்தவர் என்று மற்றொரு ஆதாரம் கூருகிறது.[3] இவரது தந்தை நரேன் தாசு ரேபரலியில் இருந்து ஐதராபாத் மாநிலத்திற்கு குடிபெயர்ந்தவர். இந்துக்களான இவருடைய முன்னோர்கள்,[4] முகலாய அரசவையில் பணியாற்றியவர்கள்.[3] நிசாம் முதலாம் உல் முல்க் ஆசிப் ஜா காலத்தில் ஐதராபாத்து மாநிலத்தில் நிதித் துறையில் பணியாற்றியடஹாக அறியப்படுகிறது. நிசாமிடம் பிரதமராகப் பணியாற்றிய கிஷான் பிரசாத் இவருடைய கொள்ளுப் பேரன் ஆவார்.[4]

சந்துலாலின் மாளிகை, 1890கள்

சீக்கியர்களின் தர்பாரில்[தொகு]

சந்து லால், சீக்கியப் பேரரசின் கீழ் மகாராஜா ரஞ்சித் சிங்கின் அரசவையில் அமைச்சராக இருந்தார். இவர்கள் இருவருக்கும் நல்ல உறவு இருந்தது. மேலும், சந்து லால் , சீக்கிய கல்சா இராணுவத்தில் தளபதியானார். பின்னர் இவர் மதம் மாறி சீக்கியரானார்.

நிசாம் தர்பாரில்[தொகு]

இவர் ஐதராபாத் இராச்சியத்தின் சுங்கத் துறையில் துணை அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[5] பின்னர் நவாப் சிக்கந்தர் ஜாவிடமிருந்து ராஜா பகதூர் என்ற பட்டத்தைப் பெற்றார். சிக்கந்தர் ஜா இவரை தனது ராணுவத்தின் கணக்கு அதிகாரியாக தேர்ந்தெடுத்தார். 1819 இல் சிக்கந்தர் ஜாவிடமிருந்து சந்து லால் மகாராஜா பட்டத்தையும் ஒரு கோடி ஐதராபாதி ரூபாய் ரொக்கப் பரிசையும் பெற்றார். 1822 இல் நவாப் நசீர் உத் தவ்லாவிடமிருந்து ராஜா இ ராஜகன் என்ற பட்டத்துடன் ஏழாயிரம் குதிரை வீரர்களின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1833 இல் மோனிர்-உல்-முல்க் இறந்த பிறகு, அவருக்குப் பிறகு சந்து லால் பிரதமரானார்.[3]

பிரதம அமைச்சர்[தொகு]

ஐதராபாத் இராச்சியத்தில் சந்து லால் 1808 ஆம் ஆண்டு பின்னர் 1832 ஆம் ஆண்டு கிபி 1843 ஆம் ஆண்டு வரை என இருமுறை பிரதம அமைச்சராக இருந்தார்.[3]

கவிஞர்[தொகு]

சந்து லால் ("சதன்" என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தினார்) ஒரு கற்றறிந்தவராக, உருது கவிதை மற்றும் இலக்கியத்தின் புரவலராக இருந்தார். இவரது ஆதரவால் உருது கவிஞர்கள் இவரது அரசவைக்கு வந்தனர். தில்லியிலிருந்து ஐதராபாத்து மாநிலத்திற்கு முகமது இப்ராகிம் சாக் மற்றும் பக்சு நாசிக் போன்ற வட இந்தியக் கவிஞர்களை இவர் அழைத்தார். ஆனால் சில காரணங்களால் அவர்களால் வர முடியவில்லை. இவர் பிரதம மந்திரியாக இருந்தபோதிலும், தொடர்ந்து முசைராவில் கலந்து கொண்டார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்து_லால்&oldid=3926610" இலிருந்து மீள்விக்கப்பட்டது