வித்தல் சுந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்தல் சுந்தர் பரசுராமி
இராசா பிரதாப்வந்து பகதூர்
ஒரு 5 அடி சதுர, கோட்டை போன்ற வெள்ளை கல்லறை கல் தொகுதிகள்
விட்டல் சுந்தர் பரசுராமியின் சமாதி (இறந்தவர்களை நினைவுகூரும் நினைவுச்சின்னம்).
ஐதராபாத்து பிரதம மந்திரி
ஆட்சிக்காலம்8 சூலை 1762 – 10 ஆகத்து 1763
முன்னையவர்பசால்ட்டு இயங்கு
பின்னையவர்மூசா கான் நவாப் ருகன் உத்-தௌலா
இறப்பு10 ஆகத்து 1763
இரக்சாசுபுவன் (தற்பொழுது பீடு மாவட்டம், மகாராட்டிரம்)
தந்தைசுந்தர் நாராயன் பரசுராமி

வித்தல் சுந்தர் (Vitthal Sundar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். விட்டல் சுந்தர் பரசுராமி, விட்டல் சுந்தர் என்ற பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார். நிசாம் அலி கான் (இரண்டாம் ஆசாஃப் சா) ஆட்சியின் போது ஐதராபாத்தின் பிரதமராக இவர் இருந்தார். 1762 ஆம் ஆண்டு சூலை மாதம் 8 ஆம் தேதி தக்காணத்தின் சுபேதாராக கான் நியமிக்கப்பட்டபோது, அவர் உடனடியாக சுந்தரை தனது திவானாக நியமித்து அவருக்கு இ'ராசா பிரதாபவந்து என்ற பட்டத்தை வழங்கினார்.[1] விட்டல் சுந்தர் மகாராட்டிராவின் தேசாசுத்தா பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்.[2][3][4][5] 1763 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 10 ஆம் தேதியன்று இரக்சாபுவன் போரின் போது விட்டல் சுந்தர் நிசாமின் தளபதியாக இருந்தார். 1763 ஆம் ஆண்டில் நடைபெற்ற இப்போரில் வித்தல் சுந்தர் ஆகத்து மாதம் 10 ஆம் தேதியன்று கொல்லப்பட்டார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. K. Chandraiah (1998). Hyderabad, 400 Glorious Years. K. Chandraiah Memorial Trust. பக். 73. https://books.google.com/books?id=8ixuAAAAMAAJ. 
  2. Govind Sakharam Sardesai (rao bahadur) (1948). New History of the Marathas: The Expansion of the Maratha Power, 1707-1772. Phoenix Publications. பக். 468. https://books.google.com/books?id=7CAIAQAAIAAJ. 
  3. Tony Jaques (2007). Dictionary of Battles and Sieges: P-Z. Greenwood Publishing Group. பக். 838. https://books.google.com/books?id=tW_eEVbVxpEC. 
  4. G. T. Kulkarni; M. R. Kantak (1980). Battle of Kharda: Challenges and Responses. Deccan College, Post-Graduate & Research Institute. பக். 43. https://books.google.com/books?id=zrxAAAAAMAAJ. 
  5. Journal of the University of Bombay, Volume 27. University of Bombay. 1958. பக். 12. https://books.google.com/books?id=mFlwAAAAIAAJ. 
  6. Ramesh Chandra Majumdar (1977). The History and Culture of the Indian People: The Maratha Supremacy. Bharatiya Vidya Bhavan. பக். 829. https://books.google.com/books?id=BXtDAAAAYAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்தல்_சுந்தர்&oldid=3827813" இலிருந்து மீள்விக்கப்பட்டது