சத்தியாசிரயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சத்யஸ்ரயா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சத்தியாசிரயன் (Satyasraya ஆட்சிக்காலம் கி.பி.997-1008 ) சத்திகா, இரிவபெட்டங்கா என்பவை இவரது வேறு பெயர்கள். இவர் ஒரு மேலைச் சாளுக்கிய மன்னனாவார். சத்தியாசிரயன் சோழர், பரமரா மன்னர்கள், மத்திய இந்தியாவின் செடி அரசு, குஜராத் சாளுக்கியர் (இந்தியாவின் தெற்குச் சாளுக்கியரைக் குழப்பிக் கொள்ளக் கூடாது ) ஆகியோரிடம் பல போர்களைப் புரிந்தார். இந்த போர்களின் முடிவுகள் வெற்றி தோல்விகளையுடைய கலவையாகும். [1] இவரது தந்தை இரண்டாம் தைலப்பன் ஆட்சியின் போது இளவரசனாக இருந்த சத்தியாசிரயன் தன்னை ஒரு சிறந்த வீரனாக நிலைநிறுத்திக்கொண்டான். [2] சத்தியாசிரயன் கன்னடப் புலவரான் ரண்ண என்பவரை ஆதரித்தார். இப்புலவர் சத்தியாசிரயனை வலிமையில் பாண்டவ இளவரசன் பீமனுடன் தனது காவியமான சாகசபீமவிஜய-வில் ஒப்பிட்டுள்ளார்.[3][4][5] இவர் அகலவர்சா, அகலன்கச்சாரிதா, சாகசபீமா போன்ற பட்டங்களைக் கொண்டிருந்தார். [6]

மேற்கோள்[தொகு]

  1. Kamath (1980). p.101
  2. Sastri(1955), p.164
  3. Narasimhacharya (1988), p.18
  4. Sastri (1955), p.356
  5. Kamath (1980) p.101
  6. Kamath (1980), p.102

குறிப்புகள்[தொகு]

  • Chopra, P.N.; Ravindran, T.K.; Subrahmanian, N (2003) [2003]. History of South India (Ancient, Medieval and Modern) Part 1. New Delhi: Chand Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-219-0153-7.
  • Kamath, Suryanath U. (2001) [1980]. A concise history of Karnataka : from pre-historic times to the present. Bangalore: Jupiter books. LCCN 80905179. இணையக் கணினி நூலக மைய எண் 7796041.
  • Narasimhacharya, R (1988) [1988]. History of Kannada Literature. New Delhi: Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0303-6.
  • Sastri, Nilakanta K.A. (2002) [1955]. A history of South India from prehistoric times to the fall of Vijayanagar. New Delhi: Indian Branch, Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-560686-8.
  • Sen, Sailendra Nath (1999) [1999]. Ancient Indian History and Civilization. New Age Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-224-1198-3.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியாசிரயன்&oldid=3759316" இலிருந்து மீள்விக்கப்பட்டது