சஞ்சனா நடராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சஞ்சனா நடராஜன்
பிறப்புசென்னை, இந்தியா
மற்ற பெயர்கள்சஞ்சனா மோகன்
பணிவிளம்பர மற்றும் திரைப்பட நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2012 முதல் தற்போது வரை

சஞ்சனா நடராஜன் (Sanchana Natarajan) ஒரு இந்திய விளம்பர மற்றும் திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இறுதி சுற்று (2016) மற்றும் 2.0 (2018) உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். பாலாஜி மோகனின் வலைத் தொடரில் வெளியான அஸ் ஐ'ம் சஃபிரிங் ஃப்ரம் காதலில் (2017) நடித்து புகழடைந்தார்.[1][2]

தொழில்[தொகு]

சஞ்சனா எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் பட்டம் எடுப்பதற்கு முன்னர் சென்னை அண்ணா நகரில் உள்ள சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசே பள்ளியில் தனது கல்வியை முடித்தார். கல்லூரியில் அவர் படித்துக் கொண்டிருக்கும் போது, அவர் ஆடைகலன் வடிவமைப்புத் துறையில் ஆர்வம் கொண்டார். மற்றும் விளம்பர நடிகைகள் மற்றும் ஆடைகலன் வடிவமைப்பாளர்களுடன் தொடர்புகொண்டு அத்துறையில் தன் அறிவை வளர்த்துக் கொண்டார். இது மாடலிங் மற்றும் நடிப்புக்கான ஒரு உறவை வளர்த்துக் கொள்ள வழிவகுத்தது. சுனில் மேனன், ஸ்ரீனி சுப்பிரமணியன் மற்றும் டூலு உள்ளிட்ட சென்னையில் உள்ள நடன இயக்குநர்கள் மற்றும் ஆடைகலன் வடிவமைப்பாளர்களின் முன்னிலையில் அவர் போட்டி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். 2012 ஆம் ஆண்டில் மிஸ் தென் இந்தியா போட்டியில் பங்கேற்றார்.[3][4]

2013 இல், ராஜ் டி.வி யின் தொலைக்காட்சி நிகழ்ச்சியான தமிழ் பேசும் கதாநாயகியில் பங்கேற்றார், அதில், சிறந்த தமிழ் பேசும் முன்னணி நடிகைக்கான , முதல் பரிசைப் பெற்றார். இதன் விளைவாக, சஞ்சனாவிற்கு, பாலாஜி சக்திவேலின் ரா ரா ராஜசேகரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தயாரிப்பாளர்களான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் நிதி நெருக்கடியின் விளைவாக 2014 ஆம் ஆண்டில் படப்பிடிப்பைத் தொடங்கிய போதும் இந்த படம் வெளியிடப்படவில்லை.[5] பிறகு, சஞ்சனா லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் நெருங்கி வா முத்தமிடாதே (2014) திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார்.[6]

பின்னர் இயக்குநர் பாலாஜி மோகனுக்கு அறிமுகமானார், அவருடைய குறும் படமான ஜீபூம்பாவில் பணிபுரிந்தார் .[7] இந்த சமயத்தில், அவர் ஒரு குத்துச்சண்டை பயிலும் மாணவராக ஒரு சிறிய வேடத்தில் சுதா கொங்கராவின் இருமொழிப் படமான இறுதிச்சுற்றில் (2016) நடித்தார். தமிழில், மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடித்த இந்தத் திரைப்படத்தின் வெற்றி, சுதாவிற்கு தெலுங்கில் இந்தப் படத்தை எடுக்கத் தூண்டியது. அதனால், அடுத்த வருடத்தில் வெங்கடேஷ் நடித்த குரு (2017) என்கிற தெலுங்குப் படத்தில் இவருக்கு அதே கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.[4][8]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சனா_நடராஜன்&oldid=2701062" இருந்து மீள்விக்கப்பட்டது