சுதா கொங்கரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதா கொங்கரா
இருப்பிடம்சென்னை
படித்த கல்வி நிறுவனங்கள்மகளிர் கிருத்துவக் கல்லூரி, நாகர்கோயில்
பணிதிரைப்பட இயக்குநர்
திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்போதுவரை

சுதா கொங்கரா (Sudha Kongara) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநராவார். திரைக்கதை ஆசிரியராக தமிழ் திரையுலகிலும், தெலுங்கு திரைத்துறையிலும், இந்தித் திரைப்பட உலகிலும் நன்கு அறியப்பட்டவர்.[1][2] இவர் அமைத்த திரைக்கதை இந்திய ஆங்கிலப் படமான மித்ர், மை ஃபிரண்ட் ( Mitr, My Friend) அந்த ஆண்டின் சிறந்த ஆங்கிலப் படத்திற்கான விருதாக 49ஆவது தேசியத் திரைப்பட விருதைப் பெற்றது..[1] இவர் துணை இயக்குநராக ஏழு ஆண்டுகள் மணிரத்தினத்திடம் பணியாற்றியவர்.[3][4] 2016 ஆம் ஆண்டில் இவர் இந்தி திரையுலகில் சாலா காதூர்ஸ் திரைப்படத்தின் வழியாக நுழைந்தார்.[5][6]

வாழ்க்கை[தொகு]

சுதா கொங்கரா ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினத்தில் பிறந்தவர். அங்கேயே தன் பள்ளிப்படிப்பை முடித்தவர். இவர் வரலாறு மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் படிப்பை நாகர்கோயிலில் மகளிர் கிருத்துவக் கல்லூரியில் பயின்றவர்.

பணிகள்[தொகு]

இவர் முதன் முதலில் இயக்கிய தமிழ்த் திரைப்படம் துரோகி (2010) ஆகும். இதன் பிறகு இவர் குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட திரைப்படத்திற்கான கதையை 2013 ஆண்டில் எழுதி, நடிகர் மாதவனிடம் கதையைச் சொன்னார். இக்கதையால் கவரப்பட்ட மாதவன் இந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் படத்தயாரிப்புக்கும் உதவி செய்து படத்தை உயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்ல உதவினார். இந்தப் படம்தான் இறுதிச்சுற்று.[7] .[8]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு
திரைப்படம்
இயக்குநர்
தயாரிப்பு திரைக்கதையாசிரியர்
மொழி குறிப்பு
2010 துரோகி ஆம் ஆம் தமிழ்
2016 இறுதிச்சுற்று ஆம் ஆம் தமிழ்
இந்தி
2020 சூரரைப் போற்று ஆம் ஆம் தமிழ் நவம்பர் 12,2020

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Changing gears successfully". The Hindu. 3 September 2002 இம் மூலத்தில் இருந்து 7 மே 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050507125930/http://www.hinduonnet.com/thehindu/mp/2002/09/03/stories/2002090300270400.htm. பார்த்த நாள்: 13 August 2006. 
  2. "Sudha Kongara". IMDb.
  3. "The girl brigade of Tamil cinema - Behindwoods.com - Tamil Movie Slide Shows - Drohi - Sudha - Anjana - Suhasini Mani Ratnam - Revathy - Priya - Madhumita - J S Nandhini".
  4. "Saala Khadoos Director on Mani Ratnam and Rajkumar Hirani". NDTVMovies.com.
  5. "Madhavan gears up for the release of Irudhi Suttru". The Hindu. 2016-01-09. பார்க்கப்பட்ட நாள் 2016-01-28.
  6. "Saala Khadoos review: Madhavan delivers a knockout performance in an otherwise average film". Firstpost.
  7. Gupta, Rinku (2014-12-16). "Madhavan's New Boxer Look Revealed". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2015-08-12.
  8. "Hollywood Ho! - Hosur". The Hindu. 2013-09-29. பார்க்கப்பட்ட நாள் 2015-08-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதா_கொங்கரா&oldid=3885208" இலிருந்து மீள்விக்கப்பட்டது