ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்
இயக்கம்கார்த்திக் சுப்புராஜ்
தயாரிப்புகார்த்திகேயன் சந்தானம்
எஸ். கதிரேசன்
அலங்கார பாண்டியன்
கதைகார்த்திக் சுப்புராஜ்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ். திருநாவுக்கரசு
படத்தொகுப்புஷபீக் முகமது அலி
கலையகம்ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்
ஐந்து நட்சத்திர படைப்புகள்
இன்வெனியோ தோற்றம்
விநியோகம்ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ் (வட இந்தியா)
ரெட் ஜெயண்ட் மூவிசு (தமிழ்நாடு)
காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட் (தெலுங்கானா)
வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் (வெளிநாடு)
வழிப்போக்கர் படங்கள் (கேரளா)
வெளியீடு10 நவம்பர் 2023 (2023-11-10)
ஓட்டம்172 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் ( ஜிகர்தண்டா 2 என்றும் அழைக்கப்படுகிறது) என்பது கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கி 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் மற்றும் இன்வெனியோ ஆரிஜின் ஆகியவற்றின் கீழ் கார்த்திகேயன் சந்தானம், எஸ். கதிரேசன் மற்றும் அலங்கார பாண்டியன் ஆகியோர் இத்திரைப்படத்தினைத் தயாரித்துள்ளனர். ஜிகர்தண்டா (2014) படத்தின் தொடர்ச்சியான இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே. சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படம் ஆகஸ்ட் 2022 இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவை திரு செய்திருக்கின்றார் மற்றும் ஷபீக் முகமது அலி படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 10 தேதி தீபாவளிப் பன்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

கதை[தொகு]

1975 இல், தமிழ் சினிமாவின் முதல் கருமை நிற நடிகராக ஆசைப்படும் பாண்டியன் மதுரையில் ஒரு பிரபலமான ரௌடி ஆவார். பாண்டியா என்ற தலைப்பில் சத்யஜித் ரேயின் முன்னாள் உதவி இயக்குனரான ரே தாசனை, கிளின்ட் ஈஸ்ட்வுட் பாணியிலான மேற்கத்திய திரைப்படத்தை தமிழ்நாட்டில் இயக்கச் செய்கின்றார். படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது, பாண்டியனின் எதிரிகள் அவரைப் பல்வேறு வகையில் தாக்கத்தொடங்குகின்றார்கள் தொடங்குகிறார்கள், இதனால் படப்பிடிப்புக்குப் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. [1]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jigarthanda Double X Trailer Breakdown: Raghava Lawrence, SJ Suryah starrer seems to be a blend of genres".
  2. "Jigarthanda Double X release date locked! Here's when SJ Suryah and Raghava Lawrence's action entertainer will hit screens". 15 May 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-02.
  3. "Karthik Subbaraj's Jigarthanda Double X gets release date".
  4. "Karthik Subbaraj's 'Jigarthanda Double X': A 'kind of teaser' featuring SJ Suryah, Raghava Lawrence out". தி இந்து. 11 December 2022. https://www.thehindu.com/entertainment/movies/karthik-subbarajs-jigarthanda-double-x-a-kind-of-teaser-featuring-sj-suryah-raghava-lawrence-out/article66251044.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிகர்தண்டா_டபுள்எக்ஸ்&oldid=3826691" இலிருந்து மீள்விக்கப்பட்டது