சஜ்னா நஜாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஜ்னா நஜாம்
பிறப்புசிராயின்கீசு, கேரளம், இந்தியா
பணிநடன இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2000–முதல்
வாழ்க்கைத்
துணை
முகமது நஜாம்
பிள்ளைகள்2
உறவினர்கள்சனா அல்தாப் (மருமகள்)
விருதுகள்கேரள மாநில திரைப்பட விருது-சிறந்த நடன இயக்குநர், 2014, விக்ரமாதித்யன்

சஜ்னா நஜாம் (Sajna Najam; பிறப்பு 22 பிப்ரவரி 1971) ஓர் இந்திய நடனம் நடன இயக்குநர் அனைத்துப் பிராந்தியத் திரைப்படங்களிலும் பணியாற்றியவர் ஆவர். திரைப்படங்களில் பணியாற்றுவதற்கு முன்பு, தொலைக்காட்சி மற்றும் மேடை நிகழ்வுகளில் தனது கலை வாழ்க்கையினை 2000ஆம் ஆண்டில் தொடங்கினார். 2014-ம் ஆண்டு சிறந்த நடன இயக்குநருக்கான கேரள மாநில விருதை வென்றார் . இந்த விருதினை லால் ஜோஸ் இயக்கிய விக்ரமாதித்யன் திரைப்படத்திற்காக இவர் பெற்றார். மூத்த திரைப்பட நடிகர் பிரேம் நசீர் சஜ்ஞாவின் உறவினர்.[1][2][3][4]

இளமை[தொகு]

சஜ்னா நஜாம் திருவனந்தபுரத்தின் சிராயின்கீசில் எம். ஏ. நாசர் மற்றும் ஆயிசா ஆகியோரின் மகளாக ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாத்தா எம். ஏ. ரஷீத் 1957ஆம் ஆண்டில் தனது முதல் திரையரங்கத்தை கட்டிஜா என்ற பெயரில் கட்டினார். இது கேரளாவின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவரது முதல் படமான கூடபிரப்பு பிரேம் நவாசுடன் (இவர் மலையாளத் திரைப்பட நாயகன் பிரேம் நசீரின் இளைய சகோதரர்) அறிமுகமானார். மலையாள மொழியின் சிறந்த கவிஞரும் பாடலாசிரியருமான வயலார் ராமவர்ம திரைப்பட வாழ்க்கையிலும் இந்தப் படம் அறிமுகப் படமானது. இவருக்கு நடிகை சனா அல்தாப்பின் தாயார் சமீனா அல்தாப் என்ற சகோதரி உள்ளார்.

பணி[தொகு]

சஜ்னா 2000ஆம் ஆண்டில் தனது நடன வாழ்க்கையைத் தொடங்கினார். பல மெய்க்காட்சி நிகழ்ச்சிகளுக்கான அலங்காரம் மற்றும் நடன இயக்குநராகப் பணியாற்றினார். இவரும் இவரது குழுவான" ஜரினன்ஸ் " தொலைக்காட்சித் துறையில் தங்கள் அடையாளத்தை உருவாக்கினர். தொலைக்காட்சியினைத் தொடர்ந்து திரையுலகிலும் பணியாற்றினார். இயக்குநர் லால் ஜோசின் திரைப்படம் ஒன்றில் நடனமாட முன்வந்தபோது இவரது வாழ்க்கை மாறியது. சஜ்னா சிறந்த நடன விருதினை 2014-இல் விக்ரமாதித்யன் திரைப்படத்திற்காகப் பெற்றார். 2020-இல் இவர் விஜய் சேதுபதியுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தில் நடித்தார்.[5][6]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு படம்
2020 அல் மல்லு
2019 அர்ஜென்டினா பேன்சு காட்டோரகடவு
2019 அல்லு ராமேந்திரன்
2018 ஒரு குப்ரசித்த பையன்
2018 பரோல் (2018 திரைப்படம்)
2017 காட்டு
2017 அயல் ஜீவிச்சிரிப்புண்டு
2017 சகாவு (2017 திரைப்படம்)
2017 பஷீரிந்தே பிரேமலேகணம்
2017 சோலோ (2017 திரைப்படம்)
2016 குட்டிக்கல்லுண்டு சூக்ஷிக்குக
2015 மிலி (2015 திரைப்படம்)
2015 கும்பசாரம்
2015 திங்கள் முதல் வெள்ளி வரை
2015 சந்திரெட்டன் எவிடேயா
2015 கேஎல் 10 பத்து
2014 விக்ரமாதித்யன்
2014 மங்க்லிஷ் (திரைப்படம்)
2013 அயல்
2006 பால்யம்
2005 கல்யாண குரிமணம்

தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "പുരസ്കാര വേദിയിൽ വിങ്ങിപ്പൊട്ടി കൊറിയോഗ്രഫർ സജ്‌നാ നജാം; വിഡിയോ". ManoramaOnline (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-25.
  2. "Queer Malayalees claim street with dance, fashion show and songs". Asianet News Network Pvt Ltd (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-25.
  3. "ഇതൊക്കെ സിമ്പിളല്ലേ...ഞെട്ടിച്ച് ലേഡി ഇത്തിക്കര പക്കി | sajna najam as lady Ithikkara Pakki". vanitha.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-25.
  4. Sreekumar, Priya (2016-09-28). "Choosing her best moves: Sajna Nigam". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-25.
  5. "Director Cheran returns with 'Thirumanam'". gulfnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-25.
  6. "Wafa Khatheeja Rahman: Anoop used to brief me the scenes and I'd form my own lines in Beary for them". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஜ்னா_நஜாம்&oldid=3917797" இலிருந்து மீள்விக்கப்பட்டது