சனா அல்தாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சனா அல்தாப்
பிறப்புகொச்சி, கேரளா, இந்தியா
பணி
செயற்பாட்டுக்
காலம்
2013–முதல்
உறவினர்கள்சஜ்னா நஜாம் (அத்தை)

சனா அல்தாப் (Sana Althaf) என்பவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவரும் ஓர் இந்திய நடிகை ஆவார்.[1][2]

தொழில்[தொகு]

கேரளாவின் கொச்சியில் அல்தாப் மற்றும் சமீனா அல்தாப் இணையருக்கு மகளாக சனா பிறந்தார். கொச்சி உள்ள பவனின் ஆதர்சா வித்யாலயா கல்வி பயின்றார். நடிப்புத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்பு இவர் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தார்.[3] விக்ரமாதித்யன் படத்தில் துல்கர் சல்மானின் சகோதரியாக அறிமுகமானார், சனா. இவரது அத்தை சஜ்னா நஜம் மூலம் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. பின்னர் மரியம் முக்கு படத்தில் பகத் பாசிலின் இணையா சலோமி என்ற பெண் கதாநாயகியாக நடித்தார். மேலும் இராணி பத்மினியில் மலையேறுபவராகவும் நடித்தார்.[4] சென்னை 600028 II: இரண்டாம் இன்னிங்சில் அனுராதாவாக நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார்.[5] பின்னர் இவர் பர்கான் பாசிலுடன் பசீரிண்டே பிரேமலேகானில் சுக்ராவாக நடித்தார்.[6] இதன் பின்னர் சனா, ஒடியானில் மஞ்சு வாரியரின் சகோதரி மீனாட்சியாக நடித்தார்.[7] பின்னர் இவர் ஆர். கே. நகர் மற்றும் பஞ்சராக்சாரம் ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார்.[8][9]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் பங்கு மொழி மேற்.
2014 விக்ரமாதித்யன் சுருதி மலையாளம் [10]
2015 மரியம் முக்கு சலோமி [11]
ராணி பத்மினி மலையேற்றக்காரர் [10]
2016 சென்னை 600028 II அணுராதா தமிழ் [12]
2017 பஷீரிந்தே பிரேமலேகணம் சுக்ரா மலையாளம் [13]
2018 ஒடியன் மீனாட்சி
2019 ஆர். கே. நகர் ரஞ்சினி தமிழ் [14]
பஞ்சராக்சராம் ஜீவிகா [15]

மேற்கோள்கள்[தொகு]

  1. Thomas, Elizabeth (14 July 2017). "Character assimilation: Sana Althaf". Deccan Chronicle.
  2. "No movies till board exams for Sana Althaf". The New Indian Express. 25 January 2017.
  3. "I enjoyed shooting in the rain: Sana Althaf". 28 January 2015. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/I-enjoyed-shooting-in-the-rain-Sana-Althaf/articleshow/46029418.cms. 
  4. "Sana Althaf spotted at the launch of Aashiq Abu's Rani padmini in Kochi". 14 April 2015. http://timesofindia.indiatimes.com/entertainment/events/kochi/Sana-Althaf-spotted-at-the-launch-of-Aashiq-Abus-Rani-padmini-in-Kochi/articleshow/46907506.cms. 
  5. My character is very much relevant to the story
  6. Suhra is very close to my heart: Sana Althaf
  7. ദുല്‍ഖറിന്‍റെ അനിയത്തി; മ‌‍ഞ്ജുവിന്‍റെയും: സിനിമയിലെ 'ബ്ലാക്ക്ബെൽറ്റു’കാരി: അഭിമുഖം
  8. Sana and Vaibhav in Venkat Prabhu's production
  9. Five friends in quirky supernational thriller
  10. 10.0 10.1 S, Gautham (16 October 2018). "All hopeful". Deccan Chronicle.
  11. "Sana replaces Hima in Mariyam Mukku". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 October 2014.
  12. Sana Althaf comes to Kollywood
  13. Sana Althaf to romance Farhaan Faasil in her next
  14. "'RK Nagar is not a political film'". The New Indian Express. 30 May 2017.
  15. "Pancharaksharam to be a supernatural thriller". The New Indian Express. 18 July 2018. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சனா_அல்தாப்&oldid=3920434" இலிருந்து மீள்விக்கப்பட்டது