சக்கிமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சக்கிமங்கலம் (Sakkimangalam), தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், சக்கிமங்கலம் ஊராட்சியில் அமைந்த வருவாய் கிராமம் ஆகும். மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். மதுரைக்கு கிழக்கே 8 கிமீ தொலைவில், வைகை ஆற்றின் வடகரையில் சக்கிமங்கலம் உள்ளது. [1]

மதுரை மாநகராத்தின் நகர்புறத்தில் அமைந்த இக்கிராமத்தின் அஞ்சல் சுட்டு எண் 625201;இதன் அஞ்சலகம் சிலைமானில் உள்ளது தொலைபேசி குறியீடு எண் 04549 ஆகும். சக்கிமங்கலத்தின் சௌத் இந்தியன் வங்கியின் கிளை உள்ளது.

சக்கிமங்கலத்தின் குடியிருப்புகள்[தொகு]

 • சௌராஷ்டிரா காலனி
 • புவனேஸ்வரி காலனி
 • அம்பேத்கர் நகர்
 • சமத்துவபுரம்
 • அன்னை இந்திரா நகர்
 • இ. புதூர்
 • எல் கே டி. நகர்
 • பசும்பொன் நகர்
 • தேவர் நகர்
 • பி டி ஆர் காலனி
 • நரிக்குறவர் காலனி

அருகமைந்த சிற்றூர்கள்[தொகு]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1,141 வீடுகள் கொண்ட சக்கிமங்கலத்தின் மொத்த மக்கள்தொகை 4,.428 ஆகும். அதில் ஒடுக்கப்பட்டோர் 13,77 (31.10%) ஆகவுள்ளனர். எழுத்தறிவு 80.18% ஆகவுள்ளது. இங்கு 2402 தொழிலாளர்கள வாழ்கின்றனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 511 ஆகவுள்ளனர். இக்கிராமத்தில் தமிழ், தெலுங்கு, சௌராடிரம் பேசப்படுகிறது. இக்கிராமத்தின் மக்கள்தொகையில் 40% சௌராட்டிர கைத்தறி நெசவாளர் குடும்பத்தினர் ஆவார். [2]

அருகமைந்த கல்வி நிலையங்கள்[தொகு]

 • வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, விரகனூர் [3]
 • வேலம்மாள் மேனிலைப் பள்ளி, விரகனூர் [4]
 • கே எல் என் பாலிடெக்னிக் கல்லூரி, கோழிமேடு
 • கே எல் என் சிபிஎஸ்சி மேனிலைப் பள்ளி, கோழிமேடு

மேற்கோள்கள்[தொகு]

 1. Sakkimangalam
 2. Sakkimangalam Populaion Census 2011
 3. வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, விரகனூர் 625009
 4. VELAMMAL MATRICULATION HR. SEC. SCHOO, விரகனூர், மதுரை 625009

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கிமங்கலம்&oldid=2516784" இருந்து மீள்விக்கப்பட்டது