விரகனூர்
விரகனூர் (Viraganur), தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை (தெற்கு) வட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், விரகனூர் ஊராட்சியில் அமைந்துள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 625009 ஆகும். தொலைபேசி குறியீடு எண் 04549 ஆகும். விரகனூர், திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]
அமைவிடம்
[தொகு]விரகனூர், மதுரை - வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு கிழக்கே மூன்று கிமீ தொலைவில், இராமேஸ்வரம் சாலையில், வைகை ஆற்றின் கரையில் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது. வாரணாசி - கன்னியாகுமரியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா) இதனருகே செல்கிறது.
அருகமைந்த குடியிருப்புகள்
[தொகு]- கோழிமேடு
- ஐராவதநல்லூர்
- வண்டியூர்
- ராஜா நகர்
- ஏஞ்சல் நகர்
அருகமைந்த கல்வி நிறுவனங்கள்
[தொகு]- தியாகராசர் கல்லூரி
- தியாகராசர் மாடல் மேனிலைப் பள்ளி
- சௌராட்டிர மேல்நிலைப் பள்ளி
- கே எல் என் நாகசுவாமி பாலிடெக்னிக் கல்லூரி
- கே எல் என் நாகசுவாமி மேனிலைப் பள்ளி
- வேலம்மாள் மேனிலைப் பள்ளி
- வேலம்மாள் பொறியல் கல்லூரி
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,826 குடும்பங்களையும் கொண்ட இவ்வூரின் மக்கள்தொகை 7,121 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 87.3% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 968 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 428 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 902 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 969 மற்றும் 0 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.87%, இசுலாமியர்கள் 0.41%, கிறித்தவர்கள் 3.62%, மற்றும் பிறர் 0.10% ஆகவுள்ளனர். [2] இங்கு தமிழ் மற்றும் சௌராட்டிர மொழிகள் பேசப்படுகிறது.