கோலியாத் சிலந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலியாத் பறவை உண்ணும் சிலந்தி
Theraphosa blondi MHNT.jpg
தெரபோசா ப்லோண்டி, முதிர் உயிரி
Not evaluated (IUCN 3.1)
உயிரியல் வகைப்பாடு
திணை: அனிமேலியா
தொகுதி: ஆர்த்ரோபோடா
வகுப்பு: அராக்கினிடா
வரிசை: அரானியே
துணைவரிசை: மைகளோமார்பெ
குடும்பம்: தெரபோஸிடே
பேரினம்: 'தெராபோஸா
இனம்: தெ. பிலோண்டி
இருசொற் பெயரீடு
தெரபோசா பிலோண்டி
(லேட்டரய்லி, 1804)
வேறு பெயர்கள்
  • தெ. பிலோண்டி
  • தெ. பிலோண்டி

கோலியாத் சிலந்தி என்பது வடக்கு தென் அமெரிக்காவின் மழைக் காடுகளில் காணப்படும் ஒருவகைச் சிலந்தியாகும். இது கோலியாத் பறவை உண்ணும் சிலந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தச் சிலந்தி உருவம் மற்றும் எடையின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய சிலந்தி ஆகும். ஆனால் கால் நீட்ட அளவில் இந்தச் சிலந்தி பெரிய வேட்டைக்காரச் சிலந்திக்கு அடுத்து மிகப்பெரிய சிலந்திகளில் இரண்டாவதாக உள்ளது. 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலிருந்து மரியா சிபிலா மெரியான் என்பவரால் "பறவை-உண்ணல்" என்றழைக்கப்படும் நடைமுறை உள்ளது.[தெளிவுபடுத்துக]

வாழ்விடம்[தொகு]

கோலியாத் பறவை உண்ணும் சிலந்தியானது வடக்கு தென் அமெரிக்காவில் உள்ள மேய்ச்சல் வனப்பகுதிகளில் காணப்படுகிறது. சூரினாம், கயானா, பிரஞ்சு கயானா, வடக்கு பிரேசில் மற்றும் தெற்கு வெனிசுலா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. குறிப்பாக அமேசான் மழைக்காடுகளில் காணப்படுகிறது. இந்தச் சிலந்தி சதுப்பு நிலம், ஆழமான புற்கள் உள்ள இடங்களில் வாழ்கிறது. இது ஒரு இரவு நேர உயிரியாகும்.[3] இது வடகிழக்கு தென் அமெரிக்காவில் உள்ளூர் உணவாகும். உறிஞ்சும் முடிகள் மற்றும் வாழை இலைகளை வறுத்து உணவானது தயாரிக்கப்படுகிறது

வாழ்க்கை சுழற்சி[தொகு]

இந்த கோலியாத் பெண் சிலந்திகள் பிற சிலந்தி இனங்களைப் போல் இனச்சேர்க்கையின் போது ஆண் சிலந்திகளை சாப்பிடுவதில்லை. பெண்கள் 3 முதல் 6 ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்து விடுகிறது .பெண் சிலந்திகளின் சராசரி ஆயுட்காலம் 15 முதல் 25 வருடங்கள் ஆகும் .ஆண் சிலந்திகளின் சராசரி ஆயுட்காலம் 3 முதல் 6 வருடங்கள்ஆகும். ஆண் சிலந்திகள் முதிர்ச்சிக்குப் பிறகு இறந்து விடுகிறது. கோலியாத் சிலந்தியின் உடல், வயிறு, கால்கள் ஆகியவற்றில் முடிகள் காணப்படுகின்றன . பெண் சிலந்திகள் 100 முதல் 200 முட்டைகள் வரை இடுகின்றன .சிலந்திகள் இடும் முட்டையானது இரண்டு முதல் மூன்று வருடங்களுக்குள் இளம் சிலந்தி நிலையை அடைகின்றது .

உடல் அமைப்பு[தொகு]

இந்த சிலந்திகள் 28 செமீ (11 அங்குலம்) கால் நீட்டிப்பு இடைவெளியினைப்பெற்றுள்ளன .உடல் 11.9 செமீ (4.7 அங்குலம்) வரை நீளமும், 175 கிராம் (6.2 அவுன்ஸ்) வரை எடையும் கொண்டுள்ளது.[5] பெரும்பாலான ட்ராண்ட்டுலா இன சிலந்திகளில் முதல் ஜோடி கால்களில் இருக்கும் டிபியல் ஸ்பர்ஸ் கோலியாத் சிலந்திகளில் காணப்படுவதில்லை .

பாதுகாப்பு[தொகு]

கோலியாத் பறவை உண்ணும் சிலந்திகளை அச்சுறுத்தும் போது அவைகள் தங்களின் வயிற்றின் பின்னங்காலினை தேய்த்து அதன் பழுப்பு நிற முடிகளை உதிர்த்து தோலில் கடுமையான எரிச்சலை உண்டுசெய்கின்றன . [6] இந்த எரிச்சலை உண்டாக்கும் முடிகள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியது . இந்த கோலியாத் பறவை உண்ணும் சிலந்திதான் ட்ராண்ட்டுலா இனங்களில் அதிக தீமை விளைவிக்க கூடியதாகும்.அனைத்து டரண்டுலா இன சிலந்திகளை போல , கோலியாத் பறவை உண்ணும் சிலந்தி ஒரு மனித தோலினை உடைப்பதற்கு போதுமான விஷ பைகளையும் முட்களையும் (1.9-3.8 செமீ அல்லது 0.75-1.50 உள்ள) கொண்டுள்ளன . இவைகள் தங்களை அச்சுறுத்தும் போது விஷ பற்களினால் தாக்க தெரிந்து வைத்து இருக்கின்றன. ஆனால் இந்த சிலந்திகளின் விஷம் ஒரு குளவியின் விஷத்திற்கு சமமானது ஆகும் . இந்த வகையி சிலந்திகள் பொதுவாக மனிதர்களை தற்காப்பிற்காக மட்டுமே கடிக்கிறது , இவை பெரும்பாலும் ("உலர்ந்த கடி" என்று அழைக்கப்படுகின்றன) மோசமான விளைவை ஏற்படுத்தாது.

உணவுமுறை[தொகு]

கோலியாத் பறவை உண்ணும் சிலந்திகள் என்ற பெயரை கொண்டிருந்தாலும் இந்த சிலந்திகள் பறவைகளை இவை முதன்மை உணவாக உண்ணுவதில்லை . மாறாக காட்டுப்பகுதியில் இருக்கும் மண்புழுக்கள் மற்றும் சிறிய தேரைகள் போன்றவை அதன் முதன்மையாக உணவு ஆகும்[7]. இவற்றின் அளவு மற்றும் சந்தர்ப்பவாத வேட்டையாடும் நடத்தை காரணமாக இந்த இனங்கள் பல்வேறு வகையான பூச்சிகள் மற்றும் சிறிய நிலத்தில் வாழும் முதுகெலும்புகளை உண்ணுகின்றன .பொதுவாக இந்த கோலியாத் சிலந்தி எலி, தவளை, தேரைகள் , பல்லிகள் மற்றும் பாம்புகள் ஆகியவற்றினை உணவாக உட்கொள்கின்றன.[8]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலியாத்_சிலந்தி&oldid=3059000" இருந்து மீள்விக்கப்பட்டது