தெரபோசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெரபோசா
தெரபோசா பிளாண்டி, பெண்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
மைகளோமார்பெ
குடும்பம்:
தெரபோசிடே
பேரினம்:
மாதிரி இனம்
தெரபோசா பிளாண்டி
(லேட்ரெல்லே, 1804)
வேறு பெயர்கள் [2]
  • சூடோதெரபோசா திண்டர், 1991[1]
  • தெரபோசியா தால், 1901

தெரபோசா (Theraphosa) என்பது தென் அமெரிக்க தரான்டுலாவின் ஒரு பேரினமாகும்., இது 1805ஆம் ஆண்டில் சார்லஸ் அதானசு வால்கெனேர் என்பவரால் முதலில் விவரிக்கப்பட்டது. தெரபோச சிலந்திகள் அறியப்பட்ட சிலந்திகளுள் மிகப்பெரிய சிலந்திகளாகும். மேலும் இவை பொதுவாக ஆங்கிலத்தில் வெளிர்நீல பாத கோலியாத் என்று அழைக்கப்படுகின்றன. இது கயானா, பிரேசில், வெனிசுலா மற்றும் கொலம்பியாவில் காணப்படும் மூன்று சிற்றினங்களைக் கொண்டுள்ளது.[2] இவை தங்கள் உணரடி மற்றும் கால்களின் மயிர்க்கால்களைத் தேய்ப்பதன் மூலம் கரகரப்பொலியினை ஏற்படுத்துகின்றன.

பண்புகள்[தொகு]

இந்த பேரினத்தின் தரான்டுலாக்கள் இவற்றின் பெரிய அளவு மற்றும் கால்களின் மூட்டுச்சில் மற்றும் கணுக்காலுள்ளெலும்பு பிரிவுகளில் நீண்ட முடிகள் இல்லாததின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. முன்பக்க காக்சே 1 மற்றும் 2-ல் ஒலிமீட்டும் முடிகள் இருப்பதால் இதை மேலும் வேறுபடுத்தி அறியலாம். பெண் பூச்சிகளில் தனித்த தனிச்சிறப்பு விந்துப்பை உள்ளது.[3]

நடத்தை[தொகு]

இந்த தரான்டுலாக்கள் தரையில் உள்ள துளைகளில் காணப்படுகின்றன. பொதுவாகப் பயன்படுத்தப்படாத வளைகளில், இவை தத்தெடுத்து தங்கள் சொந்தமாக வாழிடமாகப் பயன்படுத்துகின்றன. இவை பொதுவாக ஆறுகளுக்கு அருகில் காணப்படுகின்றன. மேலும் அதிக அளவு முதுகெலும்பில்லாதவை மற்றும் சிறிய தவளைகள் மற்றும் பல்லிகள் போன்ற மிகச் சிறிய முதுகெலும்பிகளைச் சாப்பிடுகின்றன.[3]

சிற்றினங்கள்[தொகு]

சூலை 2022 உலக சிலந்தி பட்டியல் கீழ்க்கண்ட மூன்று சிற்றினங்களை ஏற்றுக்கொண்டுள்ளது.[4]

ஒரு சிற்றினம் செரிகோபெல்மா பேரினத்திற்கு மாற்றப்பட்டுள்ளது .

  • தெரபோசா பனமனம் கார்ஷ், 1880செரிகோபெல்மா பனமனும்

மேற்கோள்கள்[தொகு]

  1. Bertani, R. (2001). "Revision, cladistic analysis, and zoogeography of Vitalius, Nhandu, and Proshapalopus; with notes on other theraphosine genera (Araneae, Theraphosidae)". Arquivos de Zoologia 36: 316. 
  2. 2.0 2.1 Gloor, Daniel; Nentwig, Wolfgang; Blick, Theo; Kropf, Christian (2020). Gen. Theraphosa Walckenaer, 1805. Natural History Museum Bern. doi:10.24436/2. http://www.wsc.nmbe.ch/genus/3433. பார்த்த நாள்: 2020-06-08. 
  3. 3.0 3.1 Almeida, Marlus Queiroz; Salvatierra, Lidianne; Morais, José Wellington de (2018-08-01). "First record of Theraphosa apophysis (Tinter, 1991) (Araneae, Mygalomorphae, Theraphosidae) in Brazil" (in en). Check List 14 (4): 647–650. doi:10.15560/14.4.647. பன்னாட்டுத் தர தொடர் எண்:1809-127X. https://checklist.pensoft.net/article/26087/download/pdf/. 
  4. "NMBE - World Spider Catalog". wsc.nmbe.ch. பார்க்கப்பட்ட நாள் 2022-07-13.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெரபோசா&oldid=3765225" இலிருந்து மீள்விக்கப்பட்டது