உள்ளடக்கத்துக்குச் செல்

கோபாலசாமி பார்த்தசாரதி (இராஜதந்திரி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபாலசாமி பார்த்தசாரதி
ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி
பதவியில்
ஆகஸ்ட் 1965 – டிசம்பர் 1968
முன்னையவர்பி. என். சக்ரவர்த்தி
பின்னவர்சமர் சென்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1912-07-07)7 சூலை 1912
சென்னை, சென்னை மாகாணம் பிரித்தானிய இந்தியா
இறப்பு1 ஆகத்து 1995(1995-08-01) (அகவை 83)
புது தில்லி, இந்தியா
வேலைபத்திரிக்கையாளர், கல்வியாளர், இராஜதந்திரி

கோபாலசுவாமி பார்த்தசாரதி (Gopalaswami Parthasarathy) (7 ஜூலை 1912 - 1 ஆகஸ்ட் 1995), பெரும்பாலும் ஜிபி என்று அழைக்கப்படும் இவர், ஆகஸ்ட் 1965 முதல் டிசம்பர் 1968 வரை ஐக்கிய நாடுகள் அவையின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றிய இந்தியப் பத்திரிகையாளர் ஆவார். மேலும், கல்வியாளராகவும் இராஜதந்திரியாகவும் இருந்தார்.

காஷ்மீரின் திவான் பகதூராகவும், அரசியலமைப்பு சபையின் உறுப்பினராகவும், பிரதமர் ஜவகர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் அமைச்சராகவும் , மதராஸ் பிரசிடென்சியில் ஒரு அரசு ஊழியராகவும் இருந்த என். கோபாலசாமி அய்யங்காரின் மகனாவார்.[1]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

பார்த்தசாரதி, கோபாலசாமி அய்யங்கார் மற்றும் கோமளம் ஆகியோரின் நான்கு குழந்தைகளில் இளையவர். இவர் சென்னையிலுள்ள பிஎஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர், சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று 1932 இல் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் ஆக்சுபோர்டில் உள்ள வதாம் கல்லூரிக்குச் சென்று 1934 இல் நவீன வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார் [2]

விளையாட்டு வீரர்[தொகு]

இவர் ஒரு திறமையான விளையாட்டு வீரர். மேலும் ஒரு துடுப்பாட்ட வீரராக பல ஆண்டுகளாக ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் பங்கேறுள்ளார். [3] ஓய்வுக்குப் பிறகு இவர் மாநில துடுப்பாட்ட அணியின் தேர்வாளராகப் பணியாற்றினார். மேலும், தமிழ்நாடு துடுப்பாட்டச் சங்கத்தின் வளர்ச்சியில் ஈடுபட்டார். [4] இவர் ஒரு சிறந்த வளைதடிப் பந்தாட்ட வீரராகவும் இருந்தா. இவரது கல்லூரி நாட்களில் கல்லூரி நிலை டென்னிசிலும் விளையாடினார். ஆக்சுபோர்டில் படிக்கும்போது, இவர் துடுப்பாட்டம் மற்றும் வளைதடி பந்தாட்டம் இரண்டிலும் விளையாடினார். [5]

பத்திரிகையாளர்[தொகு]

இவர் ஒரு புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1936 இல் சட்டப் பட்டம் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, தி டைம்ஸ் பத்திரிக்கையில் பின்னர், இந்தியா திரும்பினார். சர்வதேச விவகாரங்களில் செய்தித்தாள் செய்திகளை விரிவுபடுத்தத் தொடங்கிய நேரத்தில் தி இந்துவின் தலையங்க ஊழியராக தனது பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்கினார். [6] 1949 இல், இலண்டனில் உள்ள பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் முதல் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். 1952 இல் இவர் 1954 வரை பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் தலைமை ஆசிரியரானார். [7] 1980 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் ஊடக நிறுவனங்களை மறுசீரமைத்தல், கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் கலாச்சார அடையாளத்தை மேம்படுத்துவதற்கும் தேசிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும் புதுமையான நிகழ்ச்சிகளை ஊக்குவிப்பதற்கும் 14 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்தது. இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது இராஜதந்திர வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோதும் பத்திரிகையுடனான இவரது உறவுகள் வலுப்பெற்று இவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தன. [8]

இராஜதந்திர வாழ்க்கை[தொகு]

பார்த்தசாரதி 1954 இல் ஜவகர்லால் நேருவால் அரசியல் உலகில் களமிறங்கினார். நேரு இராஜதந்திரத்தில் இவரது திறமைகளை அங்கீகரித்தார். மேலும், இந்திய-சீனா விவகாரத்தில் இவரது உதவியைக் கோரினார். இவர் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிலிருந்து வெளியேறி 3 ஆண்டுகளுக்கு இந்தோசீனா விவகாரங்களில் கவனம் செலுத்தினார். இந்தியாவின் வெளிவிவகாரங்களில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். முதலில் கம்போடியாவிலும் பின்னர் வியட்நாமிலும் ஜெனீவா உடன்படிக்கைகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட சர்வதேச கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைமை ஆணையராக பணியாற்றினார். ஒரு புகழ்பெற்ற இராஜதந்திரியாக இவருடைய வாழ்க்கை ஆறு தசாப்தங்களாக நீடித்தது. குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட கம்போடியா மற்றும் வியட்நாமில் சவாலான அரசியல் பணிகளை உள்ளடக்கியது. ஜனவரி 1957 இல் இந்தோனேசியாவில் இந்திய தூதராகப் பணியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து 1958 இல் சீனா மற்றும் மங்கோலியாவிற்கான இந்திய தூதராக பெய்ஜிங்கில் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். [9] 1962 இல் பாக்கித்தானுக்கான உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார் [10] செப்டம்பர் 1965 இல், 1969 வரை ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தர தூதராக நியமிக்கப்பட்டார். நியூயார்க்கில் இவர் பணிபுரிந்த போது, 1966 இல் ஐக்கிய நாடுகளின் பங்களிப்புகளுக்கான குழுவின் தலைவராக பணியாற்றினார். இது பத்து உறுப்பினர்களைக் கொண்ட குழு உறுப்பினர்களிடையே ஐ.நா. செலவினங்களை பங்கீடு செய்வது மற்றும் அவர்களின் மதிப்பீடுகளின் அளவு குறித்து பொதுச் சபைக்கு ஆலோசனை வழங்கியது. [11] 1967 மற்றும் 1968 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றினார். 1967 இல் பாதுகாப்பு அவையின் தலைவராகவும், செப்டம்பர் முதல் டிசம்பர் 1968 வரை உரோடீசியா மீதான பாதுகாப்பு அவை தடைகள் குழுவின் தலைவராகவும் இருந்தார். 1969 இல் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகும், 1970 முதல் 1979 வரை ஐக்கிய நாடுகளின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறங்காவலராகவும், பின்னர் நிர்வாகக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் ஐக்கிய நாடுகள் அவையில் தொடர்ந்து ஈடுபட்டார். 1972 முதல் 1976 வரை நான்கு ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருந்தார். கல்வி, கலாச்சாரம் மற்றும் அறிவியலுக்கான இந்திய-அமெரிக்க துணை ஆணையம் மற்றும் சமூக அறிவியலுக்கான இந்தோ-சோவியத் கூட்டு ஆணையத்தின் தலைவராக, அவர் கல்வி, அறிவியல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு திட்டங்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கினார். இசுடாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியல் அவையின் உறுப்பினராகவும் பணியாற்றினார். [12]

இறப்பு[தொகு]

1995 ஆகஸ்ட் 1 அன்று தனது 83வது வயதில் புது தில்லியில் காலமானார் [1]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Remembering GP the gentle colossus, in தி இந்து; published 7 July 2012; retrieved 25 April 2016
 2. Prasad H., Y. Sharada (1998). G.P.-The Man and His Work: A Volume in Memory of G. Parthasarathi. New Delhi: New Age International. p. 3. இணையக் கணினி நூலக மைய எண் 39986034.
 3. "Gopalaswami Parthasarathi". பார்க்கப்பட்ட நாள் 28 January 2020.
 4. "G.P. and sports", தி இந்து. 4 August 1995.
 5. Prasad 1998, p. 3-4
 6. GP's contribution to journalism recalled, in தி இந்து; published 23 October 2012; retrieved 10 June 2016
 7. Prasad 1998 p.5
 8. "14 member panel for restructuring Govt. media", தி இந்து. 29 November 1980.
 9. Prasad 1998 p.6
 10. "Indian Envoy to Pakistan: G. Parthasarathi Appointed", தி இந்து. 12 October 1962.
 11. "U.N. Committee on Contributions", தி இந்து. 8 September 1966.
 12. Prasad 1998 p.10-11