கோசாமகால் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 17°22′44″N 78°28′05″E / 17.379°N 78.468°E / 17.379; 78.468
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோசாமகால்
Goshamahal
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி எண் 65
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ஐதராபாத்து
மக்களவைத் தொகுதிஐதராபாத்து
மொத்த வாக்காளர்கள்2,86,264
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
த. இராஜா சிங்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023
முன்னாள் உறுப்பினர்த. இராஜா சிங்

கோசாமகால் சட்டமன்றத் தொகுதி (Goshamahal Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதி ஆகும்.[1] தலைநகர் ஐதராபாத்தில் உள்ள 15 தொகுதிகளில் இதுவும் ஒன்று. இது ஐதராபாத்து மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[2][3][4] கோசாமகால் பகுதியில் கணிசமான வட இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த இந்துக்கள் வாழ்கின்றன. இவர்களில் பெரும்பாலோனோர் லோதி சமூகத்தினைச் சார்ந்தவர்கள்.[5]

இந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் த. ராஜா சிங் என்பவர் 2014 சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார். 2008ஆம் ஆண்டுக்கு முன்பு மகாராஜ் கஞ்ச் தொகுதியாக இருந்தது. இதன் சட்டமன்ற உறுப்பினராக பாஜக பிரேம் சிங் ரத்தோர் இருந்தார்.

தொகுதியின் பரப்பளவு[தொகு]

2002ஆம் ஆண்டின் எல்லை நிர்ணயச் சட்டத்தின்படி 2009 தேர்தலுக்கு முன்னர் இத்தொகுதி உருவாக்கப்பட்டது.

சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் சுற்றுப்புறங்களை உள்ளடக்கியது:

அக்கம்
கோசாமகால்
அப்சல் குஞ்ச்
அகபுரா
பொகுல்குண்டா
தூல்பேட்டை
கோடி (பகுதி)
சுல்தான் காட்சிசந்தை
மோசம் ஜாகி சந்தை
நம்பல்லி நிலையச் சாலை
பசீர்பாக் (பகுதி)

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1999 - 2004

(மகாராஜ்கஞ்ச் எல்லை நிர்ணயத்திற்கு முன்)

பிரேம் சிங் ரத்தோர் பாரதிய ஜனதா கட்சி
2004- 2014 முகேஷ் கவுட் இந்திய தேசிய காங்கிரசு
2014-2023 டி.ராஜா சிங் பாரதிய ஜனதா கட்சி
2023
  • ஐதராபாத்து மக்களவைத் தொகுதியில் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் வெற்றி பெற இயலாத ஒரே சட்டமன்றத் தொகுதியாக கோசாமகால் உள்ளது.[6][7] பிரேம் சிங் ரத்தோர்[8] 1999-ல் மகாராஜ்கஞ்சில் பாஜக சார்பில் வெற்றி பெற்றார். பின்னர் அவர் ஒரு எதிர்ப்பின் காரணமாக பதவி விலகினார். பின்னர் பாஜக ராஜா சிங் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mahesh Buddi (20 November 2018). "Cases against former BJP MLA Tiger of tigers sher Raja Singh double in four years". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  2. "TRS, MIM poll pact in the offing". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2014-03-09.
  3. "Telugu Desam Party sees MIM-Congress deal". 2014-04-14.
  4. "Hyderabad MLAs look for safer seats". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2014-03-10.
  5. "How Raja Singh of Hyderabad's Goshamahal Emerged as the New Poster Boy of Hindutva".
  6. "Cong, MIM repeat success story - The Times of India". 2009-05-17.
  7. Yunus Y Lasania (2014-04-17). "Keen contest in Goshamahal".
  8. Mahesh (May 27, 2015). "Which way will the numbers weigh? | Hyderabad News".