சுல்தான் காட்சிசந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்தான் காட்சி சந்தை
Neighbourhood
இந்தியா இந்தியா
மாநிலம்தெலுங்கானா
மாவட்டம்ஐதராபாத்
மாநகரம்ஐதராபாத்
அரசு
 • நிர்வாகம்ஜி. ஹெச். எம். சி. (GHMC)
இனங்கள்அலுவலகம் சார்ந்தது
மொழிகள்அலுவலகம் சார்ந்தது
நேர வலயம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண் PIN500 001
வாகனப் பதிவுடி. எஸ். TS
மக்களவை தொகுதிஐதராபாத்
இணையதளம்telangana.gov.in
AndhraBankKoti

சுல்தான் காட்சி சந்தை (Sultan Bazar) என்பது இந்தியாவில், தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் உள்ள ஒரு பழைய வணிகச் சந்தையாகும்.[1] இது அபிட்சு மற்றும் கோட்டியின் வணிகப் பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது.  இதற்கு  முன்பு, இது வசிப்பிடச் சந்தை என்று வழங்கப்பட்டது.

வணிக பகுதி [தொகு]

இது பெண்களுக்கான, ஆடை மற்றும் வெள்ளிப் பொருள்களை விற்பனை செய்கின்ற பெரிய வணிக வளாகமாகும். இங்கு நூற்றுக்கும் அதிகமான கடைகள் உள்ளன. ஜவுளி, மற்றும் அலங்கார பொருள்கள் பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

போக்குவரத்து[தொகு]

டி. எஸ். ஆர். டி. சி. (TSRTC) கருடா வால்வோ பி9ஆர்ர

 மாநில அரசு தெலுங்கானா மாநில போக்குவரத்துக் கழகம் (TSRTC) மூலம் கோட்டிகு அருகில் உள்ள பெரிய பேருந்து முனையத்தில் இருந்து நகரின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்குகிறது. மிக அருகமையில் MMTS ரயில் நிலையம் கச்சிக்குடா அல்லது மலாக்பெட்டில் உள்ளது. 

பள்ளி[தொகு]

இப்பகுதியில் கேம்பிரிட்ஜ் உயர்நிலை பள்ளி உள்ளது. புகழ்பெற்ற நாடக மகேஷ்வரி பரமேஷ்வரி திரையரங்கமும் இங்கு அமைந்துள்ளது. ஒரு ஜெயின் கோயிலும் சுல்தான் காட்சி சந்தைக்கு அருகில் அமைந்துள்ளது.

இந்த பகுதியில் மின்னணு பொருட்களுக்கான புகழ் பெற்ற தெரு உள்ளது. இது மின்னணு சந்தைத் தெரு அல்லது வங்கித் தெரு என அழைக்கப்படுகிறது.

சாய்பாபா கோவில் ஒன்று கந்த ஸ்வாமி குறுக்கு தெருவில் உள்ளது.

குஜராதி வித்யா மந்திர் மற்றும் அனுமான் வ்யாம்ஷாலா பள்ளியும் இந்த இடத்தில் அமைந்துள்ளது.  

குறிப்புகள்[தொகு]

  1. "Sulthan Bazar Police Station". 2015-02-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-18 அன்று பார்க்கப்பட்டது.