கொரிய ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொரிய ஈப்பிடிப்பான்
வளர்ந்த ஆண் பறவை
வளர்ந்த பெண் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பைசெடுலா
இனம்:
பை. சாந்தோபைஜியா
இருசொற் பெயரீடு
பைசெடுலா சாந்தோபைஜியா
(ஆர்தர் ஹே, 1845)[2]
இனப்பெருக்கப் பரவல் பச்சை நிறத்தில்
வேறு பெயர்கள்

சாந்தோபைஜியா டிரைகலர் (ஹார்ட்லப், 1845)
மியூசிகாபா சாந்தோபைஜியா கே, 1845

கொரிய ஈப்பிடிப்பான் அல்லது மஞ்சள் பிட்ட ஈப்பிடிப்பான் [Yellow-rumped flycatcher (பிசெடுலா சாந்தோபைஜியா)] என்பது கிழக்காசியப் பகுதிகளில் (குறிப்பாக, தென்கிழக்கு சீனா, கொரியா) இனப்பெருக்கம் செய்யும் ஓர் ஈப்பிடிப்பான் இனத்தைச் சேர்ந்த குருவி ஆகும். இந்தியத் துணைக்கண்டத்திற்கு மிகவும் அரிதாக வலசை வரும் இது சென்னையை அடுத்த நன்மங்கலம் வனப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது[3]. இது மங்கோலியா, டிரான்ஸ்பைக்கால், தெற்கு சீனா, கொரியா மற்றும் மேற்கு யப்பான் உள்ளிட்ட கிழக்காசியாவில் இனப்பெருக்கம் செய்கிறது. மலாய் தீபகற்பம் மற்றும் தெற்காசியாவின் சில பகுதிகளில் குளிர்காலத்தில் காணப்படும்.

பிற சிற்றின உறவு[தொகு]

 

பிசெடுலா டிரைகலர்

 
 

பிசெடுலா நார்சிசாசினா

பிசெடுலா சாந்தோபைஜியா

 

பிசெடுலா முகிமேக்கி

 
 

பிசெடுலா கிரிப்தா

 

பிசெடுலா திமோரென்சிசு

பிசெடுலா கார்ட்டெரி

 

பிசெடுலா தும்மெட்ரோரியா

பிசெடுலா பிளாடெனே

பிற சிற்றினங்களுடன் உறவு படம்

சூழலியல்[தொகு]

கொரிய ஈப்பிர்ப்பான் இனப்பெருக்கப் பகுதியாக மஞ்சூரியா, கொரியா மற்றும் சீனா உள்ளது. சியாக்சிகான் பகுதியில் கூடு கட்டுவது முக்கியமாக மே மற்றும் சூன் மாதங்களில் நடைபெறுகிறது. இவை முக்கியமாக மலைகளின் அடிவாரத்தில் உள்ள தாழ்வான பள்ளத்தாக்குகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஒரு இணையின் வரம்பு சுமார் 2000-5000 சதுர மீ. ஆகும். பெண் மட்டும் மூன்று முதல் நான்கு நாட்களில் கூடு கட்டும். ஒரு கூட்டில் 4 முதல் 7 முட்டைகள் வரை இருக்கும். இந்த முட்டைகளை பெண் ஈப்பிடிப்பான் மட்டும் சுமார் 11-12 நாட்களுக்கு அடைகாக்கும். குஞ்சுகளுக்கு உணவளிக்க முதிர்ச்சியடைந்த பறவைகள் கூட்டிலிருந்து சுமார் 70 மீட்டர் (230 அடி) தூரம் சென்று உணவு தேடும். 14-15 நாட்களுக்குப் பிறகு இளம் குஞ்சுகள் பறந்து செல்லும்.[4][5] இது 1989ஆம் ஆண்டு மத்திய இந்தியாவில் குளிர்காலத்தில் முதன்முதலில் இந்தப் பறவை கண்டறியப்பட்டது. இதன் பின்னர் தென்மேற்கு இந்தியா மற்றும் இலங்கையில் குளிர்காலத்தில் கண்டறியப்பட்டது.[6][7]

சீனாவில், இந்தப் பறவையில், புற ஒட்டுண்ணீயான ப்ரோடெரோத்ரிக்சு மெகாகௌலா முதலில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Ficedula zanthopygia". IUCN Red List of Threatened Species 2016: e.T22709325A94202549. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709325A94202549.en. https://www.iucnredlist.org/species/22709325/94202549. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Hay, Arthur (1845). "[untitled]". Madras Journal of Literature & Science 13 (2): 162. 
  3. "ebird -- Yellow-rumped Flycatcher". ebird.org. பார்க்கப்பட்ட நாள் 19 Nov 2021.
  4. Liu, Y; Wang, J (1981). "Studies on the Breeding Behaviour of the Tricolar Flycatcher". Acta Zool. Sin. 27 (3): 287–291. 
  5. Wang, N; Yanyun Zhang; Guangmei Zheng (2007). "Home ranges and habitat vegetation characters in breeding season of Narcissus Flycatcher and Yellow-rumped Flycatcher". Frontiers of Biology in China 2 (3): 345–350. doi:10.1007/s11515-007-0051-1. 
  6. Haribal, Meena (1992). "Yellow-rumped Flycatcher M. zanthopygia: a new addition to the avifauna of the Indian subcontinent.". J. Bombay Nat. Hist. Soc. 88 (3): 456–458. https://biodiversitylibrary.org/page/48673892. 
  7. Holt, Paul I. (2003). "Yellow-rumped flycatcher Ficedula zanthopygia in Kerala.". J. Bombay Nat. Hist. Soc. 100 (1): 145. https://biodiversitylibrary.org/page/48602719. 
  8. Mironov, S. V.; W. Diao; Y. Zhang; C. Zhang; Zh. Yan (2008). "A new feather mite species of the genus Proterothrix Gaud (Astigmatea, Proctophyllodidae) from Ficedula zanthopygia (Hay) (Passeriformes: Muscicapidae) in China.". Acarina 16 (1): 31–38. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரிய_ஈப்பிடிப்பான்&oldid=3583167" இலிருந்து மீள்விக்கப்பட்டது