கொப்புல வெலமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொப்புல வெலமா
வகைப்பாடுஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
மதங்கள்இந்து சமயம்[1]
மொழிகள்தெலுங்கு
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
ஆந்திரப் பிரதேசம், தெலங்காணா

கொப்புல வெலமா (Koppula Velama) அல்லது கொப்பு வெலமா என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் காணப்படும் ஒரு தெலுங்கு விவசாய சாதியாகும். இவர்கள் முதன்மையாக வடக்கு ஆந்திரா பகுதியிலும், மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் சிறிய மக்கள்தொகையுடன் காணப்படுகின்றனர். இவர்கள் ஆந்திரப் பிரதேச அரசால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். [2] இவர்கள் வடக்கு ஆந்திரா பகுதியில் அரசியல் ரீதியாக நல்ல பிரதிநிதித்துவம் பெற்றுள்ளார்கள். [3] இவர்கள் வெலமா சாதியிலிருந்து வேறுபட்டவர். [4]

பெயர்க்காரணம்[தொகு]

தெலுங்கில் 'கொப்பு' என்று அழைக்கப்படும் முடிச்சு வடிவில் தலையில் முடியை வெட்டாமல் தலையில் கட்டும் பழக்கத்திலிருந்து சாதிப் பெயர் தோன்றியிருக்கலாம். எனவே, இவர்கள் கொப்பு வெலமா அல்லது கொப்புல வெலமா என்று அழைக்கப்படுகின்றனர். [5]

வரலாறு[தொகு]

1972 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேச அரசு இச்சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்த்தது. [6] [7] [8] ஆனால் சமூகத் தலைவர்கள் இப்பிரிவில் சேர்ப்பதில் அதிருப்தி அடைந்தனர். மேலும், பட்டியலில் புதிய சமூகங்களை சேர்ப்பதை நிறுத்துமாறு மாநில அரசைக் கோரினர். [6] ஆந்திரப் பிரதேச அரசின் பிற்படுத்தப்பட்ட சாதிகள் பட்டியலில் கொப்புல வெலமா சமூகமும் தங்களைச் சேர்க்க முயல்கிறது. [9]

கொப்பு வெலமாவினர் பொலிநாட்டி வெலமா சாதியினரின் உறவினர் குழுவாகும். அவர்கள் வட ஆந்திரப் பிராந்தியத்திலும் உள்ளனர். இவர்கள் இருவரும் பத்மநாயக வெலமா சாதியிலிருந்து வேறுபட்டவர்கள் ( வெலமா தோரா என்றும் அழைக்கப்படுவார்கள்). [10] [11] [12]

கொப்புல வெலமாவினர் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் கவரா மற்றும் காப்பு சாதியினருடன் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். விசாகப்பட்டினம் மற்றும் அனகப்பள்ளி மாவட்டங்களில் இந்த மூன்று சாதியினரும் பொருளாதார ரீதியாகவும், எண்ணிக்கையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். [13]

குறிப்பிடத்தக்க மக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bahadur), Sarat Chandra Roy (Rai (2004) (in en). Man in India. A.K. Bose. பக். 142. https://books.google.com/books?id=sV4qAQAAIAAJ&q=Koppula+Velama. 
  2. Central List of OBCs for the state of Andhra Pradesh பரணிடப்பட்டது 30 நவம்பர் 2016 at the வந்தவழி இயந்திரம், p. 4 (76 - Koppulavelama)
  3. . 2022-04-08. 
  4. Vidyasagar, S A (2012). "A Saga of Three Villages in Andhra Pradesh". எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி 47 (1): 105–111. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-9976. https://www.jstor.org/stable/23065583. 
  5. Bhaskara Rao, Busi; Dharma Rao, B. (2004) (in en). Man in India. 84-85. A.K. Bose. பக். 142. https://books.google.com/books?id=sV4qAQAAIAAJ&q=Koppu+Velama. 
  6. 6.0 6.1 "Koppula Velamas seek priority in political posts". 12 September 2021. பார்க்கப்பட்ட நாள் 22 April 2023.
  7. The Congress Party in Transition: A Study in Srikakulam District of Andhra Pradesh. 1991. https://books.google.com/books?id=KVKKAAAAMAAJ&q=Koppula. 
  8. Emergence of Gouda Community in Andhra Pradesh Politics: A Historical Perspective (From 1956 TO 2009 A.D.). 2022-03-06. https://books.google.com/books?id=nNpiEAAAQBAJ&dq=Koppula+Velama&pg=PA114. 
  9. "Koppula Velama community seeks BC A tag". 2021-08-24. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/koppula-velama-community-seeks-bc-a-tag/article36090537.ece. 
  10. Murty, K. Ramachandra (2001) (in en). Parties, Elections, and Mobilisation. Anmol Publications. பக். 20. https://books.google.com/books?id=LSeOAAAAMAAJ&q=Koppu. Murty, K. Ramachandra (2001).
  11. Vidyasagar, S A (2012). "A Saga of Three Villages in Andhra Pradesh". எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி 47 (1): 105–111. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-9976. https://www.jstor.org/stable/23065583. Vidyasagar, S A (2012).
  12. Singh, K. S. (1996) (in en). Communities, Segments, Synonyms, Surnames and Titles. இந்திய மானிடவியல் ஆய்வகம். பக். 1854. https://books.google.com/books?id=bfAMAQAAMAAJ&dq=polinati+velama+koppula+velama&pg=PA1854. 
  13. Kalbagh, Chetana (1991) (in en). Women and Development: Women's Struggles for Equality and Emancipation. Discovery. பக். 112. https://books.google.com/books?id=RlIqAAAAYAAJ&q=koppula+velama+gavara. 
  14. 14.0 14.1 Patnaik, Santosh (2019-04-07). "Ayyanna faces an uphill task" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/ayyanna-faces-an-uphill-task/article26764249.ece. 
  15. "Yerran Naidu: A mass leader". NDTV.com. 2 November 2012. பார்க்கப்பட்ட நாள் 2023-04-22.
  16. A Srinivasa Rao (2 November 2012). "Senior TDP leader and former Union minister Yerran Naidu dies in a road accident in Andhra Pradesh". இந்தியா டுடே (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-22.
  17. "Srikakulam loves you, Yem brother". The Times of India. 2004-04-12. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/india/srikakulam-loves-you-yem-brother/articleshow/611391.cms. 
  18. "Senior politicians' sons to take electoral plunge". The Times of India. 2014-01-12. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/visakhapatnam/senior-politicians-sons-to-take-electoral-plunge/articleshow/28694849.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொப்புல_வெலமா&oldid=3818948" இலிருந்து மீள்விக்கப்பட்டது