கிஞ்சராபு எர்ரான் நாயுடு
கிஞ்சராபு எர்ரான் நாயுடு | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1996-2009 | |
முன்னையவர் | கனிதி விசுவநாதம் |
பின்னவர் | கில்லி கிருபா ராணி |
தொகுதி | ஸ்ரீகாகுளம் |
Member of the சட்டப் பேரவை உறுப்பினர் சட்டமன்றம் அரிசந்திரபுரம் | |
பதவியில் 1983–1996 | |
முன்னையவர் | கன்னிபள்ளி அப்பால நரசிம்ம புக்தா |
பின்னவர் | கிஞ்சராபு அச்சன் நாயுடு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நிம்மடா, ஆந்திரப் பிரதேசம் | 23 பெப்ரவரி 1957
இறப்பு | 2 நவம்பர் 2012 ரணஸ்தலம், ஆந்திரப் பிரதேசம் | (அகவை 55)
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
உறவுகள் | கிஞ்சராபு அச்சன் நாயுடு (சகோதரர்) |
பிள்ளைகள் | ராம் மோகன் நாயுடு (மகன்) ஆதிரெட்டி பவானி (மகள்) |
கிஞ்சராபு எர்ரான் நாயுடு (Kinjarapu Yerran Naidu) (23 பிப்ரவரி 1957 - 2 நவம்பர் 2012) ஓர் இந்திய அரசியல்வாதியாவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]எர்ரான் நாயுடு, 23 பிப்ரவரி 1957 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள நிம்மடா என்ற தொலைதூர கிராமத்தில் கோபுல வெலமா குடும்பத்தில் [1] [2] [3] பிறந்தார். [4] இவரது சகோதரர் கிஞ்சராபு அச்சன்நாயுடுவும்[5] மகன் ராம் மோகன் நாயுடுவும் அரசியல்வாதியாவார்கள்.[6]
தொழில்
[தொகு]நாயுடு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். மேலும் 1982 இல் என். டி. ராமராவ் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.
1983 ஆம் ஆண்டில், நாயுடு தனது 25 வயதில் தனது சொந்த மாவட்டத்தில் உள்ள அரிச்சந்திரபுரத்தில் இருந்து மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டப் பேரவை உறுப்பினர்களி மிகவும் இளைய உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.மீண்டும் 1985 இல் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989ல் தெலுங்கு தேசம் கட்சி இவருக்கு வாய்பளிக்காத காரணத்தால், சுயேட்சையாகப் போட்டியிட்டு மீண்டும் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மீண்டும் கட்சிக்கு திரும்பினார். பின்னர், 1994 இல் தொடர்ந்து நான்காவது முறையாக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1995 இல் என். டி. ராமராவுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியைத் தலைமை தாங்கிய சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைத்தபோது அவருக்கு ஆதரவளித்தார். 1995 முதல் 1996 வரை அரசு தலைமைக் கொறடாவாகவும் இருந்தார்.
தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்களில் எர்ரன்னா என்று பிரபலமாக அறியப்படும் நாயுடு, 1996 ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலில் ஆந்திரப் பிரதேசத்தில் கட்சியால் நிறுத்தப்பட்டார். ஸ்ரீகாகுளம் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தேசிய அரசியலில் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவராக உருவெடுத்தார். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் தெலுங்கு தேசம் கட்சி இணைந்தவுடன், நாயுடு மத்திய அமைச்சரானார், ஊரக வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறையை நிர்வகித்தார்.
1998 மற்றும் 1999 தேர்தல்களில் மக்களவைத் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார். 2004 தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சிங்குபுரம் நகரில் இவரது வாகனத்தின் மீது வெடிகுண்டு வீச முயன்ற நக்சலைட்களின் ( மாவோயிஸ்ட் கம்யூனிஸ்டுகள்) கொலை முயற்சியில் இருந்து இவர் உயிர் தப்பினார். [7] நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மக்களவையில் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2009 தேர்தலில், நாயுடு காங்கிரசு கட்சியின் கில்லி கிருபா ராணியால் தோற்கடிக்கப்பட்டார். [4]
இறப்பு
[தொகு]எர்ரான் நாயுடு, 2 நவம்பர் 2012 அன்று விசாகப்பட்டினத்தில் ஒரு திருமண விழாவில் இருந்து திரும்பும் போது, தனது சொந்த மாவட்டமான ஸ்ரீகாகுளம் அருகே ஒரு வாகன விபத்தில் இறந்தார். [8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Yerran Naidu: A mass leader". 2 November 2012. பார்க்கப்பட்ட நாள் 2023-04-22.
- ↑ "Senior TDP leader and former Union minister Yerran Naidu dies in a road accident in Andhra Pradesh". 2 November 2012. பார்க்கப்பட்ட நாள் 2023-04-22.
- ↑ "Srikakulam loves you, Yem brother". 2004-04-12. https://timesofindia.indiatimes.com/india/srikakulam-loves-you-yem-brother/articleshow/611391.cms.
- ↑ 4.0 4.1 "Yerran Naidu: A mass leader". 2 November 2012. https://www.ndtv.com/people/yerran-naidu-a-mass-leader-503428.
- ↑ "Kinjarapu Atchannaidu appointed as new chief of TDP in Andhra Pradesh". 19 October 2020. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
- ↑ "Rammohan Naidu named successor of Yerran Naidu". 24 November 2012. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/rammohan-naidu-named-successor-of-yerran-naidu/article4129457.ece.
- ↑ . 19 April 2004.
- ↑ TDP's Yerran Naidu dies in road accident பரணிடப்பட்டது 8 நவம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம்