உள்ளடக்கத்துக்குச் செல்

கொப்பரக்குல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Istiophoridae|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
கொப்பரக்குல்லா
அட்லாண்டிக் நீல மார்லின் (Makaira nigricans)
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Istiophoridae
மாதிரிப் பேரினம்
Istiophorus
Lacépède, 1801
Genera

கொப்பரக்குல்லா (Marlin) என்பது இஸ்டியோபோரிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த மீன் ஆகும். இதில் சுமார் 10 இனங்கள் உள்ளன. கொப்பரக்குல்லா மீனானது நீளமான உடலையும், ஈட்டி போன்ற கூரான மூக்கையும், தலையில் குல்லா வைத்தது போன்ற முதுகுத் துடுப்பையும் கொண்டது. இதன் முதுகுத் துடுப்பு பின்னோக்கி வரவர சிறுத்து மறையும். இதன் பொதுப் பெயரான மார்லி என்றது மாலுமி மார்லின்ஸ்பைக்குடன் உள்ள ஒற்றுமையிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது.[1] கொப்பரக்குல்லா மீன் வேகமான கடல் மீன்களில் ஒன்றாகும், குறுகிய நேரத்தில் மணிக்கு ~110 கிமீ (68 மைல்) வேகத்தை அடையும்.[2] இருப்பினும், நம்பமுடியாத அல்லது காலாவதியான தவுகளின் அடிப்படையில், மிகவும் மிகைப்படுத்தப்பட்ட வேகமானது பிரபலமான இலக்கியங்களில் அடிக்கடி கூறப்படுகின்றன.[2]

இவற்றில் பெரிய இனங்களில் அட்லாண்டிக் நீல மார்லின், மகைரா நிக்ரிகன்ஸ் இனம் அடங்கும், அவை 5 மீ (16.4 அடி) நீளம் மற்றும் 818 கிலோ (1,803 எல்பி) எடைவரை எட்டும்.[3] மற்றும் கருங்கொப்பரான் அது 5 மீ (16.4 அடி) நீளம் மற்றும் 670 கிலோ (1,480 எல்பி) எடை வரை எட்டும். இவை வெப்பமண்டல பகுதிகளில் பிரபலமான மீன்பிடி விளையாட்டு மீன்களாகும். அட்லாண்டிக் நீல கொப்பரான் மற்றும் வெள்ளை கொப்பரான் ஆகியவை அதிகப்படியான மீன்பிடித்தலால் அழிந்து வருகின்றன.[4]

வகைப்பாடு

[தொகு]

கொப்பரக்குல்லான்கள் இஸ்டியோபோரிஃபார்ம் மீன்கள், இவை வாள் மீன்களுடன் மிக நெருக்கமாக தொடர்புடையவை. இவை ஸ்கோம்பிரிடே உடன் நெருக்கமான தொடர்புடையதாக முன்னர் கருதப்பட்டாலும், மரபணு பகுப்பாய்வில் சிறிய அளவில் உறவை கொண்டதாக மட்டுமே அறியப்படுகிறது.

இனங்கள்

[தொகு]
படம் பேரினம் தற்போதுள்ள இனங்கள்
கருங்கொப்பரான் Whitley, 1931
இஸ்டியோபோரஸ் லாசெபேட் Lacépède, 1801
  • அட்லாண்டிக் பாய்மர மீன் ( I. albicans ).
  • இந்தோ-பசிபிக் பாய்மர மீன் ( I. platypterus ).
மகைரா Lacépède, 1802
  • மகைரா நிக்ரிகன்ஸ் லேஸ்பேட், 1802 ( அட்லாண்டிக் ப்ளூ மார்லின் )
  • மகைரா மசாரா ( ஜோர்டான் & ஸ்னைடர், 1901) ( இந்தோ-பசிபிக் நீல மார்லின் )
கஜிகியா Hirasaka & H. Nakamura, 1947
  • கஜிகியா அல்பிடா ( போய், 1860) (வெள்ளை மார்லின்)
  • காஜிகியா ஆடாக்ஸ் ( பிலிப்பி {க்ரம்வீட்}, 1887) (கோடிட்ட மார்லின்)
டெட்ராப்டுரஸ் Rafinesque, 1810
  • டெட்ராப்டுரஸ் அங்கஸ்டிரோஸ்ட்ரிஸ் எஸ். தனகா (I), 1915 (ஷார்ட்பில் ஸ்பியர்ஃபிஷ்)
  • Tetrapturus belone Rafinesque, 1810 (மத்திய தரைக்கடல் ஈட்டி மீன்)
  • டெட்ராப்டுரஸ் ஜார்ஜி ஆர்டி லோவ், 1841 (வட்ட அளவிலான ஈட்டி மீன்)
  • Tetrapturus pfluegeri CR Robins & de Sylva, 1963 (Longbill spearfish)

இனங்களின் காலக்கோடு

[தொகு]
QuaternaryNeogenePaleogeneHolocenePleistocenePlioceneMioceneOligoceneEocenePaleoceneMakairaIstiophorusTetrapterusPseudohistiophorusQuaternaryNeogenePaleogeneHolocenePleistocenePlioceneMioceneOligoceneEocenePaleocene

இலக்கியத்தில்

[தொகு]
வட கரோலினாவின் டேர் கவுண்டிக்கு வருபவர்களை பாடம் செய்யப்பட்ட கொப்பரக்குல்லா வரவேற்கிறது.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வேயின் 1952 ஆம் ஆண்டு புதினமான கிழவனும் கடலும் என்ற படைப்பின் மையக் கதாபாத்திரம் ஒரு வயதான கியூப மீனவர் ஆவார். அவர் தொடர்ந்து 84 நாட்களாக மீன் கிடைக்காத நிலையில், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கிறார். 85வது நாளில், அந்த கிழ மீனவரான சாண்டியாகோவின் தூண்டிலில், ஒரு உறுதியான கொப்பரக்குல்லா மீன் மாட்டுகிறது. தனிமனிதரான அந்த மீனவர் அந்த மீனைக் கைப்பற்ற அந்த மீனுடன் போரும் போடராட்டத்தில் ஈடுபட்டு இறுதியில் வெற்றி பெறுகிறார்.

பிரடெரிக் ஃபோர்சித்தின் கதையான "தி எம்பரர்", நோ கம்பேக்ஸ் தொகுப்பில், முர்கட்ராய்ட் என்ற வங்கி மேலாளரைப் பற்றி கூறப்படுகிறது. அவர் ஒரு கொப்பரகுல்லாவைப் பிடித்து மொரிசியசு தீவுவாசிகளால் ஒரு தலைசிறந்த மீனவர் என்று ஒப்புக்கொள்ளப்படுகிறார்.

குறிப்புகள்

[தொகு]
  1. Douglas Harper (November 2001). "marlin". Online Etymological Dictionary.
  2. 2.0 2.1 Svendsen, Morten B. S.; Domenici, Paolo; Marras, Stefano; Krause, Jens; Boswell, Kevin M.; Rodriguez-Pinto, Ivan; Wilson, Alexander D. M.; Kurvers, Ralf H. J. M. et al. (2016-10-15). "Maximum swimming speeds of sailfish and three other large marine predatory fish species based on muscle contraction time and stride length: a myth revisited" (in en). Biology Open 5 (10): 1415–1419. doi:10.1242/bio.019919. பன்னாட்டுத் தர தொடர் எண்:2046-6390. பப்மெட்:27543056. 
  3. "Makaira nigricans, Blue marlin : fisheries, gamefish". FishBase.
  4. "Tunas and Marlins Officially Classified as Threatened | Smithsonian Ocean".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொப்பரக்குல்லா&oldid=3929288" இலிருந்து மீள்விக்கப்பட்டது