கைனிகார குமார பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கைனிகார குமார பிள்ளை (Kainikkara Kumara Pillai), (1900-1988) இவர் ஒரு இந்திய ஆசிரியரும், நடிகரும், சிறுகதை எழுத்தாளரும், கட்டுரையாளரும் மற்றும் மலையாள இலக்கியத்தின் நாடக ஆசிரியருமாவார். ஹரிச்சந்திரா, மாத்ரூகா மனுஷ்யன் மற்றும் மொகவம், முக்தியம் போன்ற நாடகங்களினால் மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார். இவர் பிரபல எழுத்தாளரும் சிந்தனையாளருமான கைனிகர பத்மநாப பிள்ளையின் இளைய சசோதரர் ஆவார். 18 புத்தகங்களை எழுதிய குமார பிள்ளைக்கு 1970 ஆம் ஆண்டில் நாடகத்துக்கான கேரள சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. கேரள சங்க நாடக அகாடமி 1975 ஆம் ஆண்டில் இவரை ஒரு புகழ்பெற்ற சக ஊழியராக சேர்த்தது. 1986 ஆம் ஆண்டில் கேரள சாகித்ய அகாதமி விருது இவருக்கு கிடைத்தது.

சுயசரிதை[தொகு]

இளமைப்பருவம்[தொகு]

கைனிகார குமார பிள்ளை செப்டம்பர் 27, 1900 இல், தென்னிந்திய மாநில கேரளாவைச் சேர்ந்த, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாச்சேரி , பெருன்ன்னா எனப்படும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர், பெருனாயில் என். குமார பிள்ளை மற்றும் ஹரிப்பட்டு பூத்தோட்டல், எல். பார்வதி பிள்ளை ஆவர். இவரது தந்தை, ஒரு வழக்கறிஞராகவும், ஆயுர்வேத மருத்துவராகவும் இருந்தார். [1] சங்கனாச்சேரி அரசு நடுநிலைப்பள்ளி, செயின்ட், பெர்ச்மேன் உயர்நிலைப்பள்ளி, மன்னார் நாயர் சமாஜம் பள்ளி மற்றும் திருவல்லா எஸ்.சி.எஸ் உயர்நிலைப்பள்ளி போன்ற பல பள்ளிகளில் தனது பள்ளிப் படிப்பை முடித்த இவர் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை முடித்து, தத்துவத்தில் இளங்கலைப் பட்டத்தைஅரசினர் கலைக் கல்லூரி, கும்பகோணத்தில் பெற்றார். [2]

ஆசிரியராக[தொகு]

பிறகு, கைனகாரத்தில் உள்ள என்.எஸ்.எஸ் பள்ளியில் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், இவர் கருவாற்றா உயர்நிலை பள்ளியில், 1924-1943வரை முதல்வராக முக்கிய பணியாற்றினார். திருவனந்தபுரத்தில் உள்ள பல்குலன்காரா உயர்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், திருவனந்தபுரம் (1955-56) மகாத்மா காந்தி கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். [3] மேலும், திருவனந்தபுரத்தின் அகில இந்திய வானொலியின் கல்விச் சேவைகளின் இயக்குநராக இருந்தார்.

இவர்குமார பிள்ளை பாகீரதி குஞ்சம்மா என்பவரை மணந்தார். இவர் 1988 திசம்பர் 9 அன்று தனது 88 வது வயதில் இறந்தார். [1]

மரபு மற்றும் கௌரவங்கள்[தொகு]

எழுத்தாளராக[தொகு]

குமாரப் பிள்ளை நவீன மலையாள அரங்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக இருந்தார். [4] மேலும், முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார். அதன் உறுப்பினர்களில் வைகோம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கரப் பிள்ளை, ஜோசப் முண்டசேரி மற்றும் பி. கேசவதேல் ஆகியோர் அடங்குவர். இவர் தனது இலக்கிய வாழ்க்கையை வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோவின் தழுவலான துராந்தசங்காவுடன் தொடங்கினார். [1] இது, நாடகங்கள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைத் தொகுப்புகள் ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது. மேலும், இது இவர் எழுதிய பதினெட்டு புத்தகங்களுக்கு முந்தையதாக உள்ளது. [2] [5] அந்தக் காலத்தின் புகழ்பெற்ற நடிகரான இவர் ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ மற்றும் ஆண்டனி மற்றும் கிளியோபாட்ரா ஆகிய இலக்கியங்களையும் மொழிபெயர்த்தார். மேலும் பிலிப் மாசிங்கர் எழுதிய பழைய கடன்களைச் செலுத்த ஒரு புதிய வழி என்ற நாடகத்தை மணிமங்கலம் என்ற தலைப்பில் எழுதினார். 1974 ஆம் ஆண்டில் மது தயாரித்த மலையாளத் திரைப்படமான மன்யஸ்ரீ விஸ்வாமித்ரன், என்பது குமாரப் பிள்ளை எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டது. இவர் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனங்களையும் எழுதியுள்ளார். [6] [7]

இவர் தகழி சிவசங்கர பிள்ளைக்கு பள்ளியில் கற்பித்துள்ளார். [8] மற்றும் ஆர்வமுள்ள எழுத்தாளரான அவரை உரைநடை எடுக்க ஊக்குவித்தார். இது அவரது இலக்கிய வாழ்க்கையில் அவருக்கு உதவியது. இவர் கல்வி இதழான வித்யாலயா போஷினியுடன் தொடர்பு கொண்டிருந்தார். அதன் தலைமை ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார் மற்றும் அகில இந்திய வானொலியில் பணிபுரிந்து, அதன் கல்வித் திட்டங்களுக்கு தலைமை தாங்கினார். கேரளாவில் பொது நூலக இயக்கத்தின் வளர்ச்சிக்கும் பங்களித்தார்.

சாகித்ய அகாதமி விருது[தொகு]

கேரள சாகித்ய அகாதமி 1970 ஆம் ஆண்டில் நாடகத்துக்கான வருடாந்திர விருதுக்காக குமாரப் பிள்ளை எழுதிய மத்ருகா மனுஷ்யன் என்ற நாடகத்தைத் தேர்ந்தெடுத்தது. இந்த நாடகம் பின்னர் திருவிதாங்கூர் பல்கலைக்கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது. [9] அகாதமி 1986 ஆம் ஆண்டில், புகழ்பெற்ற கேரள சாகித்ய அகாதமி உறுப்பினர் விருதை வழங்கியதன் மூலம் இவரை மீண்டும் கௌரவித்தது. [10] இடையில், 1975 ஆம் ஆண்டில் கேரள சங்கீதா நடகா அகாதமியால் இவர் ஒரு சக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [11] புத்தேசன் விருது, குருவாயூரப்பன் அறக்கட்டளை விருது மற்றும் எஸ்.பி.சி.எஸ் விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார். [1]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைனிகார_குமார_பிள்ளை&oldid=2880725" இருந்து மீள்விக்கப்பட்டது