கே. பி. பிரம்மாநந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. பி. பிரம்மாநந்தன்
இயற்பெயர்கே. பி. பிரம்மாநந்தன்
பிறப்புபெப்ரவரி 22, 1946(1946-02-22)
கடக்காவூர், திருவனந்தபுரம், இந்தியா
இறப்புஆகத்து 10, 2004(2004-08-10) (அகவை 58)
கடக்காவூர், திருவனந்தபுரம், இந்தியா
தொழில்(கள்)பாடுதல்
இசைத்துறையில்1969-2004

கே. பி. பிரம்மநந்தன் (K. P. Brahmanandan) (பிப்ரவரி 22, 1946 - 10 ஆகத்து 2004) கேரளாவைச் சேர்ந்த ஒரு தென்னிந்திய பின்னணி பாடகராவார்.[1] இவர், மலையாளத் திரைப்படங்களில் 160க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர், கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு வடக்கே அமைந்துள்ள கடக்காவூரில் தனது பெற்றோரின் எட்டு குழந்தைகளில் மூன்றாவது குழந்தையாக பிறந்தார். புகழ்பெற்ற மலையாள பாடகர் இராகேசு இவரது மகனாவார்.[2]

ஆகத்து 10, 2004 அன்று தனது 58 வயதில் கடக்கவூரில் உள்ள தனது வீட்டில் காலமானார்.[3] இவருக்கு உஷா என்ற மனைவியும், இராகேஷ் என்றா மகனும், ஆதிரா என்ற மகளும் இருக்கின்றனர்.

விருதுகள்[தொகு]

1965ஆம் ஆண்டில், அனைத்திந்திய வானொலி விருதைப் பெற்றார். 1999இல் கேரள சங்கீத நாடகா அகாதமி விருதும், விமர்சகர்கள் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.[4]

தொழில்[தொகு]

1969ஆம் ஆண்டில் இசையமைப்பாளர் கி. இராகவனின் "கல்லி செல்லம்மா" படத்தில் இடம்பெற்ற பிரபலமான பாடலான `மனதே காயலின் ... என்ற பாடல் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். அதற்கு முன்பு, திருவனந்தபுரம் அனைத்திந்திய வானொலியில் சில பாடல்களைப் பாடியிருந்தார். இவரது திறமையை கண்டு வெ. தட்சிணாமூர்த்தி, எம். கே. அர்ஜுனன், ஏ. டி. உம்மர், ஆர். கே. சேகர் போன்ற இசையமைப்பாளர்கள் இவருக்கு வாய்ப்பளித்தனர்.

இசையமைப்பாளர் இளையராஜா இசையில் ஒரு சில தமிழ் படங்களுக்காகவும் பாடினார். இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான மெட்டி என்ற படத்தில் இடம்பெற்ற "சந்தக் கவிகள்" என்ற பாடல் குறிப்பிடத்தக்கவை. இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இசையிலும் சில பாடல்களை பாடினார். மேலும், இவர் மலையாளி பென்னு, கன்னி நிலவு ஆகிய இரண்டு படங்களுக்கும் இசையமைத்தார்.[3]

பிரம்மானந்தன் அறக்கட்டளை[தொகு]

இவரது நினைவாக "பிரம்மானந்தன் அறக்கட்டளை" ஒன்று அமைக்கப்பட்டு இசையில் சிறந்து விளங்குவதற்காக பிரம்மநந்தன் நினைவு விருதையும் அமைத்துள்ளது.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Hindu : Kerala News : Brahmanandan dead". Thehindu.com. 5 பிப்ரவரி 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 January 2015 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  2. Soman, Deepa. "Singer Rakesh Brahmanandan getting married". 27 September 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 September 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 "The Hindu : Kerala News : Brahmanandan dead". Thehindu.com. 5 பிப்ரவரி 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 January 2015 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)"The Hindu : Kerala News : Brahmanandan dead" பரணிடப்பட்டது 2016-02-05 at the வந்தவழி இயந்திரம். Thehindu.com. Retrieved 3 January 2015.
  4. "Official Website of K P Brahmanandan". Brahamanadan.com. 5 February 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 January 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Official Website of K P Brahmanandan". Brahmanandan.com. 5 February 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 January 2015 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Club FM, Ravi Menon gets Brahmanandan award, Malayalam - Mathrubhumi English Movies". Mathrubhumi.com. 6 October 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 January 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._பிரம்மாநந்தன்&oldid=3708831" இருந்து மீள்விக்கப்பட்டது