உள்ளடக்கத்துக்குச் செல்

கேசவன் வேலுதாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேசவன் வேலுதாட்
கேசவன் வேலுதாட்
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்
  • தேசிய கிராமப்புற உயர்கல்வி கழகம் (இளநிலை பட்டம்)
  • கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம் (முதுகலை மற்றும் முனைவர் பட்டம்)
  • ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (M. Phil பட்டம்)
பணிவரலாற்று ஆசிரியர்
கல்வியாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • முற்கால, இடைக்கால தென்னிந்தியாவின் அரசியல் அமைப்பு (1993) ஆங்கிலநூல்
  • தென்னிந்தியாவில் இடைக்காலத்தின் தொடக்கம் (2009) ஆங்கிலநூல்

கேசவன் வேலுதாட் (பிறப்பு 1951) ஓர் இந்திய வரலாற்றாசிரியரும் மற்றும் இடைக்கால தென்னிந்திய வரலாற்றில் புலமை பெற்ற கேரளாவைச் சேர்ந்த கல்வியாளரும் ஆவார். [1] இவர் ஒரு தேர்ந்த கல்வெட்டு ஆய்வாளரும் ஆவார். சமஸ்கிருதம், தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை அறிந்தவர் ஆவார். [2] [3]

கல்வி

[தொகு]

வேலுதாட் 1974 ஆம் ஆண்டு, கேரளாவில், தேசிய கிராமப்புற உயர்கல்வி கழகத்தில், (ஆங்கிலம்: National Council for Rural Higher Education), இளங்கலைப் பட்டம் பெற்றார். கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகத்தில் (ஆங்கிலம்: University of Calicut) முதுகலைப் பட்டம் பெற்றார். [3] 1978 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் M. Phil பட்டமும், 1987 ஆம் ஆண்டு கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இவர் வரலாற்றாசிரியர் எம்.ஜி.எஸ் நாராயணனின் மாணவர். [4]

வரலாற்று பேராசிரியர் பணி

[தொகு]

வேலுதாட் 1975 ஆம் ஆண்டில், கல்லூரி ஆசிரியராக கேரள அரசுப் பணியில் அமர்ந்தார். 1982 ஆம் ஆண்டில் புதிதாக உருவான மங்களூர் பல்கலைக்கழகத்திற்கு மாறிச் சென்றார். வேலுதாட் 2008 ஆம் ஆண்டில் வரலாற்றுத் துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் இருந்து ஓய்வு பெற்றார். [3] தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராகவும் பின்னர் பணியாற்றினார். [3]

வருகைதரு பேராசிரியர்

[தொகு]

அவர் எகோல் பிராட்டிக் டெஸ் ஹாட்ஸ் எட்யூட்ஸில் , பாரிஸ் (பிரெஞ்சு: Ecole Pratique des Hautes Etudes) மனித அறிவியல் பேரவை, பாரிஸ், (பிரெஞ்சு: Maison des Sciences de l’Homme, Paris; ஆங்கிலம்: House of Human Sciences, Paris) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி; மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கேரளா மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஹைதராபாத் ஆகிய பல்கலைக்கழகங்களில் வருகை தரும் பேராசிரியராக இருந்தார். இவர் இந்திய வரலாற்று காங்கிரஸின் (ஆங்கிலம்: Indian History of Congress) வாழ்நாள் உறுப்பினர்ஆவார். [3] இவர் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை மதிப்பிடுவதில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலுடன் (NAAC) தொடர்புடையவர் ஆவார். [3]

முக்கிய வெளியீடுகள் (ஆங்கில நூல்கள்)

[தொகு]

ஆதாரம்

  • கேரளாவில் பிரமணர் குடியேற்றங்கள்: வரலாற்று ஆய்வுகள், (கோழிக்கோடு, சந்தியா பப்ளிகேஷன்ஸ், 1978; திருத்தப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட பதிப்பு, காஸ்மோபுக்ஸ், திருச்சூர், 2013)
  • முற்கால, இடைக்கால தென்னிந்தியாவின் அரசியல் அமைப்பு, (புது டெல்லி, ஓரியண்ட் லாங்மேன், 1993; இரண்டாவது திருத்தப்பட்ட பதிப்பு, புது டெல்லி, ஓரியண்ட் பிளாக்ஸ்வான், 2012)
  • காலந்தோறும் கேரளா, (திருவனந்தபுரம், மக்கள் தொடர்புத் துறை, கேரள அரசு, 1976) எம்ஜிஎஸ் நாராயணன் மற்றும் பலர்.
  • நவீனத்திற்கு முந்தைய தென்னிந்தியாவில் அரசு மற்றும் சமூகம் (State and Society in Pre-modern South India), தொகுப்பாசிரியர்., ஆர். சம்பகலட்சுமி மற்றும் டிஆர் வேணுகோபாலன் உடன்.(காஸ்மோ புக்ஸ், திருச்சூர், 2002)
  • தென்னிந்தியாவில் இடைக்காலத்தின் தொடக்கம் (The Early Medieval in South India), ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், (புது டெல்லி, 2009; முதல் பேப்பர்பேக் பதிப்பு, 2010; ஆறாவது பதிப்பு, 2014)
  • பொருத்தமற்ற வரலாறு: எம்.ஜி.எஸ். நாராயணனுக்கான கட்டுரைகள் (Irreverent History: Essays for MGS Narayanan), தொகுப்பாசிரியர்)., டொனால்ட் ஆர். டேவிஸ் உடன், ப்ரைமஸ் புக்ஸ், டெல்லி, 2014.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ramaswamy, Vijaya (2009-12-01). "Situating the Early Medieval in South India: Based on, Kesavan Veluthat, The Early Medieval in South India, (Delhi, OUP), 2009, pp. XII + 356, Rs. 695". Indian Historical Review 36 (2): 307–310. doi:10.1177/037698360903600206. பன்னாட்டுத் தர தொடர் எண்:0376-9836. 
  2. "Department of History - University of Delhi". www.du.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2018-12-05.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Delhi University - Faculty Profile (2016) http://www.du.ac.in/du/uploads/Faculty%20Profiles/2016/History/Nov2016_History_Kesavan.pdf
  4. Staff Reporter (2018-07-13). "Distorted history a danger". The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/kerala/distorted-history-a-danger/article24402772.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசவன்_வேலுதாட்&oldid=3419431" இலிருந்து மீள்விக்கப்பட்டது