மங்களூர் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்களூர் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைஅறிவு ஒளி போன்றது (Knowledge Is Light)
வகைபொது
உருவாக்கம்1980; 43 ஆண்டுகளுக்கு முன்னர் (1980)
வேந்தர்தவார் சந்த் கெலாட்
துணை வேந்தர்பி. எசு. யதாபதிதய
அமைவிடம்கோனாஜி, கர்நாடகம், இந்தியா
ஆள்கூறுகள்: 12°48′56.72″N 74°55′26.67″E / 12.8157556°N 74.9240750°E / 12.8157556; 74.9240750
வளாகம்நகரம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.mangaloreuniversity.ac.in

மங்களூர் பல்கலைக்கழகம் (Mangalore University) என்பது இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் உள்ள கொனாஜேவில் அமைந்துள்ள பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். மங்களூர் பல்கலைக்கழகம் தெற்கு கன்னட மாவட்டம், உடுப்பி மற்றும் குடகு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை நிர்வகிக்கும் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது.[1]

வரலாறு[தொகு]

கடற்கரை நகரமான மங்களூருக்குத் தென்கிழக்கே சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மங்கள கங்கோத்ரியில் மங்களூர் பல்கலைக்கழக வளாகத்தில் இப்பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இப்பல்கலைக்கழகம் 353 ஏக்கர் பரப்பளவில் அழகிய வளாகத்தில் அமைந்துள்ளது. மைசூர் பல்கலைக்கழகத்தின் முதுநிலை மையமாகச் செயல்பட்ட இந்நிறுவனம் 1980-ல் பல்கலைக்கழகமாக மேம்பாடு அடைந்தது. மூன்று முதுநிலை துறைகளை மட்டுமே கொண்டிருந்த இந்த வளாகத்தில், தற்பொழுது 26 முதுநிலை துறைகள் உள்ளன. நவீன உள்கட்டமைப்பு மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுடன் மங்களூர் பல்கலைக்கழகம் 204 இணைப்புக் கல்லூரிகளுடன், இரண்டு இணைவுக் கல்லூரிகளுடன் (மங்களூர் மற்றும் மடிகேரி) மற்றும் ஐந்து தன்னாட்சிக் கல்லூரிகளுடன் வளர்ச்சிபெற்றுள்ளது. குடகு மாவட்டம், சோம்வார்பேட்டை வட்டத்தில் சிக்க அலுவாராவில் ஞான காவேரி என்ற முதுநிலை மையத்தையும் பல்கலைக்கழகம் நிறுவியுள்ளது.

துணைவேந்தர்கள்
 • பி. சேக் அலி, 1980–1985
 • கே. எம். சபியுல்லா, 1985–1989
 • எம். ஐ. சவதாத்தி, 1989–1995
 • எஸ். கோபால், 1995–2001
 • பி. அனுமையா, 2001–2005 [2]
 • திம்மே கவுடா, 2005–2006 (பொறுப்பு) [3]
 • கே. எம். காவேரியப்பா, 2006–2010 [4]
 • கே. கே. ஆச்சாரி, 2010 (பொறுப்பு)
 • டி. சி. சிவசங்கர மூர்த்தி, 2010–2014 [5]
 • கே. பைரப்பா, 2014–2018 [6]
 • கிஷோர் குமார், 2018 (பொறுப்பு) [6]
 • ஈஸ்வர பி., 2018–2019 (பொறுப்பு) [7]
 • கிஷோர் நாயக், 2019 (பொறுப்பு) [7]
 • பி. சுப்ரமணிய யதாபதிதய (2019–) [8]

முன்னாள் மாணவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Mangalore University all set to celebrate jubilee". The Hindu. 2004-09-08. 11 October 2004 அன்று மூலம் பரணிடப்பட்டது. 31 December 2011 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Hanumaiah is new Mangalore varsity V-C". The Times of India. 29 October 2001. Archived from the original on 2012-07-07. https://archive.today/20120707230027/http://articles.timesofindia.indiatimes.com/2001-10-28/bangalore/27228036_1_karnatak-university-mangalore-mysore. 
 3. "Thimme Gowda is acting VC". The Hindu. 30 October 2005. Archived from the original on 1 நவம்பர் 2005. https://web.archive.org/web/20051101013608/http://www.hindu.com/2005/10/30/stories/2005103017730500.htm. 
 4. "K.M. Kaveriappa appointed Executive Director of Higher Education Council". The Hindu. 1 November 2010. http://www.thehindu.com/news/cities/Mangalore/article859630.ece. 
 5. "Prof T C Shivashankara Murthy Appointed Vice Chancellor of Mangalore University". daijiworld.com. Daijiworld News Network. 2 March 2010. 4 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 பிப்ரவரி 2022 அன்று பார்க்கப்பட்டது.
 6. 6.0 6.1 "Kishore Kumar C K appointed acting VC of Mangalore University – Times of India". The Times of India. 4 June 2018. https://timesofindia.indiatimes.com/home/education/news/kishore-kumar-c-k-appointed-acting-vc-of-mangalore-university/articleshow/64454053.cms. 
 7. 7.0 7.1 "Kishori Nayak assumes charge as acting V-C of Mangalore University - Times of India". The Times of India. 28 February 2019. https://timesofindia.indiatimes.com/city/mangaluru/kishori-nayak-assumes-charge-as-acting-v-c-of-mangalore-university/articleshow/68206322.cms. 
 8. "P S Yadapadithaya in new vice-chancellor of Mangalore University - Times of India". The Times of India. 3 June 2019. https://timesofindia.indiatimes.com/home/education/news/p-s-yadapadithaya-in-new-vice-chancellor-of-mangalore-university/articleshow/69638813.cms. 
 9. https://www.india.gov.in/my-government/indian-parliament/dv-sadananda-gowda
 10. "Satya Nadella". 15 April 2015.

வெளி இணைப்புகள்[தொகு]