உள்ளடக்கத்துக்குச் செல்

எம். ஜி. எஸ். நாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். ஜி. எஸ். நாராயணன்
2017இல் கோழிக்கோட்டில் நடந்த கேரள இலக்கியத் திருவிழாவில் நாராயணன் பேசுகிறார்.
பிறப்புமுத்தாயில் கோவிந்தமேனன் சங்கர நாராயணன்
20 ஆகத்து 1932 (1932-08-20) (அகவை 91)
பொன்னானி, மலபார் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னை கிறித்துவக் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம் (முதுகலைப் பட்டம்)
கேரளப் பல்கலைக்கழகம் (முனைவர் பட்ட ஆராய்ச்சி)
பணிவரலாற்றாசிரியர்
கல்வியாளர்
அரசியல் விமர்சகர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • "கேரளாவில் கலாச்சார இணைவு" (1972)
  • கேரளாவின் பெருமாள்கள் (1972)
  • கோழிக்கோடு: உண்மையான நகரத்தின் மறுபரிசீலனை(2006)
பிள்ளைகள்விஜயகுமார் நாராயணன், வினய் நாராயணன்

எம்.ஜி.எஸ். நாராயணன் (M. G. S. Narayanan) (பிறப்பு 20 ஆகத்து 1932) என அழைக்கப்படும் முத்தாயில் கோவிந்தமேனன் சங்கர நாராயணன் ஓர் இந்திய வரலாற்றாசிரியரும், கல்வியாளரும், அரசியல் விமர்சகருமாவார். இவர் 1976 முதல் 1990 வரை கோலிக்கோடு பல்கலைக்கழகத்தில் (கேரளா) வரலாற்றுத் துறைக்குத் தலைமை தாங்கினார் [1] இந்திய வரலாற்று ஆராய்ச்சி அமைப்பின் தலைவராகவும் (2001-03) பணியாற்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மலபார் மாவட்டத்தின் பொன்னானியில் முத்தாயில் கோவிந்தமேனன் சங்கர நாராயணனாக 1932 ஆகஸ்ட் 20 அன்று [2] பிறந்தார்.

பறப்பனங்காடி, பொன்னானி, கோழிக்கோடு, திருச்சூர் ஆகிய இடங்களில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற சென்னை சென்றார். இவர், 1965இல் பிரேமலதா என்பவரை மணந்தார். [3] 1973இல் கேரளப் பல்கலைக்கழகத்தால் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. [2]

"கேரளாவின் பெருமாள்கள்" என்ற இவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கை இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு 1996இல் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பொ.ச. 800 முதல் 1124 வரையிலான காலங்களில் கேரளாவின் வரலாற்றை இது ஒரு துல்லியமான பயிற்சியில் அனுபவபூர்வமாக புனரமைத்தது என்று இந்தியாவின் முன்னணி இந்திய வரலாற்றாளாரான இராஜன் குருக்கல் கூறுகிறார்.[4] ஆர்தர் லெவெலின் பசாம் இவரது படைப்பை "நான் ஆராய்ந்ததில் மிகச் சிறந்ததும், முழுமையானதுமான இந்திய ஆய்வுகளில் ஒன்று" என்று பாராட்டினார். [5]

தொழில்[தொகு]

நாராயணன் கேரளப் பல்கலைக்கழகத்திலும், கோலிக்கோடு பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்தார். 1970 முதல் சமூக அறிவியல் மற்றும் மனிதநேய பீடத்தின் தலைவராக பணியாற்றிய இவர் 1992இல் ஓய்வு பெற்றார். [2] 1976 முதல் 1990 வரை கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் வரலாற்றுத் துறையின் தலைவராகவும் இருந்தார்.[6] 1982-1985 காலப்பகுதியில் இந்திய வரலாற்று காங்கிரசின் பொதுச் செயலாளராகவும், 1991இல் மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் கிழகத்திய கல்வி நிறுவனத்தில் வருகை சக ஊழியராக இருந்தார். 1990-1992 காலப்பகுதியில் இந்திய வரலாற்று ஆராய்ச்சி அமைப்பின் உறுப்பினர்-செயலாளராகவும் பணியாற்றினார்.

நாராயணன் தனது 'பிராமண தன்னலக்குழு மாதிரி'க்கு பெயர் பெற்றவர்.:145-146 மேலும், இந்திய வரலாற்றில் சிறப்பு கவனம் கொண்டிருந்த அமெரிக்க வரலாற்றாசிரியரான பர்டன் இச்டீனின் சோழ இராச்சியத்திற்கான "பிரிவு நிலை" மாதிரியை விமர்சித்தவர்களில் ஒருவராக இருந்தார். [7] :128 வேலுதத்துடன், 6 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலிருந்த பக்தி இயக்கங்களில் "மன்னர்கள், பிராமணர்கள் மற்றும் பொது மக்கள்" ஆகியோரிடையேயான ஒற்றுமையாகக் கொண்டுவர முன்மொழிந்தார். ஆனால் "சமத்துவத்தின் மாயை" என்று கராசிமா எழுதுகிறார். மற்ற அறிஞர்கள் இவரது மாதிரியில் சில குறைபாடுகளைக் குறிப்பிட்டு வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். :113

விமர்சனம்[தொகு]

இந்தியாவின் ஒரு செய்தி வார இதழான, பிரண்ட்லைனில் டி. கே. இராசலட்சுமி 2001 ஆம் ஆண்டில் - "நாராயணன் பண்டைய வரலாற்றில் ஒரு நிபுணர், "அவர் ஒரு இந்து, மேலும் ஒரு பெரிய பாரம்பரியத்தின் வாரிசு என்ற அளவிற்கு இந்துத்துவத்தை நம்புபவர்". அவர் பாரதிய ஜனதா கட்சியுடன்நெருக்கமாக இருந்தாலும், அவர் ஒரு கடினமானவர் அல்ல" என்று கூறுகிறார். இதற்கு பதிலாக "வேறுபாடுகள் இல்லாமல் வரலாறு இருக்க முடியாது" என்று நாராயணன் கூறினார். [6]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "On the wrong side of Left?" (in en-IN). The Hindu. 2003-06-16. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/on-the-wrong-side-of-left/article28439585.ece. 
  2. 2.0 2.1 2.2 "MGS Narayanan (Profile) University of Calicut". Archived from the original on 2018-11-03. பார்க்கப்பட்ட நாள் 2021-06-23.
  3. "Former students hold birthday bash for MGS" (in en-IN). The Hindu. 2018-08-31. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/kozhikode/former-students-hold-birthday-bash-for-mgs/article24827121.ece. 
  4. Subbarayalu, Y. (2014). "Book Review: M.G.S. Narayanan, Perumals of Kerala: Brahmin Oligarchy and Ritual Monarchy, Political and Social Conditions of Kerala under the Cera Perumals of Makotai (c. AD 800–1124)". The Indian Economic & Social History Review (SAGE Publications) 51 (3): 399–403. doi:10.1177/0019464614537142. 
  5. Gurukkal, Rajan (2014). "Book Review: M.G.S. Narayanan, Perumals of Kerala: Brahmin Oligarchy and Ritual Monarchy—Political and Social Conditions of Kerala Under the Cera Perumals of Makotai (c. AD 800–AD 1124)". Indian Historical Review (SAGE Publications) 41 (1): 103–105. doi:10.1177/0376983614521543. 
  6. 6.0 6.1 T. K. Rajalakshmi. CONTROVERSY: Appointment and disappointment Frontline. Volume 18 - Issue 15, 21 Jul. – 3 Aug. 2001
  7. Karashima, Noboru. A Concise History of South India: Issues and Interpretations. Oxford University Press.

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஜி._எஸ்._நாராயணன்&oldid=3792307" இலிருந்து மீள்விக்கப்பட்டது