குர்சரன் கவுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குர்சரன் கவுர்
கவுர் 2012-இல்
இந்தியப் பிரதமரின் துணைவர்
'
22 மே 2004 – 26 மே 2014
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்ஷீலா குஜ்ரால்
பின்னவர்யசோதபென் மோதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
குர்சரண் கவுர் கோலி

13 செப்டம்பர் 1937 (1937-09-13) (அகவை 86)
சாக்வால், பஞ்சாப், இந்தியா (இன்றைய- பஞ்சாப் (பாக்கிஸ்தான்), பாக்கித்தான்)
தேசியம்இந்திய மக்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்
பிள்ளைகள்3 உபேந்தர் சிங், தமன் சிங் உட்பட)
வாழிடம்(s)3 மோதிலால் நேரு பகுதி, புது தில்லி, தில்லி
வேலை

குர்சரன் கவுர் கோஹ்லி (Gursharan Kaur-பிறப்பு 13 செப்டம்பர் 1937) என்பவர் ஓர் இந்திய வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி ஆவார்.

இளமை[தொகு]

சர்தார் சட்டர் சிங் கோஹ்லி,[1] பர்மா-எண்ணெய் நிறுவன பொறியாளர் மற்றும் சிறீமதிக்கு பிறந்த ஏழு உடன்பிறந்தவர்களில் கவுர் இளையவர். பகவந்தி கவுர் ஜலந்தரில் 13 செப்டம்பர் 1937 அன்று பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். ஜீலம் மாவட்டத்தில் (இப்போது பாக்கித்தானின் பஞ்சாபில் உள்ள) இவரது மூதாதையர் கிராமம் தக்கம் உள்ளது.

கவுர் தனது கீர்த்தனை பாடலுக்காகத் தில்லியில் உள்ள சீக்கிய சமூகத்தில் நன்கு அறியப்படுகிறார். மேலும் ஜலந்தர் வானொலியிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.[2]

வாழ்க்கை[தொகு]

2004-இல் மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து, இவருடன் வெளிநாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இருப்பினும், குடும்பம் பெரும்பாலும் ஊடக வெளிச்சத்திலிருந்து விலகியே உள்ளது. இவர்களின் மூன்று மகள்கள் - உபிந்தர், தமன் மற்றும் அம்ரித், வெற்றிகரமான, அரசியல் அல்லாத வாழ்க்கையைக் கொண்டுள்ளனர்.[3] உபிந்தர் கவுர் தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக உள்ளார். பண்டைய டெல்லி (1999) மற்றும் எ ஹிஸ்டரி ஆஃப் ஏன்சியன்ட் அண்ட் எர்லி மெடிவல் இந்தியா (2008) உட்பட ஆறு புத்தகங்களை எழுதியுள்ளார். தமன் கவுர், தில்லியில் உள்ள தூய இசுடீபன் கல்லூரி மற்றும் குசராத், ஆனந்த்தில் உள்ள கிராமப்புற மேலாண்மை நிறுவனத்தில் பட்டம் பெற்றவர். மேலும் தி லாஸ்ட் ஃபிரான்டியர்: பீப்பிள் அண்ட் ஃபாரஸ்ட்ஸ் இன் மிசோரம் மற்றும் நைன் பை நைன் என்ற நாவலை எழுதியவர். [4] அம்ரித் சிங் அமெரிக்க உரிமையியல் சங்கத்தின் வழக்கறிஞராகப் பணிபுரிகின்றார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Strictly Personal Book by Daman Singh
  2. First Lady for all seasons
  3. "Dr. Manmohan Singh: Personal Profile". Prime Minister's Office, Government of India. Archived from the original on 3 March 2009. பார்க்கப்பட்ட நாள் 4 April 2009.
  4. "Meet Dr. Singh's daughter". Rediff.com. 28 January 2009. பார்க்கப்பட்ட நாள் 4 April 2009.
  5. Rajghatta, Chidanand (21 December 2007). "PM's daughter puts White House in the dock". ToI. பார்க்கப்பட்ட நாள் 13 October 2008.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்சரன்_கவுர்&oldid=3895474" இலிருந்து மீள்விக்கப்பட்டது