குட்டியேரி
குட்டியேரி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 12°4′0″N 75°21′0″E / 12.06667°N 75.35000°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | கண்ணூர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 10,528 |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | என்-கேஎல் |
குட்டியேரி (Kuttiyeri) என்பது இந்திய மாநிலமான கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் தளிப்பறம்பா நகரத்திற்கு அருகிலுள்ள பரியாரம் பஞ்சாயத்து கிராமமாகும்.[1] வெல்லாவு, மாவிச்சேரி, தலோரா மற்றும் பனங்கத்தூர் ஆகிய சிறு கிராமங்கள் குட்டியேரி தனது பகுதிகளாகக் கொண்டுள்ளது.
புள்ளிவிவரங்கள்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குட்டியேரியின் மக்கள் தொகை 12473 ஆகும், இதில் 6009 ஆண்களும் 6464 பெண்களும் உள்ளனர்.[2]
போக்குவரத்து
[தொகு]தேசிய நெடுஞ்சாலையானது தளிப்பறம்பா நகரம் வழியாக செல்கிறது. இதன் வழியே கோவா, மும்பையை வடக்குப் பக்கத்திலும் கொச்சி, திருவனந்தபுரத்தைத் தெற்குப் பகுதியிலும் அணுகலாம். குப்பம் ஆற்றின் வடக்குப் பகுதியில் உள்ள அண்மைக் கிராமமான பரியாரத்தைக் குட்டியேரி பாலம் வழியாக அணுகலாம். தளிப்பறம்பா பேருந்து நிலையத்திற்குப் பேருந்துகள் கிடைக்கின்றன, அங்கிருந்து கண்ணூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் எளிதில் கிடைக்கின்றன. இரிட்டியின் கிழக்கே உள்ள சாலை மைசூர், பெங்களூருடன் இணைகிறது. தெற்கே 22 கி.மீ தொலைவிலுள்ள கண்ணூரிலிருந்து இந்த நகரங்களுக்கான பேருந்துகள் உள்ளது. மங்களூர்-பாலக்காடு தடத்திலுள்ள கண்ணபுரம், கண்ணூர் ஆகியன அருகிலுள்ள தொடருந்து நிலையங்களாகும். இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து பகுதிகளுக்கும் தொடருந்துகள் கிடைக்கின்றன. இணைய முன்பதிவும் உள்ளது. கண்ணூர், மங்களூர், கோழிக்கோடு ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் உள்ளன. இவை அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுமே நேரடி விமான சேவைகளைக் கொண்ட சிறிய சர்வதேச விமான நிலையங்களாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
- ↑ https://www.census2011.co.in/data/village/627195-kuttiyeri-kerala.html