குடிசார் பொறியாளர்கள் நிறுவனம்
![]() | |
வகை | குடிசார் பொறியியல் |
---|---|
தொழின்முறைப் பதிவு | பட்டயக் குடிசார் பொறியாளர் |
நிறுவப்பட்டது | சனவரி 2, 1818 |
பணித்தலைமையிடம் | ஒன் கிரேட்டு சார்ச்சுத் தெரு, இலண்டன், ஐக்கிய இராச்சியம். |
பணிகளிடம்பெறும் இடங்கள் | உலகம் முழுதும் |
உறுப்பினர்கள் | 84350 (மார்ச்சு 2009இல்) |
உறுப்புத்துவப் பணம் | £235 (மாணவர்களுக்கு இலவசம்) |
வலைக் கடப்பிடம் | www.ice.org.uk |
குடிசார் பொறியாளர்கள் நிறுவனம் (Institution of Civil Engineers) என்பது இலண்டனின் நடுப்பகுதியில் பணித்தலைமையிடம் அமைந்துள்ள குடிசார் பொறியாளர்களுக்கான தொழில்சார் கழகம் ஆகும்.[1] சனவரி 2, 1818இல் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.[2] தொடக்க காலத்தைப் போலவே, இப்போதும் இதன் உறுப்பினர்களுட்பெரும்பாலானோர் பிரித்தானியக் குடிசார் பொறியாளர்கள் ஆவர். ஆனாலும் இந்நிறுவனம் 150இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன், 2008இல் மொத்தமாக 80000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. நவம்பர் 2011இலிருந்து குடிசார் பொறியாளர்கள் நிறுவனத்தின் தலைவராக இரிச்சர்டு கோக்லி பொறுப்பேற்றுள்ளார்.[3]
முன்னாள் குடிசார் பொறியாளர்கள் நிறுவனத் தலைவர்கள்[தொகு]
குடிசார் பொறியாளர்கள் நிறுவனத்தின் தலைவர்களாகச் சிறந்த பொறியாளர்கள் பலர் பதவியேற்றுள்ளனர். அவர்களுட்சிலர் பின்வருமாறு:-
- தோமசு தெல்வோர்டு (மார்ச்சு 1820-செப்டம்பர் 1834)
- சேம்சு வாக்கர் (சனவரி 1835-சனவரி 1845)
- சான் இரென்னி (சனவரி 1845-சனவரி 1848)
- வில்லியம் கிபிட்டு (திசம்பர் 1849-திசம்பர் 1851)
- சேம்சு மெடோசு இரெண்டெல் (திசம்பர் 1851-திசம்பர் 1853)
- இராபர்ட்டு தீவன்சன் (திசம்பர் 1855-திசம்பர் 1857)
- சோசவு இலாக்கு (திசம்பர் 1857-திசம்பர் 1859)
- சான் இராபின்சன் மெக்கிளீன் (திசம்பர் 1863-திசம்பர் 1865)
- சான் உவோவ்லேர் (திசம்பர் 1865-திசம்பர் 1867)
- தாமசு அவ்க்ச்லே (திசம்பர் 1871-திசம்பர் 1873)
- வில்லியம் என்றி பார்லோ (திசம்பர் 1879-திசம்பர் 1880)
- சோசவு பசல்கேட்டே (திசம்பர் 1883-திசம்பர் 1884)
- சான் கூடே (மே 1889-மே 1891)
- சான் உவோல்வு-பேரி (சூன் 1896-ஏப்பிரல் 1898)
- கில்வோர்டு இலிண்ட்சே மொலேச்வோர்த்து (நவம்பர் 1904-நவம்பர் 1905)
- அலெக்சாண்டர் பின்னி (நவம்பர் 1905-நவம்பர் 1906)
- பசில் மோட்டு (நவம்பர் 1924-நவம்பர் 1925)
- அலெக்சாண்டர் கிபு (நவம்பர் 1936-நவம்பர் 1937)
- வில்லியம் அழ்ச்றோவு (நவம்பர் 1946-நவம்பர் 1947)[4]
விருதுகள்[தொகு]
தங்கப் பதக்கம்[தொகு]
குடிசார் பொறியியலில் பல்லாண்டுகளாகப் பெறுமதி வாய்ந்த பங்களிப்புகளை வழங்கிய தனியாட்களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்படுகின்றது.
கார்த்து வாட்சன் பதக்கம்[தொகு]
ஈடுபாட்டுடன் பெறுமதி மிக்க பணியைக் குடிசார் பொறியாளர்கள் நிறுவனத்துக்கு வழங்கிய குடிசார் பொறியாளர்கள் நிறுவன உறுப்பினர்களுக்குக் கார்த்து வாட்சன் பதக்கம் வழங்கப்படுகின்றது.
புருனெல் பதக்கம்[தொகு]
குடிசார் பொறியியலில் அணிகள், தனியாட்கள், அமைப்புகள் ஆகியவற்றுக்குப் புருனெல் பதக்கம் வழங்கப்படுகின்றது.
எட்மண்டு அம்பலிப் பதக்கம்[தொகு]
பொறியியற்றிட்டத்தில் படைப்புத் திறனுடனான வடிவமைப்புக்கு எட்மண்டு அம்பலிப் பதக்கம் வழங்கப்படுகின்றது.
அனைத்துலகப் பதக்கம்[தொகு]
ஐக்கிய இராச்சியத்துக்கு வெளியில், குடிசார் பொறியியலில் ஈடிணையற்ற பங்களிப்பை வழங்கிய குடிசார் பொறியாளர்களுக்கு அனைத்துலகப் பதக்கம் வழங்கப்படுகின்றது.
வாரன் பதக்கம்[தொகு]
குடிசார் பொறியாளர்கள் நிறுவன உறுப்பினர்கள் அவர்களது இடங்களுக்குச் செய்த பெறுமதி மிக்க பணிகளுக்காக வாரன் பதக்கம் வழங்கப்படுகின்றது.[5]
தெல்வோர்டு பதக்கம்[தொகு]
குடிசார் பொறியாளர்கள் நிறுவனத்தால் ஆய்வுக்காக வழங்கப்படும் உயர்விருது தெல்வோர்டு பதக்கம் ஆகும்.
இதையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ["எங்கள் வரலாறு (ஆங்கில மொழியில்)". 2012-10-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-05 அன்று பார்க்கப்பட்டது. எங்கள் வரலாறு (ஆங்கில மொழியில்)]
- ↑ குடிசார் பொறியாளர்கள் நிறுவனத்தைப் பற்றி (ஆங்கில மொழியில்)
- ↑ ["தலைவர் (ஆங்கில மொழியில்)". 2012-08-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-05 அன்று பார்க்கப்பட்டது. தலைவர் (ஆங்கில மொழியில்)]
- ↑ ["கடந்த தலைவர்கள் (ஆங்கில மொழியில்)". 2010-08-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-05 அன்று பார்க்கப்பட்டது. கடந்த தலைவர்கள் (ஆங்கில மொழியில்)]
- ↑ ["குடிசார் பொறியாளர்கள் நிறுவனத்தையும் தொழிலையும் மேம்படுத்தும் பரிசுகள் (ஆங்கில மொழியில்)". 2012-08-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-05 அன்று பார்க்கப்பட்டது. குடிசார் பொறியாளர்கள் நிறுவனத்தையும் தொழிலையும் மேம்படுத்தும் பரிசுகள் (ஆங்கில மொழியில்)]